1.
அரசியலமைப்பு என்ற கொள்கை
முதன்முதலாக எந்த நாட்டில் தோன்றியது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2.
அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம்
எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1946
3.
இந்திய அரசியல் நிர்ணய சபையில்
மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? 389 உறுப்பினர்கள் (மாகாண பிரதி நிதிகள்
292 பேர் சுதேச அரசுகள் 93 பேர் பலுசிஸ்தான் சார்பில் ஒருவர் மாகாண முதன்மை ஆணையர்கள்
சார்பில் மூன்று பேர்)
4.
அரசியல் நிர்ணய சபையின்
முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது? 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள்
5.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத்
தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? டாக்டர். சச்சிதானந்த சின்கா
6.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய
சபையின் தலைவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7.
இந்திய அரசியல் நிர்ணய சபையின்
துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? H C.முகர்ஜி
8.
அரசியல் நிர்ணய சபையின் மொத்தம்
எத்தனை நாட்கள் நடைபெற்றது? 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது
9.
அரசியல் நிர்ணய சபையில் கூட்டத்தின்போது
மொத்தம் எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன? 2473திருத்தங்கள்
10. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
11. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவுகளை விளக்குக? முகவுரை
22 பாகங்கள் 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள் (1950ல்)
12. இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949ஆம்
ஆண்டு நவம்பர் 26ம் நாள்
13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது? 1950-ஆம்
ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள்
14. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் கைப்பட எழுதியவர் யார்? பிரேம்
பெஹாரி நரேன் ரைஜடா
15. அரசியலமைப்பின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது எது? முகவுரை
16. ஜவகர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1947
ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள்
17. முகவுரை எப்பொழுது திருத்தப்பட்டது? 42வது அரசியலமைப்பு சட்டத்
திருத்தம் 1976ம் ஆண்டு
18. 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சேர்க்கப்பட்ட
வார்த்தைகள் யாவை? சமதர்மம் மதச்சார்பின்மை ஒருமைப்பாடு
19. பிரஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது? 1789 ஆம் ஆண்டு
20. குடியுரிமையைப் பற்றி விளக்கும் இந்திய அரசியலமைப்பு பாகம் மற்றும் பிரிவு
எது? பாகம்-2 சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை
21. குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955
22. குடியுரிமை சட்டம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? ஒன்பது
முறை கடைசியாக 2019ஆம் ஆண்டு
23. காமன்வெல்த் குடியுரிமை எந்த ஆண்டு நீக்கப்பட்டது? 2003ஆம்
ஆண்டு
24. இந்திய குடிமகன் ஒருவர் எத்தனை வழிகளில் குடியுரிமையை பெற இயலும்? 5
வழிகள்
25. ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற செய்ய வேண்டியது என்ன? இயல்பு உரிமை
கோரி இந்திய அரசிற்கு விண்ணப்பிப்பதின் மூலம் பெறலாம்
26. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? பகுதி-3 சட்டப்பிரிவு
12 முதல் 35 வரை
27. இந்திய அரசியல் அமைப்பில் தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன? 6
28. இந்தியாவின் மகா சாசனம் என அழைக்கப்படுவது எது? இந்திய அரசியலமைப்பின்
பகுதி 3
29. சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறும் அரசியலமைப்பு பிரிவு எது? சட்டப்பிரிவு
14
30. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
17
31. பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு அளித்தல் பற்றி கூறும் சட்டப்பிரிவு
எது? சட்டப்பிரிவு 16
32. மதம் இனம் சாதி பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை
தடைசெய்யும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 15
33. ராணுவம் மற்றும் கல்விசார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்கள் ஒழிப்பு பற்றி
கூறும் சட்டப்பிரிவு எது? சட்டபிரிவு 18
34. குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பது பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
24
35. கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட
பிரிவு 23
36. எந்த ஆண்டு அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது? 1978
ஆம் ஆண்டு 44 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி
37. சொத்துரிமை தற்போது எந்த சட்டப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது? இந்திய
அரசியலமைப்பின் பகுதி 12 பிரிவு 300A
38. பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு
எது? சட்டப் பிரிவு 19
39. தொடக்க கல்வி பெறும் உரிமையை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
21A
40. சமத்துவ உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
14 முதல் 18 வரை
41. சுதந்திர உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் எது? சட்டப்பிரிவு
19 முதல் சட்டப்பிரிவு 22 வரை
42. சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் எது?சட்டப்பிரிவு
23மற்றும் சட்ட பிரிவு 24
43. சமயச் சார்பு உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
25 முதல் 28 வரை
44. கல்வி கலாச்சார உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 29
மற்றும் 30
45. அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு
எது? சட்டப்பிரிவு 32
46. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம்
எது? கிபி 1715 இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட
உரிமைகள் பட்டயம் அல்லது மகாசாசனம்
47. நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது
ஆணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீதிப்பேராணை
48. அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு
எது? சட்டப்பிரிவு 32
49. இந்திய அரசியல் அமைப்பு எத்தனை விதமான நீதிப்பேராணை களை விளக்குகிறது? 5
நீதிப் பேராணைகள்
50. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது? சட்டப்பிரிவு
32
51. சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கும்
நீதிப்பேராணை எது? ஆட்கொணர் நீதிப்பேராணை அல்லது ஹேபியஸ் கார்பஸ்
52. மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில்
இருந்து நிறைவேற்றிக் கொள்ள பயன்படும் நீதிப்பேராணை எது? கட்டளை உறுத்தும்
நீதிப் பேராணை அல்லது மாண்டமஸ்
53. ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்ட எல்லைகளைத் தாண்டி செயல்படுவதை தடுக்கும்
நீதிப்பேராணை எது? தடையுறுத்தும் நீதிப்பேராணை
54. உயர் நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ
அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை எது? ஆவண கேட்பு பேராணை
55. சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை
தடைசெய்யும் நீதிப்பேராணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
56. அவசர நிலை பிரகடனம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
352
57. அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்படும் பொழுது தாமாகவே செயலிழக்கும்
சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 19ன் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரம்
58. எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை செய்ய இயலாத அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
20 மற்றும் 21 இன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள்
59. அரசின் நெறிமுறை உறுத்தும் கோட்பாடுகள் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு
பகுதி எது? பகுதி-4 சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை
60. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று
பிரிவுகள்
61. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் புதுமையான
சிறப்பம்சம் என்று குறிப்பிடப்படும் பகுதி எது? பகுதி 4 அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
62. 86 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2002
63. எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி பிரிவு 45 திருத்தப்பட்டு
பிரிவு 21Aவின் கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது? 86 வது
சட்டத்திருத்தம் 2002
64. மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு
வழங்க அறிவுறுத்தும் சட்டத்திருத்தம் எது? 86 ஆவது சட்ட திருத்தம் 2002
65. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது? அமெரிக்க
ஐக்கிய நாடுகள்
66. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது? அயர்லாந்து
67. 1976ஆம் ஆண்டுஅடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்யப்பட்ட
கமிட்டி எது? ஸ்வரண் சிங் கமிட்டி
68. அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி அரசியலமைப்பில்
சேர்க்கப்பட்டது? 42 வது சட்டத்திருத்தம் 1976
69. 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட பகுதி எது? பகுதி-4
51A
70. இந்திய அரசியலமைப்பு கூறும் அடிப்படை கடமைகள் மொத்தம் எத்தனை? 11
(11 வது அடிப்படை கடமை 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது)
71. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றிக்
கூறும் அட்டவணை எது? ஏழாவது அட்டவணை
72. தற்பொழுது மத்திய அரசு பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 100
துறைகள்
73. தற்பொழுது மாநில அரசு பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 61
துறைகள்
74. தற்பொழுது பொதுப்பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 52
துறைகள்
75. 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி
மொத்தம் எத்தனை துறைகள் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாறியது? 5துறைகள்
76. 1969ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய தமிழக அரசால்
நியமிக்கப்பட்ட குழு எது? டாக்டர் டிவி ராஜமன்னார் குழு
77. மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்கும் சட்டப்பிரிவு
எது? சட்டப்பிரிவு 268 முதல் 293வரை பகுதி 12
78. சர்க்காரியா குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1983
79. மாநிலங்களுக்கு இடையிலான குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? எந்த குழுவின்
பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது? 1990
80. சர்க்காரியா குழு பரிந்துரைத்த பரிந்துரைகள் மொத்தம் எத்தனை? அவற்றில்
எத்தனை மத்திய அரசு செயல்படுத்தியது? 247 பரிந்துரைகள் 180 பரிந்துரைகள் மத்திய
அரசால் ஏற்கப்பட்டது
81. அலுவலக மொழிகள் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
343 முதல் 351 வரை பகுதி 17
82. முதலாவது மொழி குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1955
83. அலுவலக மொழி சட்டம் எந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது? 1963
84. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன? 22மொழிகள்
85. செம்மொழிகள் என்னும் புதிய வகைபாடு எந்த ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது? 2004
86. இந்தியாவில் தற்போது எத்தனை செம்மொழிகள் உள்ளன? ஆறு செம்மொழிகள்
87. தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? 2004
88. முதன்முதலாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி எது? தமிழ்
89. சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? 2005
90. தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் மொழி ஆகிய மொழிகள் எந்த ஆண்டு செம்மொழியாக
அறிவிக்கப்பட்டது? தெலுங்கு 2008 கன்னடம் 2008 மலையாளம் 2013 ஒடியா 2014
91. இந்தியாவில் மொத்தம் எத்தனை முறை அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது? மூன்றுமுறை
1962 1971 1975
92. அவசர நிலைச் சட்டம் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் இருக்கமுடியும்? மூன்று
ஆண்டுகள்
93. தேசிய அவசர நிலை பிரகடனம் எந்த சட்டப் பிரிவின் கீழ் அமல்படுத்தப்படுகிறது? சட்டப்பிரிவு
352
94. மாநில அவசரநிலை சட்டம் எந்த சட்டப் பிரிவின் கீழ் அமல்படுத்தப்படும்?
சட்டப் பிரிவு 356
95. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி
நடைமுறைப்படுத்தப்பட்டது? பஞ்சாப் 1951
96. நிதி சார்ந்த அவசர நிலை பிரகடனம் எந்த சட்டப் பிரிவின் கீழ் வருகிறது? சட்டப்பிரிவு
360
97. இந்தியாவில் தற்போது வரை மொத்தம் எத்தனை நிதி சார்ந்த அவசர நிலை பிரகடனம்
செயல்படுத்தப்பட்டது? ஒருமுறை கூட இல்லை
98. அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு
368 பகுதி XX
99. அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்ய 368 ஆவது சட்டப்பிரிவு எத்தனை வகைகளை
விளக்குகிறது? மூன்று வகைகள்
100. சிறிய அரசியலமைப்பு என அழைக்கப்படுவது எது? 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
101. 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம்
யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? M.N.வெங்கடாசலயா
102. அரசின் பல்வேறு நிலைகள் அவற்றிற்கு இடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள்
குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு எது? M&M பூஞ்சி
தலைமையிலான குழு