ந.பிச்சமூர்த்தி (9th New Tamil Book) |
---|
• புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
• பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுகிறார். • புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். • ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார். • ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார். • இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். • இவரின் முதல் சிறுகதை - ஸயன்ஸுக்கு பலி என்பதாகும். • 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். • பிக்ஷ, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார். |
Online Test
Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong