History of Tamil Society, related Archaelogical Discoveries Part -1

1) திருநெல்வேலிச்‌ சரித்திரம்‌ என்னும்‌ நூலை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தவர்‌ யார்?

a) இரேனியுஸ்‌ ஐயர்‌
b) எல்லிஸ்‌ துரை
c) கால்டுவெல்‌
d) சீகன்‌ பால்கு ஐயர்‌

2) சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்க:
பண்டைய காலத்‌ தமிழர்களின்‌ வணிக (தொடர்பு நடவடிக்கை) பற்றி பின்வரும்‌ கூற்றில்‌ எது உண்மையானவை?
I) காவிரிப்பூம்பட்டினம்‌, அனுராதாபுரம்‌ என்றும்‌ அழைக்கப்பட்டது.
II) அல்‌ அங்காடி மற்றும்‌ நாள்‌ அங்காடி என்று இரண்டு வகை சந்தை இருந்து வந்தது.
III) பழங்கால தமிழர்களோடு யவனர்கள்‌ வணிகத்‌ தொடர்பு கொண்டிருந்தனர்‌.

a) I மட்டும்‌
b) II மற்றும்‌ III மட்டும்‌
c) I மற்றும்‌ II மட்டும்‌
d) I மற்றும்‌ III மட்டும்‌

3) நிலம்‌ அளப்பதற்கு ஏர், நிவர்த்தனம்‌, பட்டிகை என்ற முறைகள்‌ யாருடைய காலத்தில்‌ கையாளப்பட்டன?

a) சோழர்‌ காலம்‌
b) சேரர்‌ காலம்‌
c) பாண்டியர்‌ காலம்‌
d) பல்லவர் காலம்‌

4) தமிழ்ச்‌ சமூகத்தில்‌ மகளிர்க்குக்‌ கற்பின்‌ குறியீடாக அமையும்‌ மலர்‌ எது?

a) மல்லிகை
b) ரோஜா
c) முல்லை
d) அல்லி

5) சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்‌
i) புதுக்கோட்டை மாவட்டத்தின்‌ பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில்‌ சங்ககால நடுகற்கள்‌ காணப்படுகின்றன.
ii) அரிக்கமேடு என்ற இடம்‌ சங்ககாலத்‌ துறைமுகப்பட்டினம்‌ ஆகும்‌.
iii) இந்திய கருவூலம்‌ மற்றும்‌ புதையல்‌ சட்டம்‌ 1878 இல்‌ வகுக்கப்பட்டுள்ளது
iv) ரோமானிய நாணயங்கள்‌ தென்னிந்தியாவின்‌ திருநெல்வேலி மண்டலத்தில்‌ செறிந்து காணப்படுகின்றன.

a) i, ii மற்றும்‌ iv சரி
b) i, ii மற்றும்‌ iii சரி
c) ii, iii சரி
d) ii மற்றும்‌ iv சரி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.