இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு (241 கேள்விகள்) (10வது சமூக அறிவியல்)

1. இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு ? ஏழாவது

2. இந்திய ஆசிய கண்டத்தின் எத்தனையாவது பெரிய நாடு? இரண்டாவது

3. இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு?  32,87,263 ச.கி.மீ

4. இந்தியாவின் நிலப்பரப்பு புவியில் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்? 2.4 சதவீதம்

5. இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீள நில எல்லைகளைக் கொண்டுள்ளது? 15,200 கி.மீ

6. மேற்கு மற்றும் வடமேற்கில் இந்தியா எந்த நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது? பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

7. வடக்கில் இந்தியா தனது எல்லையை எந்த நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளது? சீனா நேபாளம் பூட்டான்

8. கிழக்கில் இந்தியா தனது எல்லைகளை எந்த நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது? வங்காளதேசம் மற்றும் மியான்மர்

9. இந்தியா எந்த நாட்டுடன் தனது அதிகபட்சமான நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது? வங்காளதேசம்

10. வங்காள தேசத்துடன் இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீளமுள்ள நில எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது?  4156 கிலோமீட்டர்

11. இந்தியா குறுகிய எல்லையாக எந்த நாட்டுடன் தனது நில எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது?  ஆப்கானிஸ்தான்

12. ஆப்கானிஸ்தானுடன் இந்தியா எத்தனை கிலோமீட்டர் நில எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது? 106 கிலோ மீட்டர்

13. இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியை கொண்டுள்ளது? 6100 கிலோமீட்டர்

14. இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக்கூட்டங்களிலும் சேர்த்து எத்தனை கிலோமீட்டர் ஆகும்? 7516.6 கிலோமீட்டர்

15. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதிக்கு என்ன பெயர்? பாக் நீர் சந்தி

16. எந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக் கண்டம் என அழைக்கப்படுகிறது? பாகிஸ்தான்,மியான்மர் வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை

17. இயற்கை நில அமைப்பு காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளை கொண்டுள்ளதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது? துணைக்கண்டம்

18. இந்தியாவின் வட அட்சரேகை எது வரை பரவியுள்ளது? 80 4mins முதல் 370 6mins வரை

19. இந்தியாவின் கிழக்கு தீர்க்க ரேகை எது வரை பரவியுள்ளது? 680 7mins முதல் 970 25 mins வரை

20. அட்ச தீர்க்க பரவல் படி இந்தியா முழுமையும் எந்த கோளத்தில் அமைந்துள்ளது? வடகிழக்கு அரைக்கோளம்

21. இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலங்கள் எவை? குஜராத் மற்றும் அருணாச்சலப் பிரதேசம்

22. மேற்கில் தொடங்கி கிழக்கு வரை இந்தியா எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது? 30 தீர்க்க கோடுகள்

23. புவியானது 10 தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு? நான்கு நிமிடங்கள்

24. இந்தியாவின் மேற்கே உள்ள குஜராத்திலிருந்து கிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் இடையே உள்ள தீர்க்க கோடுகள் எவ்வளவு? 29018mins

25. இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் இடையே உள்ள தல நேர வேறுபாடு எவ்வளவு? ஒரு மணி 56 நிமிடம் 12 வினாடிகள்

26. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை எவ்வளவு? 82030mins

27. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை எதன் வழியாக செல்கிறது? மிர்சாபூர் (அலகாபாத்)

28. இந்திய திட்ட நேரமானது கிரீன்விச் சராசரி நேரத்தைவிட எவ்வளவு முன்னதாக உள்ளது? 5 மணி 30 நிமிடம்

29. இந்தியாவின் தென்கோடி பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? இந்திரா முனை

30. இந்திரா முனை முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? பிக்மெலியன்

31. இந்திரா முனை அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டத்தில் எந்த அட்சரேகையில் அமைந்துள்ளது? 60 45mins வட அட்சம்

32. இந்திய நிலப் பகுதியின் தென்கோடி எது? குமரிமுனை

33. இந்திய நிலப் பகுதியின் வடமுனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? இந்திரா கோல்

34. இந்திரா கோல் எங்கு அமைந்துள்ளது? ஜம்மு-காஷ்மீர்

35. இந்தியா வடக்கே காஷ்மீரில் உள்ள இந்திரா கோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை எத்தனை கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது? 3214 கிலோமீட்டர்

36. மேற்கே குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை இந்தியா எத்தனை கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது? 2933 கிலோமீட்டர்

37. இந்தியாவின் மையமாக அமைந்து தென் பகுதியை வெப்ப மண்டலமாகவும் வடபகுதியை மிதவெப்ப மண்டலமாகவும் இரு பெரும் பகுதிகளாக பிரிப்பது? கடகரேகை 230 30mins

38. இந்தியா எத்தனை மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது? 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்

39. ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் எது? அமராவதிநகர்

40. எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்? 2024

41. இந்தியாவின் இயற்கை அமைப்பு எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? 6

42. இந்தியாவின் இயற்கை அமைப்பின் பிரிவுகள் என்னென்ன? இமயமலைகள், பெரிய இந்திய வட சமவெளிகள், தீபகற்ப பீடபூமிகள், இந்திய பாலைவனம், கடற்கரைச் சமவெளிகள், தீவுகள்

43. உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் எது? இமயமலை

44. இமய மலைகள் மேற்கு சிந்து பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை எத்தனை கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ளது? 2500 கிலோமீட்டர்

45. இமய மலைகள் காஷ்மீர் பகுதியில் எத்தனை கிலோ மீட்டர் அகலத்துடன் காணப்படுகிறது? 500 கிலோமீட்டர்

46. இமயமலைகள் 200 கிலோ மீட்டர் அகலத்துடன் எங்கு காணப்படுகிறது? அருணாச்சல் பிரதேசம்

47. உலகின் கூரை என அழைக்கப்படுவது எது? பாமீர் முடிச்சு

48. பாமீர் முடிச்சுலிருந்து கீழ்நோக்கி இமயமலை என்ன வடிவத்தில் அமைந்துள்ளது? வில்

49. இமாலயா என்ற சொல் எந்த மொழி சொல்? சமஸ்கிருதம்

50. இமாலயா என்பதன் பொருள் என்ன? பனி உறைவிடம் (abode of snow)

51. இமயமலையை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? 3

52. இமயமலையின் மூன்று பெரும் உட்பிரிவுகள் என்னென்ன? ட்ரான்ஸ் இமயமலைகள், இமயமலைகள் அல்லது மத்திய இமயமலைகள், கிழக்கு இமயமலை அல்லது பூர்வாஞ்சல் குன்றுகள்

53. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது? ஆரவல்லி மலைத்தொடர்

54. ட்ரான்ஸ் இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படும்? மேற்கு இமயமலைகள்

55. ட்ரான்ஸ் இமயமலைகள் எங்கு அமைந்துள்ளது? ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமி

56. ட்ரான்ஸ் இமயமலைகள் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? திபெத்தியன் இமயமலை

57. ட்ரான்ஸ் இமயமலைகள் மேற்கு மற்றும் கிழக்கு மலைகளில் எத்தனை கிலோமீட்டர் அகலத்தில் காணப்படுகிறது? 40 கிலோமீட்டர்

58. ட்ரான்ஸ் இமயமலைகள் மையப்பகுதியில் எத்தனை கிலோ மீட்டர் அகலத்துடன் காணப்படுகிறது? 225 கி.மீ

59. ட்ரான்ஸ் இமயமலைப் பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் என்ன? டெர்சியரி கிரானைட் பாறைகள்

60. ட்ரான்ஸ் இமயமலையில் உள்ள முக்கியமான மலைத் தொடர்களில் எவை? சாஸ்கர், லடாக், கைலாஷ் மற்றும் காரகோரம்

61. எந்த இரு நிலப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது இமயமலை உருவானது? வடக்கே இருந்த அங்காரா நிலப்பகுதி தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதி

62. இரண்டு நிலங்களுக்கும் இடையே இருந்த எந்த கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது? டெத்தீஸ்

63. மத்திய இமயமலை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ? மூன்று

64. மத்திய இமயமலையின் மூன்று பிரிவுகள் என்னென்ன? பெரிய இமயமலைகள் /இமாத்ரி, சிறிய இமயமலைகள்/ இமாச்சல், சிவாலிக்/ வெளி இமயமலை

65. பெரிய இமயமலைகள்/இமாத்திரியின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் எவ்வளவு? அகலம் 25 கிலோ மீட்டர், உயரம் 6000 மீட்டர்

66. இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன? இமாத்திரி

67. இமாத்திரி மலைத்தொடரில் என்ன பணியாறுகள் காணப்படுகின்றன? கங்கோத்ரி, சியாச்சின்

68. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? நேபாளம் 8848 மீட்டர்

69. காட்வின் ஆஸ்டின் /k2 சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? இந்தியா 8611 மீட்டர்

70. கஞ்சன் ஜங்கா சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? இந்தியா 8586 மீட்டர்

71. மக்காலு சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? நேபாளம் 8481 மீட்டர்

72. தௌலகிரி சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? நேபாளம் 8172 மீட்டர்

73. நங்கபர்வதம் சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? இந்தியா 8126 மீட்டர்

74. அன்ன பூர்ணா சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? நேபாளம் 8078 மீட்டர்

75. நந்தாதேவி சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? இந்தியா 7817 மீட்டர்

76. காமெட் சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம் இந்தியா 7756 மீட்டர்

77. நம்ச பர்வதம் சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? இந்தியா 7782 மீட்டர் (2019 புத்தகத்தில் 7756 மீட்டர் )

78. குருலா மருதாத்தா சிகரம் அமைந்துள்ள நாடு மற்றும் உயரம்? நேபாளம் 7728 மீட்டர்

79. உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களில் எத்தனை சிகரங்களை இமயமலை தன்னகத்தே கொண்டுள்ளது? ஒன்பது சிகரங்கள்

80. வெண்கற்பாறைகள், சுண்ணாம்பு பாறைகள் மற்றும் மணப்பாறைகள் எந்த மலைத்தொடர்களில் காணப்படுகின்றன? சிறிய மலைகள் அல்லது இமாச்சல் மலைத்தொடர்

81. இமாச்சல் மலைத்தொடர் சராசரி அகலம் எவ்வளவு ? 80 கிலோமீட்டர்

82. இமாச்சல் மலைத்தொடரின் சராசரி உயரம் எவ்வளவு ? 3500 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரை

83. இமாச்சல் மலைத்தொடரில் காணப்படும் மலைகள் என்னென்ன? பீர்பாஞ்சல்,தவ்லதார் மற்றும் மகாபாரத்

84. புகழ்பெற்ற கோடை வாழிடங்கள் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன? சிறிய இமயமலைகள் அல்லது இமாச்சல் மலைத்தொடர்

85. சிறிய இமயமலைகள் அல்லது இமாச்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள கோடை வாழிடங்கள் என்னென்ன? சிம்லா, முசௌரி,நைனிடால், அல்மோரா,ரானிகட் மற்றும் டார்ஜிலிங்

86. காரகோரம் கணவாய் எங்கு அமைந்துள்ளது ? ஜம்மு-காஷ்மீர்

87. ஜொசிலா கணவாய்,சிப்கிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது? இமாச்சல் பிரதேசம்

88. பொமிடிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது? அருணாச்சல பிரதேசம்

89. நாதுலா மட்டும் ஜெலிப்லா கணவாய் எங்கு அமைந்துள்ளது? சிக்கிம்

90. பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் பெயர் என்ன? கைபர் கணவாய்

91. ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ள மலைத்தொடர் எது? சிவாலிக் அல்லது வெளி இமயமலை

92. சிவாலிக் அல்லது வெளி இமயமலையின் உயரம் எவ்வளவு? 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை

93. சிவாலிக் மலைத்தொடரின் சராசரி உயரம் எவ்வளவு? 1000 மீட்டர்

94. சிவாலிக் மலைத்தொடர் மற்றும் வெளிப்புற இமயமலைக்கு இடையில் குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. இவை கிழக்குப் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படும்? டூயர்ஸ் (Duars)

95. சிவாலிக் மலைத்தொடர் மற்றும் வெளிப்புற இமயமலைக்கு இடையில் குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. இவை மேற்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படும்? டூன்கள்

96. இமய மலையின் கிழக்கு கிளை மலைத்தொடர்களில் பெயர் என்ன? பூர்வாஞ்சல் குன்றுகள்

97. எந்தெந்த குன்றுகள் இணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகிறது? டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள்

98. காஷ்மீர் பஞ்சாப் இமாச்சல் இமயமலைகள் இந்த இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ளன? சிந்து மற்றும் சட்லெஜ்

99. குமாயூன் இமய மலைகள் எந்த இரு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளன? சட்லெஜ் மற்றும் காளி

100. மத்தியநேபாள இமய மலைகள் எந்த இரு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளன? காளி மற்றும் திஸ்தா

101. அசாம் கிழக்கு இமய மலைகள் எந்த இரு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளன? திஸ்தா மற்றும் திகாங்

102. உலகிலேயே வளமான சமவெளியாக உள்ளது எது? வட பெரும் சமவெளிகள்

103. வடபெரும் சமவெளியின் நீளம் எவ்வளவு? 2400 கிலோமீட்டர்

104. வடபெரும் சமவெளி எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது? ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர்

105. இமயமலை ஆறுகளால் படிய வைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆன சமவெளி எது? பாபர் சமவெளி

106. எந்த சமவெளியில் நுண்துளைகள் அதிகமாக உள்ளதால் அதன் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன ? பாபர் சமவெளி

107. சிவாலிக் குன்றுகளின் பின்புறம் மேற்கிலிருந்து கிழக்காக எந்த சமவெளி அமைந்துள்ளது? பாபர் சமவெளி

108. அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும் காடுகள் வளர்வதற்கும் பல்வேறுவிதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ள சமவெளி எது? தராய் மண்டலம்

109. பாபர் சமவெளிப் பகுதிக்கு தெற்கில் அமைந்துள்ள மண்டலம் எது ? தராய் மண்டலம்

110. தராய் மண்டலம் எத்தனை கிலோமீட்டர் அகலம் கொண்டது? 15 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை

111. மேட்டு நில வண்டல் படிவுகள் கொண்ட நிலத் தோற்றத்தோற்றத்தின் பெயர் என்ன? பாங்கர்‌ சமவெளி

112. எந்த சமவெளியின் படிவுகள் அனைத்தும் பழைய வண்டல் மண்ணால் ஆனவை? பாங்கர்‌ சமவெளி

113. எந்த சமவெளி கருமை நிறத்துடன், வளமான் இலைமக்குகளைகா கொண்டும் நல்ல வடிகாலமைப்பையும் கொண்டுள்ளதால் இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது? பாங்கர்‌ சமவெளி

114. ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படிய வைக்கப்படும் புதிய வண்டல்மண் எவ்வாறு அழைக்கப்படும்? காதர் (அ) பெட் நிலம்

115. காதர்‌ மணல், களிமண் சேறு மற்றும் வண்டலை கொண்ட வளம்மிக்க சமவெளி எது? காதர் சமவெளி

116. ராஜஸ்தான் சமவெளியின் பரப்பளவு எவ்வளவு? 1,75,000 சதுர கிலோமீட்டர்

117. ராஜஸ்தான் சமவெளி எந்த ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ளது? லூனி மற்றும் மறைந்துபோன சரஸ்வதி

118. சாம்பார் ஏரியின் வேறு பெயர் என்ன? புஷ்கர் ஏரி

119. சாம்பார் ஏரி இதன் அருகில் அமைந்துள்ளது? ஜெயிப்பூர், இராஜஸ்தான் சமவெளி

120. பஞ்சாப் அரியானா சமவெளியின் பரப்பளவு எவ்வளவு? 1,75,000 சதுர கிலோமீட்டர்

121. இந்திய பாலைவனத்தில் வடகிழக்கே அமைந்துள்ள சமவெளி எது? பஞ்சாப் ஹரியானா சமவெளி

122. பஞ்சாப் ஹரியானா சமவெளி எந்த ஆறுகளால் ஏற்படும் படிவுகளால் உருவானது? சட்லெஜ் பியாஸ் மற்றும் ராவி

123. கங்கைச் சமவெளியின் பரப்பளவு எவ்வளவு? 3.75 சதுர லட்சம் கி.மீ

124. கங்கைச் சமவெளி எந்த ஆறுகளால் உருவாக்கப்பட்டது? கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளான காக்கரா,காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா

125. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? அசாம்

126. டெல்டா சமவெளிப் பகுதிகள் எவ்வளவு பரப்பளவை கொண்டது? 1.9 லட்சம் சதுர கிலோமீட்டர்

127. வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? சார்ஸ்

128. வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? பில்ஸ்

129. தீபகற்ப பீடபூமி எவ்வளவு பரப்பளவைக் கொண்டுள்ளது? 16 லட்சம் சதுர கிலோமீட்டர்

130. தீபகற்ப பீடபூமியின் பெரும் பகுதி கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தைக் கொண்டுள்ளது? 600 மீட்டர்

131. தீபகற்ப பீடபூமியின் மிக உயரமான சிகரம் எது? ஆனைமுடி

132. ஆனைமுடி சிகரத்தின் உயரம் என்ன? 2695 மீட்டர்

133. எந்த ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கின்றது? நர்மதை ஆறு

134. தீபகற்ப பீடபூமியின் வட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மத்திய உயர் நிலங்கள்

135. தீபகற்ப பீடபூமியின் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தக்காண பீடபூமி

136. மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் என்னென்ன? நர்மதை மற்றும் தபதி

137. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது? குருசிகார் 1722மீ

138. தீபகற்ப பீடபூமி மேற்குப் பகுதியில் உள்ள மத்திய உயர் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாளவப் பீடபூமி

139. மாளவ பீடபூமியின் கிழக்கு தொடர் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? பண்டல்கண்ட்

140. மாளவ பீடபூமியின் கிழக்கு தொடர் பகுதியின் தொடர்ச்சியை எவ்வாறு அழைக்கப்படும்? பாகல்கண்ட்

141. மத்திய உயர் நிலங்களின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பீடபூமி எது? சோட்டா நாகபுரி பீடபூமி

142. தோராயமாக முக்கோண வடிவம் கொண்ட பீடபூமி எது? தக்காண பீடபூமி

143. தக்காண பீடபூமியின் பரப்பளவு எவ்வளவு? 7 லட்சம் சதுர கிலோமீட்டர்

144. தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்புப் பகுதியில் காணப்படும் மலைத்தொடர் என்ன? மேற்கு தொடர்ச்சி மலைகள்

145. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சயாத்ரி

146. மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்ல செல்ல என்னவாகிறது? அதிகரிக்கிறது

147. எந்த மலைகள் சந்திக்கும் பகுதியில் ஆனைமுடி சிகரம் அமைந்துள்ளது? ஆனைமலை, ஏலக்காய் மலை மற்றும் பழனி மலை

148. மலைவாழ் இடமான கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? பழனி மலை

149. தீபகற்ப பீடபூமியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடர்? கிழக்கு தொடர்ச்சி மலை

150. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பூர்வாதிரி

151. கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் எங்கு ஒன்றிணைகின்றன? நீலகிரி மலை

152. தார் பாலைவனத்தின் பரப்பளவு என்ன? 2 லட்சம் சதுர கிலோ மீட்டர்

153. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனம்? 17வது

154. உபஅயன மண்டல பாலைவனங்களில் உலக அளவில் எத்தனையாவது பெரிய பாலைவனமாக தார் பாலைவனம் அமைந்துள்ளது? ஒன்பதாவது

155. ராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப் பரப்பைக் கொண்டுள்ள தார்பாலைவனம் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? மருஸ்தலி

156. அரைப் பாலைவனப் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்? பாங்கர்

157. இந்திய கடற்கரை சமவெளிகளை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்? 2

158. இந்திய கடற்கரை சமவெளிப்பகுதிகளின் பிரிவுகள் என்னென்ன? மேற்கு கடற்கரை சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரை சமவெளி

159. வடக்கில் உள்ள ரானாப்கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு உள்ள கடற்கரை பகுதி என்ன? மேற்கு கடற்கரை சமவெளி

160. மேற்கு கடற்கரையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொங்கணக் கடற்கரை

161. மேற்கு கடற்கரையின் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மலபார் கடற்கரை

162. மலபார் கடற்கரையின் நீளம் எவ்வளவு? 550 கிலோமீட்டர்

163. வேம்பநாடு ஏரி இந்த பகுதியில் உள்ளது? மலபார் கடற்கரை

164. கிழக்கு கடற்கரை சமவெளிப்‌ பகுதிகளில் மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? வட சர்க்கார்

165. கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சமவெளிப்‌ பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சோழமண்டல கடற்கரை

166. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை எது? சென்னையில் உள்ள மெரினா கடற்கரை

167. இந்தியாவின் மிகப் பெரிய காயல் ஏரி எது? சிலிகா ஏரி

168. கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள ஏரி எது? கொல்லேறு ஏரி

169. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் என்ன ஏரி அமைந்துள்ளது? பழவேற்காடு

170. அந்தமான் நிக்கோபார் எத்தனை தீவுகளைக் கொண்டுள்ளது? 572 தீவுகள்

171. லட்சத்தீவுகள் எத்தனை தீவுக்கூட்டங்களைஇஅ கொண்டுள்ளது? 27

172. இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை எங்கு உள்ளது? பாரன் தீவு

173. பாரன் தீவு எங்கு உள்ளது? அந்தமான் நிக்கோபார்

174. அரபுக் கடலில் உள்ள இலட்சத்தீவுகள் என்ன பாறைகளால் உருவானவை? முருகை பாறைகள்

175. கடலடி மலைத் தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ள தீவுக்கூட்டங்கள் என்ன? அந்தமான் நிக்கோபார் தீவுகள்

176. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பரப்பளவு எவ்வளவு? 8249 ச.கி.மீ

177. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வடபகுதி தீவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? அந்தமான்

178. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகத் தலைநகரம் எது? போர்ட் பிளேயர்

179. அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவு கூட்டங்களில் இருந்து எந்த கால்வாய் பிரிக்கின்றது? 100 கால்வாய்

180. நிக்கோபாரின் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? இந்திரா முனை

181. லட்சத்தீவுகளின் பரப்பளவு எவ்வளவு? 32 சதுர கிலோமீட்டர்

182. லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைநகரம் எது? காவரத்தி

183. லட்சத்தீவு கூட்டங்களை எந்த கால்வாய் மாலத்தீவில் இருந்து பிரிக்கிறது? 80 கால்வாய்

184. லட்சத்தீவுகளிலுள்ள மனிதர்கள் வசிக்காத தீவின் பெயர் என்ன? பிட் தீவு

185. லட்சத்தீவிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு பெயர்பெற்ற இடம் எது? பிட் தீவு

186. லட்சத்தீவு, மினிக்காய் மற்றும் அமினி தீவு கூட்டங்களை எந்த ஆண்டு முதல் லட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது? 1973

187. முதன்மை ஆறுகளும் துணை ஆறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ அல்லது ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலுக்கு பெயர் என்ன? வடிகாலமைப்பு

188. முதன்மை ஆறுகளும் துணை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? வடிகால் கொப்பரை

189. இந்தியாவின் அமைவிட அடிப்படையில் வடிகாலமைப்பு எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? 2

190. இந்தியாவின் அமைவிட அடிப்படையில் பிரிக்கப்பட்ட வடிகாலமைப்பின் பிரிவுகள் என்னென்ன? இமய மலையில் தோன்றும் ஆறுகள், தீபகற்ப இந்திய ஆறுகள்

191. இமய மலையில் தோன்றும் ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? வற்றாத ஜீவநதிகள்

192. சிந்து நதியின் மொத்த நீளம் எவ்வளவு? 2850 கிலோ மீட்டர்

193. சிந்து நதி இந்திய பகுதியில் மட்டும் எத்தனை கிலோமீட்டர் பாய்கிறது? 709 கிலோ மீட்டர்

194. சிந்து நதி எங்கு உற்பத்தியாகிறது? மானசரோவர் ஏரி, கைலாஷ் மலை தொடர் திபெத்பகுதி

195. சிந்து நதியின் துணை ஆறுகள் என்னென்ன? ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்

196. சிந்துநதியின் மிகப்பெரிய துணை ஆறு எது? செனாப்

197. இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பைக் கொண்ட ஆறு எது? கங்கை

198. கங்கையாறு என்ன பெயரில் உற்பத்தியாகிறது? பாகிரதி

199. பாகிரதி எங்கு உற்பத்தி ஆகிறது? கங்கோத்ரி பனியாறு, உத்தர்காசி,உத்தர்காண்ட்

200. கங்கை ஆற்றின் நீளம் எவ்வளவு? 2525 கிலோமீட்டர்

201. வடபகுதியிலிருந்து கங்கையில் கலக்கும் துணை ஆறுகள் என்னென்ன? கோமதி, காக்ரா, கண்டாக்,  காசி

202. தென்பகுதியிலிருந்து கங்கை ஆற்றில் கலக்கும் துணையாறுகள் என்னென்ன? யமுனை, சோன், சாம்பல்

203. வங்கதேசத்தில் கங்கை என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? பத்மா

204. எந்த இரு ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கியுள்ளன? கங்கை மற்றும் பிரமபுத்திரா

205. பிரம்மபுத்திரா ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? செம்மாயுங்டங் பனியாறு, மானசரோவர் ஏரி, திபெத்

206. பிரம்மபுத்ரா திபெத் பகுதியில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? சாங்போ

207. சாங்போ என்றால் பொருள் என்ன? தூய்மை

208. பிரம்மபுத்திரா ஆறு எந்த மாநிலத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது? திகாங் மலை இடுக்கு, அருணாச்சல் பிரதேசம்

209. பிரம்மபுத்ராவின் துணையாறுகள் என்னென்ன? திஸ்டா,மனாஸ்,பராக், சுபன்ஸ்ரீ 

210. பிரம்மபுத்திரா வங்காளதேசத்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? ஜமுனா

211. கங்கை ஆற்றுடன் பிரம்மபுத்ரா இணைந்து பிறகு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மேக்னா

212. தீபகற்ப இந்திய ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள்

213. மகாநதி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? சிகா, ராய்ப்பூர், சத்தீஸ்கர்

214. மகாநதி எத்தனை கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது? 851 கிலோமீட்டர்

215. மகாநதியின் முக்கிய துணையாறுகள் எவை ? சீநாத்,டெலன்,சந்தூர்,சித்ரட்லா,கெங்குட்டி மற்றும் நன்

216. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான நதி எது? கோதாவரி

217. கோதாவரி நதியின் நீளம் எவ்வளவு? 1465 கிலோமீட்டர்

218. கோதாவரி நதி எங்கு உற்பத்தி ஆகிறது ? மேற்கு தொடர்ச்சி மலை, நாசிக் ,மகாராஷ்டிரா

219. கோதாவரி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விருத்தகங்கா

220. கோதாவரி ஆற்றின் துணை ஆறுகள் எவை? பூர்ணா,பென்கங்கா, பிரணிதா, இந்திராவதி,தால் மற்றும் சாலாமி

221. கோதாவரி நதி ராஜமுந்திரி க்கு அருகில் என்ன இரண்டு கிளைகளாக பிரிகிறது? கௌதமி மட்டும் வசிஸ்தா

222. கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி? கொல்லேறு ஏரி

223. கிருஷ்ணா நதி எங்கு உற்பத்தி ஆகிறது? மகாபலேஷ்வர், மகாராஷ்டிரா

224. கிருஷ்ணா நதியின் நீளம் எவ்வளவு ? 1400 கிலோமீட்டர்

225. தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதி எது? கிருஷ்ணா

226. கிருஷ்ணா நதியின் துணையாறுகள் என்னென்ன ? கொய்னா, பீமா, முசி,துங்கபத்ரா மற்றும் பெடவாறு

227. கிருஷ்ணா நதி எந்த இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது? ஹம்சலாதேவி

228. காவிரி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? தலைக்காவிரி ,குடகு மலை ,கர்நாடகா

229. காவிரியின் நீளம் எவ்வளவு? 800 கிலோமீட்டர்

230. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் நதி எது ? காவேரி

231. காவிரி நதியின் துணை ஆறுகள் என்னென்ன? ஹரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, அர்காவதி, நொய்யல், அமராவதி

232. காவிரி கர்நாடகாவில் என்ன ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறது? சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம்

233. காவிரி எங்கு கொள்ளிடம் மற்றும் காவேரி என இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது? ஸ்ரீரங்கம்

234. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் என்னென்ன? நர்மதை,மாஹி மற்றும் தபதி

235. நர்மதை எங்கு உற்பத்தி ஆகிறது? அமர்கண்டக் பீடபூமி, மத்திய பிரதேசம்

236. நர்மதை ஆறு எத்தனை கிலோ மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது? 1312 கிலோமீட்டர்

237. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமானது எது ? நருமதை

238. நர்மதையின் ஆறுகளின் துணை ஆறுகள் என்னென்ன ? பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர்,தூதி, சர்க்கார், டவா மற்றும் கோலர்

239. தபதி ஆறு எத்தனை கிலோமீட்டர் நீளத்தை கொண்டுள்ளது? 724 கிலோமீட்டர்

240. தபதி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? முல்டாய்,பெட்டூல் மாவட்டம்,மத்திய பிரதேசம்

241. தபதியின் துணை ஆறுகள் என்னென்ன? வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.