திரிகடுகம் [7th Old Tamil Book] |
---|
ஆசிரியர் குறிப்பு: திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
• இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருந்து என்னும் ஊரினர் என்பர்.
• இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடு வதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நூல் குறிப்பு: திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம். • இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும். நூல் பயன் : திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும். |
ஏலாதி [10th Old Tamil Book] |
---|
ஆசிரியர் குறிப்பு: ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
• இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு இவர், சமண சமயத்தவர் என்பர். • இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார். • இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார். நூற்குறிப்பு : பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று. • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. • நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது. • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது. • ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர். • இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நாலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும். • இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. |
Online Test
Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong