தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் (151 கேள்விகள்) (10வது சமூக அறிவியல்)



1.    தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சங்கம் எது? சென்னைவாசிகள் சங்கம்

2.    சென்னைவாசிகள் சங்கத்தை நிறுவியவர் யார்? 1852 இல் லட்சுமி நரசு சீனிவாசனார்

3.    சித்திரவதை சட்டத்திற்கு எதிராக சித்திரவதை ஆணையத்தை நிறுவிய சங்கம் எது? சென்னைவாசிகள் சங்கம்

4.    தேசியவாத பத்திரிகையிலும் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? முத்துசாமி 1877

5.    தி ஹிந்து என்னும் பத்திரிக்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1878

6.    தி ஹிந்து என்னும் பத்திரிக்கையை தொடங்கியவர் யார்? சுப்பிரமணியம் மற்றும் அவர்களின் நண்பர்கள்

7.    சுதேசமித்திரன் என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? சுப்ரமணியம் 1891

8.    சுதேசமித்திரன் என்னும் நாளிதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1899

9.    சுதந்திர போராட்டத்தின் போது சென்னையில் தொடங்கிய முக்கிய பத்திரிகைகள் யாவை? இந்தியன் பேட்ரியாட், சவுத் இந்தியன் மெயில், மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், தேசாபிமானி, விஜயா, சூரியோதயம், இந்தியா

10.    தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பட்ட தொடக்ககால அமைப்பு எது? சென்னை மகாஜன சபை

11.    சென்னை மகாஜன சபை நிறுவப்பட்ட ஆண்டு  எது?1884 மே 16

12.    சென்னை மகாஜன சபையை நிறுவியவர் யார்? வீரராகவாச்சாரி அனந்தாசாரலு, T.ரங்கையா

13.    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் யார்? ரங்கையா நாயுடு

14.    சென்னை மகாஜன சபையின் முதல் செயலர் யார்?அனந்தாசாரலு

15.    தொடக்க கால தேசியவாதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? மிதவாதிகள்

16.    சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் யார்? V S சீனிவாச சாஸ்திரி P Sசிவசாமி V கிருஷ்ணசமி T R வெங்கட்ராமனார் G.A நடேசன் T.M மாதவராவ் மற்றும் S.சுப்ரமணியனார்

17.    பிரம்மஞான சபை மற்றும் சென்னை மகாஜன சபை கூட்டம் எப்போது நடைபெற்றது? 1884

18.    இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? 1885 பம்பாய் 

19.    இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டனர்? 72 பேர் பதில் 22 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

20.    தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்த காங்கிரஸ் தொண்டர் யார்? ஜி சுப்பிரமணியம்

21.    இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு எங்கு நடைபெற்றது? 1886 கல்கத்தா

22.    1886 கல்கத்தா தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்? தாதாபாய் நவரோஜி

23.    இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது? 1887 சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அல்லது மக்கிஸ் தோட்டம்

24.    1887 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்? பக்ருதீன் தியாப்ஜி

25.    வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு எது? 1905

26.    தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப் பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்புவதில் யாருடைய பாடல்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன? சுப்ரமணிய பாரதி

27.    வ உ சிதம்பரனார் தொடங்கிய கப்பல் நிறுவனம் எது? சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்

28.    வ உ சிதம்பரனார் இன் கப்பல் பெயர் யாது? காலியா மற்றும் லாவோ

29.    சுதேசி கப்பல் நிறுவனம் எந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேற்கொண்டது? தூத்துக்குடி மற்றும் கொழும்பு

30.    திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலை தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் யார்? வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா

31.    கோரல் நூற்பாலை வேலை நிறுத்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? வ உ சிதம்பரனார்

32.    சிறையில் செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுபவர் யார்? சிதம்பரனார்

33.    சுதேசி இயக்கத்தின் போது சிறை தண்டனையை தவிர்க்க பாரதியார் சென்ற இடம் எது? பாண்டிச்சேரி

34.    பாரதியாரை தொடர்ந்து பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தவர்கள் யார்? அரவிந்த் கோஷ், V.V. சுப்ரமணியனார்

35.    சுதேசி இயக்கத்தின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசியவாதிகள் பலருக்கும் புரட்சிகர நடவடிக்கைக்கான பயிற்சி எங்கிருந்து பெறப்பட்டது? லண்டன் இந்தியா ஹவுஸ் மற்றும் பாரிஸ்

36.    சுதேசி இயக்க புரட்சிகர பயிற்சி பெற்றவர்கள் முக்கியமானவர்கள் யாவர்?எம் பி.டி ஆச்சார்யா வி.வி சுப்ரமணியனார் மற்றும் டி .எஸ்.எஸ் ராஜன்

37.    சுதேசி இயக்கத்தின் போது பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த செய்தித்தாள்கள் யாவை? இந்தியா விஜயா சூர்யோதயம்

38.    பாரத மாதா சங்கம் நிறுவியவர் யார்? நீலகண்ட பிரம்மச்சாரி 1904

39.    1911ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் W D E  ஆஷ் என்பவனை சுட்டுக்கொன்றவர் யார்? மாவீரர் வாஞ்சிநாதன்

40.    மாவீரர் வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்ற இடம் எது? மணியாச்சி ரயில் நிலையம்

41.    தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார் 1916

42.    அன்னிபெசன்ட் அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்? அயர்லாந்து 

43.    ஆங்கில அரசிடம் தன்னாட்சி கோரிய இந்தியர்கள் யாவர்? அருண்டெல், B.P வாடியா மற்றும் C.P.ராமசாமி

44.    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டி சிறந்தது என்று கூறிய புரட்சிகர சிந்தனையாளர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

45.    அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய செய்தித்தாள் எது? நியூ இந்தியா மற்றும் காமன்வீல்

46.    இந்தியா ஒரு தேசம் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

47.    விடுதலை பெற இந்தியா எப்படி துயருற்றது என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

48.    பத்திரிக்கைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1910

49.    சுயாட்சி குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

50.    அன்னிபெசன்ட் அம்மையார் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு எது? 1917 இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் இவர் இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் ஆவார். சரோஜினி நாயுடு அவர்கள் இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் ஆவார்.

51.    தொழிற்சங்கம் அமைத்த தன்னாட்சி அமைப்பை சேர்ந்த உறுப்பினர் யார்? B.P வாடியா

52.    பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து அவர்களை சாரணர் இயக்க குழுக்களாகவும் தொண்டர் குழுக்களாகவும் மாற்றி அமைத்த இயக்கம் எது? தன்னாட்சி இயக்கம்

53.    சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1912

54.    சென்னை திராவிடர் கழகத்தின் முதல் செயலர் யார்? C.நடேசனார்

55.    பிராமணரல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்கம் தங்கும் விடுதியை நிறுவியவர் யார்? சி.நடேசனார் 1916

56.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? 1916 விக்டோரியா அரங்கு

57.    தென்னிந்திய நல உரிமை சங்கத்தை நிறுவியவர் யார்? தியாகராயர், T M நாயர்  சி.நடேசனார்

58.    தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆங்கில பத்திரிக்கை யாது? ஜஸ்டிஸ்

59.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட தமிழ் பத்திரிகை யாது? திராவிடன்

60.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட தெலுங்கு பத்திரிக்கை யாது? ஆந்திரப் பிரகாசிகா

61.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது?நீதிக்கட்சி

62.    பாராளுமன்ற அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் யார்? மாண்டேகு 1917

63.    பிராமணர் அல்லாதோருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் எது? மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் 1919

64.    1920 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியது? 98 இடங்களில் 63 இடங்கள்

65.    தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? A.சுப்பராயலு

66.    1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? பனகல் அரசர்

67.    பணியாளர் தேர்வுக் குழு நிறுவப்பட்ட ஆண்டு எது?  1924

68.    பொதுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1929

69.    இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1926

70.    சென்னை அரசு தொழில் உதவிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

71.    தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1930

72.    புரட்சி குற்றச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1919 ரவுலட் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.

73.    1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை கறுப்புச் சட்டம் என அழைத்தவர் யார்? காந்தியடிகள்

74.    சென்னை சத்யாகிரக சபை நிறுவப்பட்ட ஆண்டு எது? 1919

75.    மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? ஜார்ஜ் ஜோசப்

76.    தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரை சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர் யார்?ஜார்ஜ் ஜோசப்

77.    ரோசாப்பூ துரை என்று மதுரை மக்களால் அழைக்கப்பட்டவர் யார்? ஜார்ஜ் ஜோசப்

78.    மதுரை தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் யார்? ஜார்ஜ் ஜோசப் 1918

79.    ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான கொடூரன் யார்? ஜெனரல் டயர்

80.    துருக்கியின் கலீபா பதவியை மீட்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது? கிலாபத் இயக்கம்

81.    கிலாபத் நாள் கடைபிடிக்கப்பட்ட தினம் எது? 1920 ஏப்ரல் 17 

82.    யாருடைய தலைமையில் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது? மௌலானா சௌகத் அலி தலைமையில்

83.    கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளில் முக்கிய மையமாகத் திகழ்ந்த இடம் எது? வாணியம்பாடி

84.    முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்? யாகூ ஹசன்

85.    தமிழ்நாட்டில் வரிகொடா இயக்கம் தீவிரமாக நடைபெற்ற இடம் எது? தஞ்சாவூர்

86.    வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்ட நாள் எது? 1922 ஜனவரி 13

87.    சௌரி சௌரா சம்பவம் நிகழ்ந்த ஆண்டு எது? 1922 ஜூன் 5

88.    சேரன்மாதேவி குருகுல பள்ளியை நிறுவியவர் யார்? வி வி சுப்ரமணியனார்

89.    சுயராஜ்ய கட்சியை உருவாக்கியவர் யார்? சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு

90.    தமிழ்நாட்டில் சுயராஜ்யக் கட்சியின் தலைமை ஏற்றவர் யார்? எஸ் சீனிவாசனார் மற்றும் சத்தியமூர்த்தி

91.    1926 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சராக பதவி ஏற்றவர் யார்? சுயேச்சை வேட்பாளர் சுப்பராயன்

92.    நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது? 1927

93.    நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? திருநெல்வேலியை சேர்ந்த எஸ் என் சோமையாஜுலு

94.    1937 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் ஆட்சி அமைந்தது? ராஜாஜி

95.    இந்திய சட்டப் பூர்வ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1927

96.    இந்திய சட்டப் பூர்வ ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர் ஜான் சைமன்

97.    சென்னையில் சைமன் குழு வருகை எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? எஸ் சத்தியமூர்த்தி

98.    சைமன் குழு சென்னைக்கு வருகை புரிந்த ஆண்டு எது? 1929 பிப்ரவரி 18

99.    1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னை

100.    லாகூர் காங்கிரஸ் மாநாடு எப்பொழுது நடைபெற்றது? 1929

101.    1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் யாது? பூர்ண சுயராஜ்யம்

102.    1930 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி எங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது? ராவி நதிக்கரையில் ஜவகர்லால் நேரு அவர்களால்

103.    தண்டி யாத்திரை அல்லது சட்ட மறுப்பு இயக்கம் அல்லது உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்ட தினம் எது? 1930 மார்ச் 12

104.    தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்? ராஜாஜி திருச்சி முதல் வேதாரண்யம் வரை

105.    தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற நாள் எது? 1930 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 28 வரை

106.    தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடல் எது? கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

107.    கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்னும் பாடலை பாடியவர் யார்? நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

108.    தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் யார்? T S S ராஜன், திருமதி.ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C.சாமிநாதர் மற்றும் K.சந்தானம்

109.    ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு உப்புச் சட்டத்தை மீறியவர்கள் எத்தனை பேர்? 12 பேர்

110.    உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது சென்னையில் உதயவனம் அருகே முகாம் அமைத்து போராடியவர்கள் யார்? T.பிரகாசம் K.நாகேஸ்வரராவ்

111.    உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்? திருமதி ருக்மணி லட்சுமிபதி

112.    1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா என அழைக்கப்பட்ட பாஷ்யம் அவர்கள்

113.    கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டவர் யார்? திருப்பூர் குமரன் ஓ கே எஸ் ஆர் குமாரசாமி

114.    திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்த நாள் எது? 1932 ஜனவரி 11

115.    மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த சட்டம் எது? இந்திய அரசாங்க சட்டம் 1935

116.    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சி புரிந்த ஆண்டு எது? 1937

117.    தமிழ்நாட்டில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி

118.    தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுவிலக்கு எங்கு அமல்படுத்தப்பட்டது? சேலம்

119.    தமிழ்நாட்டில் முதன் முதலாக மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார்?ராஜாஜி

120.    தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகம் செய்தவர் யார்? ராஜாஜி

121.    ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைகாரர் களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக்குழு அமைக்க முயற்சி மேற்கொண்டவர் யார்? டி.பிரகாசம்

122.    கிராமப்புற குத்தகைதாரர்கள் இன் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட வாரியம் எது? கடன் சமரச வாரியம்

123.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது? 1939

124.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் யாரால் திட்டமிடப்பட்டது? மதுரை அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர் மற்றும் செயலர் கோபால்சாமி

125.    கோவில் நுழைவு அங்கீகார இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1939

126.    முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? ஈ.வே.ரா தலைமையில் சேலம்

127.    இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சிறையில் மரணமடைந்தார் போராட்டக்காரர்கள் யார்? தாளமுத்து மற்றும் நடராஜன்

128.    வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 1942 ஆகஸ்ட் 8

129.    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகள் பயன்படுத்திய புகழ்பெற்ற வாசகம் எது? செய் அல்லது செத்து மடி

130.    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடன் இராணுவத்துடன் மோதியவர்கள் யார்? மதுரை காங்கிரஸ் தொண்டர்கள்

131.    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? P.ரங்கையா நாயுடு

132.    இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்

133.    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியை சிறந்தது எனக் கூறியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

134.    கீழ் காண்பவன் அவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது? ஜஸ்டிஸ்

135.    கீழ்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்? எஸ் சத்தியமூர்த்தி

136.    சென்னைக்கு அருகேயுள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்? T. பிரகாசம்

137.    இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது? சேலம்

138.    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? மதுரை

139.    சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்? T.முத்துசாமி

140.    தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை அம்பலப்படுத்தியவர் யார்? ஜி.சுப்பிரமணியம்

141.    நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு எது? பாரதமாதா சங்கம்

142.   சென்னையில் தொழிற்சங்கங்களை தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?  திரு வி கா

143.    பிராமணரல்லாத மாணவர்களுக்காக தங்கும் விடுதியின் நிறுவியவர் யார்? C.நடேசனார்

144.    சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி

145.    முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை உருவாக்கியவர் யார்? யாகூப் ஹாசன்

146.    1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா(பாஷ்யம்)

147. சென்னை வாசிகள் சங்கம் -நீல் சிலையை அகற்றுதல் 

148. ஈ.வெ.ரா -வைக்கம் வீரர் 

149.சோமயாஜுலு -சித்திரவதை ஆணையம் 

150.வேதாரண்யம் -உப்பு சத்தியாக்கிரகம் 

151.தாளமுத்து- இந்தி எதிர்ப்புப் போராட்டம்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.