தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள் (136 கேள்விகள்) (10வது சமூக அறிவியல்)


1. ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி எது ? தமிழ்

2. தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1578

3. முழுமையான அச்சகம் யாரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது? சீகன்பால்கு

4. தரங்கம்பாடியில் முழுமையான அச்சகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? 1709

5. திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1812

6. சி வை தாமோதரனார் காலகட்டம் என்ன ? 1832 -1901

7. உ வே சாமிநாதரின் காலகட்டம் என்ன? 1855 - 1942

8. சி வை தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் என்னென்ன? தொல்காப்பியம், வீரசோழியம் , இறையனார் அகப்பொருள் ,இலக்கண விளக்கம் ,கலித்தொகை மற்றும் சூளாமணி

9. உ.வே சாமிநாதர் சீவகசிந்தாமணியை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1887

10. உ.வே சாமிநாதர் பத்துப்பாட்டு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1889

11. உ.வே சாமிநாதர் சிலப்பதிகாரம் எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1892

12. உ.வே சாமிநாதர் புறநானூறு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1894

13. உ.வே சாமிநாதர் புறப்பொருள் வெண்பாமாலை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1895

14. உ.வே சாமிநாதர் மணிமேகலை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1898

15. உ.வே சாமிநாதர் ஐங்குறுநூறு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1903

16. உ.வே சாமிநாதர் பதிற்றுப்பத்து எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 1904

17. புனித ஜார்ஜ் கோட்டையில் 1816ல் கல்லூரியை நிறுவியவர் யார்? F.W.எல்லிஸ்

18. தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை அவை இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? F.W.எல்லிஸ்

19. ராபர்ட் கால்டுவெல்லின் காலம் என்ன? 1814 -1891

20. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் ? ராபர்ட் கால்டுவெல்

21. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1856

22. திராவிட மொழிகளுக்கு இடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதனையும் நிறுவியவர் யார்? ராபர்ட் கால்டுவெல்

23. மனோன்மணியம் நூலை எழுதியவர் யார்? பி சுந்தரனார்

24. சுந்தரனாரின் காலம் என்ன? 1855 - 1897

25. வள்ளலாரின் அழைக்கப்பட்டவர் யார்? ரமலிங்க அடிகள்

26. இராமலிங்க அடிகளாரின் காலகட்டம் என்ன? 1823 -1874

27. ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன? 1859- 1919

28. தமிழிசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்

29. திரு வி கல்யாணசுந்தரனாரின் காலம் என்ன? 1883 - 1953

30. பரிதிமாற்கலைஞரின் காலம் என்ன? 1870 -1903

31. மறைமலை அடிகளின் காலம் என்ன ? 1876 - 1950

32. சுப்பிரமணிய பாரதியின் காலம் என்ன? 1882 -1921

33. ச.வையாபுரியின் காலம் என்ன ? 1891 -1956

34. கவிஞர் பாரதிதாசனின் காலம் என்ன? 1891 - 1964

35. சிங்காரவேலரின் காலம் என்ன? 1860- 1946

36. அயோத்திதாச பண்டிதரின் காலம் என்ன? 1845- 1914

37. பெரியார் ஈ வெ ராமசாமியின் காலம் என்ன? 1879 -1973

38. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன? சூரியநாராயண சாஸ்திரி

39. பரிதிமாற்கலைஞர் எங்கு தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்? சென்னை கிருத்துவக் கல்லூரி

40. "தமிழ் மொழி ஒரு செம்மொழி என்றும் எனவே சென்னை பல்கலைக் கழகம் தமிழை ஒரு வட்டார மொழி என அழைக்க கூடாது" என முதன்முதலாக வாதாடியவர் யார்? பரிதிமாற்கலைஞர்

41. 14 வரிசய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார் ? பரிதிமாற்கலைஞர்

42. பரிதிமாற் கலைஞர் தனது எத்தனையாவது வயதில் இயற்கை எய்தினார் ? 33

43. தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? மறைமலைஅடிகள்

44. தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார் ? மறைமலைஅடிகள்

45. மறைமலை அடிகள் எவற்றிற்கு விளக்க உரை எழுதியுள்ளார்? பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு

46. மறைமலை அடிகள் எந்த பத்திரிக்கையில் பணிபுரிந்துள்ளார்? சித்தாந்த தீபிகா

47. மறைமலை அடிகள் எந்த கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்? சென்னை கிறித்துவக் கல்லூரி

48. மறைமலையடிகளின் ஆசிரியர்கள் யார்? பி. சுந்தரனார் ,சோமசுந்தர நாயகர்

49. மறைமலை அடிகளாரின் மகள் யார்? நீலாம்பிகை

50. மறைமலை அடிகளின் இயற்பெயர் என்ன? வேதாச்சலம்

51. மறைமலையடிகளின் பத்திரிக்கையின் பெயர் என்ன? அறிவுக்கடல் (ஞானசாகரம்)

52. மறைமலை அடிகள் அவருடைய சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனத்தின் பெயரை எவ்வாறு மாற்றினார்? பொதுநிலை கழகம்

53. எந்த ஆண்டு மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது? 1909

54. மதராஸ் ஐக்கிய கழகம் எப்போது உருவாக்கப்பட்டது? 1912

55. மதராஸ் ஐக்கிய கழகத்தை உருவாக்கியவர் யார்? டாக்டர்.சி. நடேசனார்

56. மதராஸ் ஐக்கிய கழகம் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது? மதராஸ் திராவிடர் சங்கம்

57. எப்போது திராவிடர் இல்லம் என்ற ஒரு பெயரில் தங்கும் விடுதி நிறுவப்பட்டது? 1916

58. திராவிடர் இல்லத்தை நிறுவியவர் யார்? நடேசனார்

59. திராவிடர் இல்லம் எங்கு நிறுவப்பட்டது? திருவல்லிக்கேணி சென்னை

60. தென்னிந்திய நல உரிமை சங்கம் எப்போது தொடங்கப்பட்டது? நவம்பர் 20, 1916

61. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க துணை நின்றவர்கள் ? டாக்டர் நடேசனார் ,சர் பிட்டி தியாகராயர், டி எம் நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய தலைவர்கள்

62. பிராமணரல்லாதோர் அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது? 1916 டிசம்பர் விக்டோரியா பொது அரங்கம்

63. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எத்தனை செய்தித்தாள்களை வெளியிட்டது? மூன்று

64. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தமிழில் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன? திராவிடன்

65. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆங்கிலத்தில் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன? ஜஸ்டிஸ்

66. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தெலுங்கில் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன? ஆந்திரப் பிரகாசிகா

67. மாகாண அரசுகளில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் எந்த ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது? 1920

68. இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்த கட்சி எது? நீதிக்கட்சி

69. சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார் ? ஏ.சுப்பராயலு

70. நீதிக்கட்சி எந்தெந்த ஆண்டுகளில் ஆட்சி அமைத்தது? 1920 -1923 மற்றும் 1923 -1926

71. எந்த ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது? 1937

72. எந்த ஆண்டு தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை நீதிக்கட்சி அங்கீகரித்தது? 1921

73. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானவர் யார்? முத்துலட்சுமி அம்மையார்

74. முத்துலட்சுமி அம்மையார் எந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார்? 1926

75. பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்களுக்கும் அரசுப் பணியில் சேருவதற்கு சமமான வாய்ப்புகள் உறுதி செய்யும் பொருட்டு வகுப்புவாரி அரசாணை எப்போது இயற்றப்பட்டன? செப்டம்பர் 11 1921 மற்றும் ஆகஸ்ட் 15 1922

76. அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய எந்த ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது? 1924

77. எந்த ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசு பொது பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது? 1929

78. எந்த ஆண்டு நீதிக்கட்சி இந்து சமய அறநிலைய சட்டத்தை இயற்றியது? 1926

79. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? பெரியார் ஈ வே ராமசாமி

80. பெரியார் எந்த ஊரில் பிறந்தார் ? ஈரோடு

81. பெரியாரின் பெற்றோர் யார்? வெங்கடப்பர்- சின்னத்தாயம்மாள்

82. பெரியார் ஈரோட்டில் நகரசபை தலைவராக பதவி வகித்த ஆண்டு? 1918 -1919

83. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்? பெரியார்

84. சேரன்மாதேவி குருகுலப் பள்ளி யாரால் நடத்தப்பட்டது? வ.வே. சுப்பிரமணியம்

85. பெரியார் எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்? 1925

86. பெரியார் குடியரசு செய்தித்தாளை எந்த ஆண்டு தொடங்கினார் ? 1925

87. ரிவோல்ட் இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 1928

88. புரட்சி இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1933

89. பகுத்தறிவு இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 1934

90. விடுதலை செய்தித்தாள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1935

91. பெரியார் என்ன புனைபெயரில் கட்டுரைகளை எழுதினார்? சித்திர புத்திரன்

92. சாதி ஒழிப்பு (annihilation of caste) எனும் நூலை எழுதியவர் யார்? பி ஆர் அம்பேத்கார்

93. சாதி ஒழிப்பு (annihilation of caste) எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பெரியார் (1936)

94. இந்தி எதிர்ப்பு போராட்டம் இப்போது நடைபெற்றது?  1937 -1939

95. நீதிக்கட்சி எந்த ஆண்டு திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1944

96. பெரியார் தன்னுடைய எத்தனையாவது வயதில் இயற்கை எய்தினார்? (94) 1973

97. திருமணம் செய்து கொடுப்பது என்ற வார்த்தை பெண்ணை பொருட்களாக நடத்துகின்றன எனக் கூறி அதற்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த கூறியவர் யார்? பெரியார்

98. பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல்? எது பெண் ஏன் அடிமையானாள்?

99. தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எப்போது இயற்றப்பட்டது? 1989

100. இரட்டைமலை சீனிவாசன் காலம் என்ன ? 1859 -1945

101. இரட்டைமலை சீனிவாசன் எங்கு எப்போது பிறந்தார்? காஞ்சிபுரம் (1859)

102. இரட்டைமலை சீனிவாசன் என்னென்ன பட்டங்களைப் பெற்றுள்ளார்? ராவ்சாகிப், ராவ் பகதூர் ,திவான் பகதூர்

103. இரட்டைமலை சீனிவாசன் ராவ்சாகிப் எனும் பட்டத்தை எந்த ஆண்டு பெற்றார்? 1926

104. இரட்டைமலை சீனிவாசன் ராவ் பகதூர் எனும் பட்டத்தை எந்த ஆண்டு பெற்றார்? 1930

105. இரட்டைமலை சீனிவாசன் எந்த ஆண்டு திவான்பகதூர் எனும் பட்டத்தை பெற்றார்? 1936

106. இரட்டைமலை சீனிவாசன் எந்த ஆண்டு தனது சுயசரிதை நூலை வெளியிட்டார் ? 1939

107. இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூலின் பெயர் என்ன ? ஜீவிய சரித சுருக்கம்

108. ஆதிதிராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? இரட்டைமலை சீனிவாசன்

109. ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1893

110. இரட்டைமலை சீனிவாசன் எந்த வட்ட மேசை மாநாடுகளில் கலந்துகொண்டார்? 1930 & 1931

111. மயிலை சின்னத்தம்பி ராஜாவின் காலம் என்ன? 1883 -1943

112. எம்சி ராஜா எந்த சங்கம் உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்? தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

113. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் யார் ? எம்.சி .ராஜா

114. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? எம்.சி.ராஜா

115. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1928

116. இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கம் எது? சென்னை தொழிலாளர் சங்கம்

117. சென்னை தொழிலாளர் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1918

118. சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்கள் அமைப்பதில் முயற்சி மேற்கொண்டவர்கள் யார்? பி.பி.வாடியா, ம. சிங்காரவேலர் , திரு வி கல்யாண சுந்தரம்

119. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது? அக்டோபர் 31, 1920 பம்பாய்

120. சிங்காரவேலர் எங்கு பிறந்தார்? சென்னை

121. சிங்காரவேலர் எந்த கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்? சென்னை பல்கலைக்கழகம் சார்ந்த மாநிலக்கல்லூரி

122. சிங்காரவேலு என்னென்ன மொழிகளை கற்று அறிந்திருந்தார்? தமிழ் ,ஆங்கிலம், உருது, இந்தி , ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ரஷ்யன்

123. முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார்? சிங்காரவேலர்

124. சிங்காரவேலர் எப்போது மே தின விழாவை ஏற்பாடு செய்தார்? 1923

125. சிங்காரவேலர் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையை வெளிப்படுத்துவதற்காக என்ன பத்திரிகையை வெளியிட்டார்? தொழிலாளன்

126. சங்கீத வித்தியா மகாஜன சங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்

127. சங்கீத வித்தியா மகாஜன சங்கம் எனும் அமைப்பு எப்போது எங்கு தொடங்கப்பட்டது? 1912, தஞ்சாவூர்

128. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க எந்த ஆண்டு முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது ? 1943

129. தமிழுக்கு மேலாக இந்தியை அறிமுகம் செய்வது திராவிடர் களுக்கான வேலைவாய்ப்புகளை மறுப்பதாக அமையும் எனக் கூறியவர்? பெரியார்

130. இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என சுட்டிக்காட்டியவர் யார்? மறைமலைஅடிகள்

131. WIA என்பதன் விரிவாக்கம் என்ன? (women's India association) உமன்ஸ் இந்தியா அசோசியேஷன்

132. இந்திய பெண்கள் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது? சென்னை அடையாறு பகுதியில் 1917

133. இந்திய பெண்கள் சங்கம் யாரால் தொடங்கப்பட்டது? அன்னிபெசன்ட் ,டோரதி ஜினராஜதாசா, மார்க்ரெட் கசின்ஸ்

134. எந்த ஆண்டு இந்திய பெண்கள் சங்கம் பெண் கல்வி குறித்து பிரச்சினை கையாள்வதற்காக அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது ? 1927

135. மதராஸ் தேவதாசி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ? 1947

136. 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது என்ற மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார் ?  முத்துலட்சுமி அம்மையார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.