1.
மத்திய அரசின் நிர்வாகம் பற்றி
குறிப்பிடும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது?பகுதி-5 சட்டப்பிரிவு 52 முதல்
78 வரை
2.
மாநிலங்களவைக்கு இந்தியாவின்
மாநில சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 238
பேர்
3.
மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? 543 உறுப்பினர்கள்
4.
மாநிலங்களவைக்கு குடியரசுத்
தலைவர் எத்தனை பேரை நியமனம் செய்கிறார் கள்? 12 பேர்
5.
மக்களவைக்கு எத்தனை பேரை குடியரசுத்
தலைவர் நியமிக்கிறார்? 2 ஆங்கிலோ இந்தியர்கள்
6.
குடியரசுத் தலைவர் நேரடியாகவோ
அல்லது அவருடைய சார் நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி
செயல்படுகிறார் என்று கூறும் சட்டப்பிரிவு எது?சட்டப்பிரிவு 53
7.
இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவர் யார்? டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
8.
குடியரசுத் தலைவர் தேர்தலில்
போட்டியிட குறைந்தபட்ச வயது எவ்வளவு? 35 வயது
9.
மத்திய அரசின் நிர்வாக தலைவர்
யார்? குடியரசு தலைவர்
10. முப்படைகளின் தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்? குடியரசுத்
தலைவர்
11. குடியரசுத் தலைவரின் இல்லம் எங்கு அமைந்துள்ளது? ராஷ்டிரபதி பவன்,
புது தில்லி
12. குடியரசுத் தலைவருக்கு இருப்பிடத்தை உடன் கூடிய அலுவலகங்கள் மொத்தம் எத்தனை
உள்ளன? 3 (புதுடெல்லி, ஹைதராபாத் ,சிம்லா)
13. குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி நிலையம் எங்கு அமைந்துள்ளது?ஹைதராபாத்
14. குடியரசுத் தலைவரின் ரிட்ரீட் கட்டடம் எங்கு அமைந்துள்ளது? சிம்லா
15. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவில் மொத்தம் எத்தனை
பேர் முன்மொழிதல் மற்றும் வழி மொழிய வேண்டும்? 10 பேர் முன்மொழிய வேண்டும்.
10 வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும்.
16. குடியரசுத்தலைவர் வாக்காளர் குழுமத்தால் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஒற்றை
மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவம் படி
17. மாநிலங்களவை மற்றும் மக்களவை யில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுமம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வாக்காளர்
குழுமம்
18. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
19. மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 77
20. இந்திய குடியரசு தலைவர்களை வரிசைப்படுத்துக: 1. திரு.ராஜேந்திர பிரசாத்
2.திரு.சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 3. திரு.ஜாகீர் உசேன் 4.வி.வி.கிரி 5. திரு.பக்ருதின்
அலி அகமது 6.திரு.நீலம் சஞ்சீவி ரெட்டி 7.திரு கியானி ஜெயில் சிங் 8. திரு.வெங்கட்ராமன்
9. திரு.சங்கர் தயாள் சர்மா 10. திரு. கே.ஆர் நாராயணன் 11. திரு.அப்துல் கலாம் 12.திருமதி.பிரதீபா
பாட்டில் 13.திரு.பிரணாப் முகர்ஜி 14.திரு ராம்நாத் கோவிந்த்
21. இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பெயர்களை பட்டியலிடுக. ராஜ ராஜ
கிரி பக்கத்துல நீல கலர் ஜெயில் வெங்கட சர்ம நாராயணா.
22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? திருமதி பிரதீபா
பாட்டில் 12 வது குடியரசு தலைவர்
23. இந்தியாவின் தற்போதைய குடியரசுத்தலைவர் யார்? ராம்நாத் கோவிந்த்
14 வது குடியரசு தலைவர்
24. பிரதமரை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
25. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகளை
நியமிப்பவர் யார்? குடியரசு தலைவர்
26. மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
27. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பவர்
யார்? குடியரசுத் தலைவர்
28. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை
நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
29. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிப்பவர் யார்?குடியரசு தலைவர்
30. இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிப்பவர் யார்?குடியரசு
தலைவர்
31. வெளிநாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்களை நியமிப்பவர் யார்? குடியரசுத்
தலைவர்
32. முப்படைகளின் தளபதிகளை நியமனம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர்
33. பொதுத் தேர்தலுக்குப்பின் கூடும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில்
உரையாற்றுபவர் யார்? குடியரசு தலைவர்
34. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு எத்தனை முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்? இரண்டு
முறை
35. நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய யாருடைய ஒப்புதல் தேவை? குடியரசுத்
தலைவர்
36. மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? குடியரசுத் தலைவர்
37. மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை மக்களவையில் சமர்ப்பித்தவர்
யார்? மத்திய நிதியமைச்சர் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பிறகு
38. இந்திய அவசரகால நிதி இணை நிர்வகிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
39. நிதி குழுவினை அமைப்பவர் யார்? குடியரசுதலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை
40. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் பற்றிய குறிப்பிடும்
சட்டப்பிரிவு எது? 72( மன்னிப்பு என்பது இதயத்தை சார்ந்தது இதயம் ஒரு நிமிடத்திற்கு
72 முறை துடிக்கும்)
41. குடியரசுத் தலைவர் மத்திய பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியாக செயல்படுவார்
என கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 53 (2)
42. மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் அதிகாரம்
பெற்றவர்? குடியரசுத் தலைவர்
43. நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத்
தலைவர்
44. மாநில நெருக்கடி நிலையை எந்த சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர்
கொண்டு வருகிறார்? சட்டப் பிரிவு 356
45. குடியரசுத் தலைவர் எந்த சட்டப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி நிலையை
அறிவிக்கிறார்? சட்டப்பிரிவு 360
46. இதுவரை எந்த மாநிலத்தில் அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? கேரளா
மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 9 முறை
47. குடியரசுத் தலைவர் தனது பணித் துறப்பு கடிதத்தை யாரிடம் வழங்க வேண்டும்? துணை
குடியரசு தலைவர்
48. இதுகுறித்து தெரிவித்ததையடுத்து சட்டப்பிரிவு குடியரசுத் தலைவரை பதவி
நீக்கம் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 61
49. குடியரசு தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் தீர்மானமாக
கொண்டு வரும்பொழுது குறைந்தபட்சம் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கவேண்டும்? அவைக்கு
வருகை புரிந்தவர்கள் நான்கில் ஒரு பங்கிற்கு குறையாமல்
50. குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும்
பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
361(1)
51. நமது நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவி எது? துணை குடியரசுத் தலைவர்
சட்டப்பிரிவு 63
52. இந்திய துணை குடியரசுத்தலைவர் எந்த நாட்டின் துணை குடியரசுத் தலைவரின்
பதவிக்கு நிகரான அதிகாரத்தை பெற்றுள்ளார்? அமெரிக்க துணை குடியரசு தலைவர்
53. இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் யார்? டாக்டர் ராதாகிருஷ்ணன்
54. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் எத்தனை
வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்? 35 வயது
55. துணை குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மறைமுக
தேர்தல் மூலம் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தின்
மூலம்
56. துணை குடியரசு தலைவர் தேர்தல் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
66(1)
57. புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் படும்வரை துணை குடியரசுத்
தலைவரின் பணிகளை செய்பவர் யார்? மாநிலங்களவையின் துணைத் தலைவர்
58. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில்
காலியாக இருக்கும் பட்சத்தில் குடியரசுத்தலைவரின் பணிகளை செயலாற்றுபவர் யார்? உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி
59. குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
யார்? நீதிபதி எம் இதயத்துல்லா 1969 ஆம் ஆண்டு
60. துணை குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் கொண்டு வரும்பொழுது குறைந்தபட்சம்
எத்தனை நாட்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்? 14
நாட்களுக்கு முன்னர்
61. குடியரசுத் தலைவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத போது அல்லது உடல்நலக் குறைவாக
இருக்கும் பொழுது அதிகபட்சம் எத்தனை மாதகாலத்திற்கு துணை குடியரசுத் தலைவர் குடியரசுத்
தலைவரின் பணிகளை மேற்கொள்வார்? அதிகபட்சம் ஆறு மாத காலம்
62. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்களிப்பு சமநிலையில்
இருக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம் என கூறும் சட்டப்பிரிவு
எது? சட்டப்பிரிவு 100. இது முடிவு வாக்கு என்றும் அழைக்கப்படும்.
63. குடியரசுத் தலைவருக்கு உதவிடவும் அறிவுரை வழங்கும் விரதம் அமைச்சரை தலைவராகக்
கொண்ட ஒரு மத்திய அமைச்சரவை குழு இருக்கும் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
74(1)
64. இங்கிலாந்தின் நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெஸ்ட்மின்ஸ்டர்
65. இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவி அழகு எந்த ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?இங்கிலாந்தில்
வெஸ்ட் மினிஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில்
66. நாடாளுமன்ற அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் எதற்கு
பொறுப்புடையவர்கள் ஆவர்? மக்களவைக்கு
67. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார் எத்தனை
மாதத்திற்குள் அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்குள்
68. இந்திய பிரதமர்களை பட்டியலிடுக: 1.திரு.ஜவகர்லால் நேரு 2. திரு.லால்
பகதூர் சாஸ்திரி 3 திருமதி.இந்திரா காந்தி 4. திரு.மொரார்ஜி தேசாய் 5. திரு.சரண் சிங்
6.திருமதி இந்திரா காந்தி 7.திரு.ராஜீவ் காந்தி 8. திரு.வி.பி சிங் 9.திரு சந்திரசேகர்
10 திரு.பி.வி.நரசிம்மராவ் 11 திரு.அடல் பிகாரி வாஜ்பாய் 12 திரு.தேவகவுடா 13.
திரு.ஐ.கே. குஜரால் 14.திரு.அடல் பிகாரி வாஜ்பாய் 15.திரு.மன்மோகன் சிங் 16.திரு.நரேந்திர
மோடி
69. பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
78
70. குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல் படுபவர்
யார்? பிரதம அமைச்சர்
71. ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு இருக்க வேண்டும்? பிரதம அமைச்சர் உட்பட 15 சதவீதம் மட்டும்
72. மத்திய அமைச்சர்கள் எத்தனை தர நிலைகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்? 3
தரநிலைகள்
73. நிதி மசோதா யாருடைய பரிந்துரையின்படி மக்களவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?குடியரசுத்தலைவர்
பரிந்துரையின்படி
74. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றவர்
எவ்வாறு அழைக்கப்படுகிறார்? ராஜாங்க அமைச்சர்
75. இந்திய நாடாளுமன்றம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? பகுதி-5
சட்டப்பிரிவு 79 முதல் 122 வரை
76. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது? மூன்று பகுதிகள்
குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
77. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 250 உறுப்பினர்கள்
78. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது எவ்வளவு? 30
வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
79. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? 6 ஆண்டுகள்
80. மாநிலங்களவையின் துணைத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? மாநிலங்களவை
உறுப்பினர்கள் மூலம்
81. மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? தேர்ந்தெடுக்கப்பட்ட
மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ
முறையில்விகிதாச்சார தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.
82. எந்த ஒரு மசோதாவை சட்டமாக்க மாற்றுவதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் தேவை
இல்லை? நிதி மசோதா
83. குடியரசுத்தலைவர் எப்பொழுது மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்திற்கு
அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தை தீர்த்து வைக்கிறார்? ஒரு மசோதா 6 மாதங்களுக்கு
மேல் ஒப்புதல் பெறவில்லை எனில்
84. மாநில அரசு பட்டியலை உருவாக்குக அதிகாரம் யாரிடம் உள்ளது? மாநிலங்களவை
85. மாநிலங்களவை அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற எவ்வளவு
பெரும்பான்மை தேவைப்படுகிறது? மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பெரும்பான்மை
86. நிதி மசோதாவை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு
அதிகாரம் உண்டா இல்லையா? இல்லை
87. மாநிலங்களவை நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்? 14
நாட்கள்
88. மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு? 552 பேர்
89. மக்களவைக்கு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? 13
பேர்
90. தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 545 உறுப்பினர்கள்
91. மக்களவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது எவ்வளவு? 25 வயது
92. மக்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டா இல்லையா? நெருக்கடிநிலை
சட்டத்தின்படி மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும்
பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குடியரசு தலைவர் மக்களவையை கலைக்க முடியும்.
93. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எங்கு அறிமுகப்படுத்தப்படும் மக்களவையில்
அல்லது மாநிலங்களவை?மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
94. தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின்
எண்ணிக்கை எவ்வளவு? 57 பேர். மக்களவை 39 உறுப்பினர்கள். மாநிலங்களவை
18 உறுப்பினர்கள்.
95. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்? மக்களவை
சபாநாயகர்
96. ஒரு மசோதாவை நிதி மசோதா அல்லது சாதாரண மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம்
யாருக்கு உள்ளது? மக்களவை சபாநாயகர்
97. கட்சி தாவல் தடை சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1985
98. கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி குறிப்பிடும் அட்டவணை எது? பத்தாவது
அட்டவணை
99. ஒரு மக்களவை உறுப்பினர் அவர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? மக்களவை சபாநாயகர்
100. நாடாளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது? 3 முறை பட்ஜெட்
கூட்டத்தொடர் மழைக்கால கூட்டத்தொடர் குளிர்கால கூட்டத்தொடர்
101. பட்ஜெட் கூட்டத்தொடர் எப்பொழுது அல்லது எந்த மாதத்தில் நடைபெறுகிறது? பிப்ரவரி
முதல் மே மாதம் வரை
102. மழைக்கால கூட்டத்தொடர் எந்த மாதத்தில் நடைபெறுகிறது? ஜூலை முதல்
செப்டம்பர் வரை
103. குளிர்கால கூட்டத்தொடர் எந்த மாதத்தில் நடைபெறுகிறது? நவம்பர்
மற்றும் டிசம்பர்
104. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழி வகை செய்யும் சட்டப் பிரிவு
எது? சட்டப்பிரிவு 76
105. நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்? இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
106. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்க தகுதி என்ன? ஏதாவது
ஒரு உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாகவும் அல்லது உயர் நீதிமன்றத்தில் 10
ஆண்டுகள் வழக்கறிஞராகவும் அல்லது குடியரசு தலைவரின் பார்வையில் மேம்பட்ட சட்ட வல்லுநராக
இருத்தல் வேண்டும்.
107. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் இன் பதவி காலம் எவ்வளவு? குடியரசுத்தலைவர்
விரும்பும் வரை இவர் பதவியில் நீடிக்கலாம்.
108. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில்
பங்கு கொள்ளும் உரிமை உள்ளதா? பங்கு கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் வாக்களிக்கும்
உரிமை இல்லை.
109. மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் என்று அழைக்கப்படுவது எது? நீதித்துறை
110. புதுதில்லியில் உள்ள இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950
ஜனவரி 28
111. இந்திய உச்சநீதிமன்றம் அமைய வழி வகுத்த சட்டம் எது? இந்திய அரசு
சட்டம் 1935
112. உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமை நீதிபதியின் பதவி காலம் எவ்வளவு?
65 வயது வரை
113. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி விலக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?நாடாளுமன்றம்
114. உச்சநீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் எது? புதுதில்லி
115. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளை
வழங்குகிறது? ஐந்து பேராணைகள்
116. ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம்
யாருக்கு உள்ளது? உச்சநீதிமன்றம்