மாநில அரசு (92 கேள்விகள்) (10வது சமூக அறிவியல்)

 


1.    இந்தியாவில் தற்பொழுது எத்தனை யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளன? 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் 

2.    அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? பகுதி-6 சட்டப்பிரிவு 152 முதல் 237 வரை

3.    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது? 1957நவம்பர் 26 முன்னதாக நவம்பர் 17ஆம் நாள் ஏற்கப்பட்டது.

4.    மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்? ஆளுநர்

5.    ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 154

6.    மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 154 (1)

7.    ஆளுநரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள் ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவி காலம் நீட்டிக்க படலாம்.

8.    ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடாது? அவர் நியமிக்கப்படும் மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது.

9.    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் பணிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம் என கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 158 (3A)

10. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன? சர்க்காரியா குழு

11. சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்து மொத்தம் எத்தனை ஆலோசனைகளை வழங்கியுள்ளது? மூன்றுவித ஆலோசனைகள்

12. ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட தேவையான தகுதிகளை பற்றிக் கூறும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 157 மற்றும் 158

13. ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு? 35 வயது

14. முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களை செயல்படுத்துகிறார் எனக்கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163

15. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்

16. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர்

17. மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்

18. குடியரசு தலைவர் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்பவர் யார்? ஆளுநர்

19. சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றவர் யார்? ஆளுநர்

20. ஆளுநர் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் இலிருந்து எத்தனை உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்கிறார்? ஒரு உறுப்பினர்

21. ஆளுநர் மாநில சட்ட மேலவையில் எத்தனை இடங்களை நியமனம் செய்கிறார்? ஆறில் ஒரு பங்கு உறுப்பினரை நியமனம் செய்கிறார்.

22. மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம் என கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 213

23. ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்குள்

24. மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாருடையது? ஆளுநர்

25. பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் நிதி நிலையை ஆய்வு செய்ய ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கிறார்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

26. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்

27. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர் ஆளுநரின் ஆலோசனையின் பேரில்

28. மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத பொழுது ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கிறார்? எந்த கட்சியையும்ம் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

29. ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 361 (1)

30. மாநில ஆளுநருக்கு எதிராக எந்த நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளை தொடர முடியும்?ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.

31. ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்த அல்லது கைது செய்யவும் அதிகாரம் பெற்ற நீதிமன்றம் எது? ஆளுநர் தனது பதவிக்காலத்தில் இருக்கும் பொழுது எந்த நீதிமன்றமும் கைது செய்ய உத்தரவிட முடியாது.

32. ஆளுநருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடர முடியுமா?முடியாதா? முடியாது.

33.  முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்? மாநில ஆளுநர்.

34. முதலமைச்சரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? நிர்ணயிக்கப்படவில்லை.

35. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? (சுதந்திர இந்தியாவில்)? திரு ஓமந்தூர் ராமசாமி

36. காமராஜர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார்? ஒன்பது ஆண்டுகள் 1954 முதல் 1963 வரை

37. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்? திருமதி ஜானகி ராமச்சந்திரன் ஜனவரி 1988

38. செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்? 1991

39. மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் யார்? முதலமைச்சர்

40. அமைச்சரவை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடிவுகள் எடுப்பவர் யார்? முதலமைச்சர்

41. மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? ஆளுநர்

42. மாநில அமைச்சரவை எதற்கு கூட்டாக பொறுப்பானது? மாநில சட்டமன்றத்திற்கு

43. சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றால் எத்தனை மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்? ஆறு மாத காலத்திற்குள்

44. அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163

45. முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163 (1)

46. மாநில அமைச்சரவையில் அதிகபட்ச எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என அரசியல் அமைப்பு கூறுகிறது? முதல் அமைச்சர் உட்பட மொத்தம் அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு.

47. மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு தாண்டக் கூடாது எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 164 (1A)

48. ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு தருக. கர்நாடகம் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா பீஹார்

49. தமிழக அமைச்சரவையில் அதிகபட்ச அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 36 பேர்

50. ஒரு மாநில சட்டமன்றத்தில் இருக்கவேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு? குறைந்தபட்சம் 60 பேர் அதிகபட்சம் 500 பேர்

51. மாநில மேலவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு? 40-பேர்

52. மாநில சட்ட மேலவையில் இருக்கவேண்டிய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாநில சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மிகாமல் இருக்க வேண்டும்.

53. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? 235 பேர்(234+1)

54. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்? 234

55. சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும் பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது பதவியை தொடர இயலுமா? இயலாது.

56. சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அவருக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்? 14 நாட்களுக்கு முன்பு

57. சட்டமன்றம் கலக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை தொடர இயலுமா? இயலாதா? இயலும் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வரை தொடர இயலும்.

58. மாநில சட்ட மேலவையில் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 குறையாமலும் அதிகபட்சம் சட்டமன்றப் பேரவையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனக்கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 171 (1)

59. விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது எது? சட்டமேலவை

60. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? 6 ஆண்டுகள்

61. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு சட்ட மேலவை கலைக்கப்பட்டது? 1986 நவம்பர் 1

62. ஒருவர் மாநில சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட கொண்டிருக்க வேண்டிய குறைந்த பட்ச வயது எவ்வளவு? 30 ஆண்டுகள்

63. மாநில சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

64. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி 12

65. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? 12 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள்

66. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

67. மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்? ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

68. சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 169

69. ஒரு மாநில சட்ட மேலவையை கலைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்? குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்

70. மாநில சட்ட மேலவையை கலைக்கும் அதிகாரம் பெற்றது எது? நாடாளுமன்றம்

71. பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரம் யாருடையது மத்திய அரசு அல்லது மாநில அரசு? மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு சட்டம் இயற்றும் பொழுது அது செல்லாததாகிவிடும்.

72. நிதி சார்ந்த நடவடிக்கைகளில் வாக்களிக்கும் அதிகாரம் எந்த அவையிடம் உள்ளது? கீழவையிடம் மட்டுமே உள்ளது.

73. கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1862

74. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதி மன்றத்தை நிறுவி நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் எது? ஏழாவது சட்டத்திருத்தம் 1956

75. விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது? 1862 ஜூன் 26

76. உலகிலேயே மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் எங்கு அமைந்துள்ளது? லண்டன் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது பெரிய வளாகம் சென்னை

77. ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் அசாம் நாகலாந்து மணிப்பூர் மிசோரம் மேகாலயா திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது? கௌஹாத்தி அஸ்ஸாம்

78. தனக்கென ஓர் உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ள யூனியன் பிரதேசம் எது? டெல்லி

79. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்

80. இந்தியாவில் தற்பொழுது மொத்தம் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன? 25

81. ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 216

82. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வளவு மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை விசாரிக்க இயலும்? ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை

83. ராணுவ தீர்ப்பாயங்கள் இன் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளதா இல்லையா? இல்லை

84. அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகள் வெளியிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 226

85. கீழ் நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் மீதும் ஆணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை அல்லது மாண்டமாஸ்

86. கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படாமல் தடுக்கும் நீதிப்பேராணை எது? தடை உறுத்தும் நீதிப் பேராணை

87. புதுப் பதவிக்கு தவறாக வரும் ஒருவரை தடுக்கும் நீதிப்பேராணை எது? தகுதி வினவும் நீதிப்பேராணை

88. பதிவேடுகளின் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் நீதிமன்றம் எது?உயர்நீதிமன்றம்

89. மத்திய மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்ட அல்லது முரண்பட்ட தான் என்பதை ஆராய உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம் எது? நீதிபுனராய்வு

90. உயர் நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 226 மற்றும் 227

91. உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை குறைத்த அல்லது தடை செய்த சட்டத்திருத்தம் எது? 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1976

92. எந்த சட்டத்திருத்தம் குறைக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை மீண்டும் வழங்கியது? 43 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1977

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.