TNPSC MODEL TAMIL QUESTION PAPER - 7

TNPSC (பொதுத்தமிழ்) –
1.இவற்றுள் இந்தியாவில் பேசப்படாத மொழிக் குடும்பம்
(A) இந்தோ – ஆரிய மொழிகள்
(B) திராவிடமொழிகள்
(C ) காகேசியன் மொழிகள்
(D)ஆஸ்டிரிக மொழிகம்
2.தமிழில் கலந்துள்ள மராத்திச் சொற்கள்
(A) நாஸ்தா, லுங்கி
(B) சேமியா, கிச்சடி
(C) சம்சா, பூரி
(D) கைதி, வசூல்
3.இரண்டாம் மொழி என்று கூறப்படுவது
(A) தாய்மொழி அல்லாத மொழி
(B) பேச்சு மொழி
(C) ஆங்கிலம்
(D) இந்தி
4.பின்னிஷ், துருக்கி, மங்கோலியம் முதலிய மொழிகள் திராவிட மொழியோடு தொடர்பு கொண்டவை எனக் கூறியவர்?
(A)டட்டில்
(B) கால்டுவெல்
(C) மால்பின்
(D) பொற்கோ
5.துளு மொழி இன்று எந்தமொழி எழுத்தால் எழுதப்படுகிறது?
(A)தமிழ்
(B)தெலுங்கு
(C) கன்னடம்
(D) மலையாளம்
6.கல்வெட்டுக்களில் காணப்படும் தொண்மையான எழுத்து
(A)ஓவிய எழுத்து
(B) கிரந்த எழுத்து
(C) பிராமி எழுத்து
(D) வட்டெழுத்து
7 எட்டுத்தொகை நூல்களுள் அகநூல்கள் எத்தனை?
(A) 5
(B) 2
(C) 8
(D) 10
8. லீலாதிலகம் – என்ற நூல், எந்தெந்த நாட்டு வழக்காறுகளையும், உச்சரிப்பையும் காட்டுகிறது?
(A) பாண்டியநாட்டு, சோழ நாட்டு வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும்
(B) பாண்டிய நாட்டு, சேரநாட்டு வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும்
(C) சோழநாட்டு, சேர நாட்டு வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும்
(D) சேர நாட்டு வழக்காறுகளையும் பாண்டிய நாட்டு வழக்காறுகளையும்,
9 “வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கினி தென்று
உண்பவோ நீருண் பவர் – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) ஐங்குறுநூறு
(D) கலித்தொகை
10.”நெல்லொடு நாழி கொண்டநறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி துஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டி விரிச்சி நிற்ப- இப்பாடவடிகள் இடம் பெறும் நூல்.
(A) முல்லைப் பாட்டு
(B) நெடுநல்வாடை
(C) குறிஞ்சிப் பாட்டு
(D) பட்டினப்பாலை
11. ஐங்குறுநூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர்
(A) சி.வை. தாமோதரம் பிள்ளை
(B) உ.வே.சாமிநாத ஐயர்
(C) சு.துரைசாமிப்பிள்ளை
(D) நச்சினார்க்கினியர்
12 ‘பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு – என்ற வழக்காற்றில் கணக்கு என்பதன் பொருள்
(A) எண்
(B)எண்ணிக்கை
(C) நூல்
(D) பாட்டு
13.”இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைசிறந்தவர்” – என்று தனிநாயக அடிகளாரால் போற்றப்படுபவர்
(A) பாணர்
(B) கபிலர்
(C) நல்லந்துவனார்
(D) நப்பூதனார்.
14.’ஐந்திணை எழுபது’ ஆசிரியர் யார்?
(A) மாறன் பொறையனார்
(B) மூவாதியார்
(C) கண்ணன் சேந்தனார்
(D) கணிமேதாவியார்
15.”யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” -இப்பாடலடிகள் இடம் பெற்ற சங்க நூல்
(A) புறநானூறு.
(B) அகநானூறு
(C) பட்டினப்பாலை
(D) மதுரைக்காஞ்சி
16.நற்றிணை இலக்கியத்தைத் தொகுப்பித்த மன்னன்
(A) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
(B) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
(C) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
(D) செல்வக் கடுங்கோ வாழியாதன்
17.பத்துப்பாட்டில் அடி அளவில் சிறிய பாட்டு
(A) குறிஞ்சிப் பாட்டு
(B) முல்லைப்பாட்டு
(C) பட்டினப்பாலை
(D) மதுரைக்காஞ்சி
18. அகநானூற்றுத் திணைப் பாடல்களை எண் முறைப்படி பொருத்துக
(a) குறிஞ்சி 1. 4, 14, 24, 34
(b) பாலை 2. 2,8,12,18
(c) முல்லை 3. 6,16,26,36
(d) மருதம் 4. 1,3,5,7
(a) (b) (c) (d)
(A) 4 2 3 4
(B) 2 3 4 1
( C) 3 4 1 2
(D) 2 4 1 3
19.ஐங்குறுநூறு யாரால் தொகுக்கப்பட்டது?
(A) பூரிக்கோ
(B) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
(C) கூடலூர் கிழார்
(D) நல்லந்துவனார்
20. பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) திருமுருகாற்றுப்படை 1. மாங்குடி மருதனார்
(b) சிறுபாணாற்றுப்படை 2. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(c) பெரும்பாணாற்றுப்படை 3.நத்தத்தனார்
(d) மதுரைக்காஞ்சி 4.நக்கீரர்
(a) (b) (c) (d)
(A) 4 1 3 2
(B) 1 3 4 2
( C) 4 3 2 1
(D) 4 2 3 1
21.”களவழி நாற்பது” என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
(A) கூடலூர் கிழார்
(B) மாறன் பொறையனார்
(C) பொய்கையார்
(D) மதுரைக் கண்ணன் கூத்தனார்
22. நாளங்காடி, அல்லங்காடி பற்றிக் கூறும் நூல்?
(A) நெடுநல்வாடை
(B) மதுரைக் காஞ்சி
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
23.”காரி உண்டிக் கடவுள்” —இத்தொடர் குறிப்பிடும் கடவுள்
(A) சிவன்
(B) திருமால்
(C) இந்திரன்
(D) முருகன்
24.”நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே….” என்று காதலின் அளவினை எடுத்துரைக்கும் நுல்
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) ஐங்குறுநூறு
25. பொருத்துக
பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்கள் பாடிய புலவர்கள்
(a) களாங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 1. பெருங்குன்றூர்க்கிழார்
(b) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் 2. காப்பியாற்றுக் காப்பியன்
(c) செல்வக்கடுங்கோ வாழியாதன் 3. கபிலர்
(d) இளஞ்சேரல் இரும்பொறை 4. பரணர்
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 4 2 1 3
( C) 3 4 1 2
(D) 1 4 3 2
26. ஆற்றுப்படை நூல்களுள் அடியளவில் பெரியது
(A) திருமுருகாற்றுப்படை
(B) சிறுபாணாற்றுப்படை
(C) கூத்தராற்றுப்படை
(D) பெரும்பானாற்றுப்படை
27. “திருமுருகாற்றுப்படை” என்ற நூலை இயற்றியவர்
(A) நப்பூதனார்
(B) நக்கிரர்
(C) முடத்தாமக்கண்ணியார்
(D) நத்தத்தனார்
28.”உண்பது நாழி உடுப்பவை இரண்டே” – என்ற பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல்
(A) மதுரைக் காஞ்சி
(B) பரிபாடல்
(C) புறநானூறு
(D) பதிற்றுப்பத்து
29.’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற அடி இடம் பெற்றுள்ள நூல்
(A) திருக்குறள்
(B) நாலடியார்
(C) பழமொழி நானூறு
(D) ஆசாரக் கோவை
30. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
(A) 70
(B) 25
(C) 38
(D) 40
31. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I.திருக்குறளை நச்சினார்க்கினியர் ‘திருவள்ளுவப்பயன்’ என்று குறிப்பிடுகின்றார்.
II.திருக்குறளைச் சிறப்பிக்கும் பழம் பெயர்களுள் ஒன்று ‘உத்தரவேதம்’ என்பதாகும்
III. திருக்குறள் பெருமுத்தரையர்களைப் பற்றிக் கூறுகிறது.
IV. திருக்குறளின் பொருட்பால் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
(A) I, II மற்றும் IV சரியானவை
(B)II, III மற்றும் IV சரியானவை
(C) I மற்றும் II சரியானவை
(D) III மற்றும் IV சரியானவை
32.பொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) சோமேசர் முதுமொழி வெண்பா 1. வேதநாயகம் பிள்ளை
(b) பெண்மதிமாலை 2.சிவஞானமுனிவர்
(c) உலக நீதி 3.ஔவையார்
(d) கொன்றை வேந்தன். 4.உலகநாத பண்டிதர்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 1 4 3
( C) 3 1 4 2
(D) 4 3 2 1
33. பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – இக்குறட்பாவின் “நயன் தூக்கின்” எனும் சொல்லின் பொருள் யாது?
(A) குற்ற உறவு ஆராய்தல்
(B) தீமையைப் பொறுத்தல்
(C) பண்பினை ஆராய்தல்
(D) நன்மையின் பெருமையை ஆராய்தல்
34. கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
எனும் அடிகள் இடம் பெறுவது
(A) திருக்குறள்
(B) நாலடியார்
(C) நான்மணிக்கடிகை
(D)ஏலாதி
35. திரிகடுகம் நூலின் ஆசிரியர் பெயர் என்ன?
(A) கணிமேதாவியார்
(B) விளம்பிநாகனார்
(C) பூதஞ்சேந்தனார்
(D) நல்லாதனார்
36 ‘பொருத்தாத இணையினைத் தெரிவு செய்க
(A) வெல்வது வேண்டின் வெகுளிவிடல் – நான்மணிக்கடிகை
(B) நெஞ்சம் அடங்குதல் வீடாகும் – திரிகடுகம்
(C) தமக்கு மருத்துவர் தாம் – பழமொழி
(D) முதலிலார்க கூதியமில் – ஆசாரக்கோவை
37. “அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாகி” – என்று இறைவனைப் பாடியவர்
(A) பொய்கையாழ்வார்
(B) பூதத்தாழ்வார்
(C) பேயாழ்வார்
(D) பெரியாழ்வார்
38. “கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ” என்று வெண் சங்கிடம் திருமாலின் வாய்ச்சுவையும், நாற்றமும் குறித்து கேட்டவர்
(A) ஆண்டாள்
(B) திருமங்கையாழ்வார்
(C) நம்மாழ்வார்
(D) மதுரகவியாழ்வார்
39. பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள தொகையடியார்களின் எண்ணிக்கை
(A) ஆறு
(B) ஒன்பது
(C) ஏழு
(D) பன்னிரண்டு
40. பட்டாபிரான் என்னும் பட்டம் பெற்றவர்
(A) மதுரகவியாழ்வார்
(B) குலசேகர ஆழ்வார்
(C) நம்மாழ்வார்
(D) பெரியாழ்வார்
41. “தமிழோடு இசைப்பாடல் மறுந்தறியேன்” என்று பாடியவர்
(A) சம்பந்தர்
(B)மாணிக்கவாசகர்
(C) சுந்தரர்
(D) திருநாவுக்கரசர்
42. பெண்கள் நெல் குற்றும் போது பாடுகின்ற பாட்டிற்குப் பெயர்
(A) வள்ளைப்பாட்டு
(B) அம்மானை
(C) ஊசல்வரி
(D)கழங்கு
43 “சும்மா இருப்பதே சுகம்” என்று கூறியவர்
(A) இராமலிங்க அடிகள்
(B)அருணகிரியார்
(C) தாயுமானவர்
(D) சிவப்பிரகாசர்
44. “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே” — என்று பாடியவர்
(A) சுந்தார்.
(B) திருநாவுக்கரசர்
(C) திருஞானசம்பந்தர்
(D) மாணிக்கவாசகர்
45. ”எல்லோரும் எல்லாம் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை” என்று கூறியவர்
(A)சேக்கிழார்
(B) கச்சியப்ப சிவாச்சாரியார்
(C) நல்லூர் வீரகவிராயர்
(D) கம்பர்
46. கந்தபுராணத்தின் ஆசிரியர்
(A) பரஞ்சோதி முனிவர்
(B) கச்சியப்பர் சிவாச்சாரியார்
(C) நல்லூர் வீரகவிராயர்
(D) கொங்குவேனிர்
47. யசோதர காவியத்தில் வரும் யசோதரனின் தந்தை பெயர்
(A) சச்சந்தன்
(B) அசோகன்
(C) மாரிதத்தன்
(D) காளன்
48. மருதநில நூலாகக் கருதப்படும் சிற்றிலக்கியம்
(A) குறவஞ்சி
(B)தூது
(C) பள்ளு
(D) பரணி
49. மீனாட்சியம்மை குறம் பாடியவர்
(A) திரிகூடராசப்பக் கவிராயார்
(B) குமரகுருபரர்
(C) மீனாட்சி
(D) நந்திவர்மன்
50. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
இப்பாடல் வரிகள் இடம்பெறும் நூல்
(A) திருக்குற்றாலக் குறவஞ்சி
(B)சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
(C) தோழி விடு தூது
(D) மயில்விடு தூது
51.காலத்தால் முந்திய கலம்பக நூல்
(A) மதுரைக் கலம்பகம்
(B) நந்திக்கலம்பகம்
(C) கச்சிக்கலம்பகம்
(D) தில்லைக் கவம்பகம்
52.கலம்பகத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
(A) 2
(B) 10
(C) 18
(D) 4
53. கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய பள்ளு
(A) திருவாரூர் பள்ளு
(B) திருமலைப்பள்ளு
(C) முக்கூடற்பள்ளு
(D) குருகூர்ப்பள்ளு
54.முக்கூடற்பள்ளு – என்ற நூலின் ஆசிரியர்
(A) பள்ளன்
(B) ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை
(C) புகழேந்திப் புலவர்
(D) பள்ளி
55. எந்த நில மக்களைப் பற்றிப் பள்ளு இலக்கியம் பாடப்பட்டது?
(A) மருதம்
(B) குறிஞ்சி
(C) முல்லை
(D) நெய்தல்
56. நாம மாலை- என்பதன் விளக்கம்
(A) கண்களைச் சிறப்பித்துப் பாடுவது
(B) பெண்களைப் புகழ்ந்து பாடுவது
(C) தலைமக்களைப் புகழ்ந்து பாடுவது
(D) மாலையைப் பற்றிப் பாடுவது
57. “கோவை” நூல்களில் முதல் கோவை நூல்
(A) திருக்கோவையார்
(B) பாண்டிக்கோவை
(C)தஞ்சைவாணன் கோவை
(D) திருத்தலக்கோவை
58.”அற்புதத் திருவந்தாதி” – யைப் பாடியவர்
(A) காரைக்கால் அம்மையார்
(B) திருஞான சம்பந்தர்
(C) மாணிக்கவாசகர்
(D) திருநாவுக்கரசர்.
59. பன்னிருபாட்டியல் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,
(A)எழுத்தியல், செல்லியல் பொருளியல்
(B) எழுத்தியல், சொல்லியல், இனவியல்
(C) சொல்வியல், தொடரியல், பொதுவியல்
(D) எழுத்தியல் பொருளியல் பாவியல்
60. தும்பைப் போரில் தேருக்கு முன்னே ஆடிச் செல்வது வீரர்கள்.
வாகைத் திணையில் தேருக்கு முன்னே ஆடிச் செல்வது —————
(A) விறலியர்
(B) பாணர்
(C) துடியர்
(D) பேய்கள்
61.-தான், – தாம் ஆகிய சொற்கள்
(A) உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள்
(B) பகிர்வுப் பதிலிடு பெயர்சுள்
(C) தற்கட்டுப் பதிலிடு பெயர்கள்
(D)முழுமைப் பதிலிடு பெயர்கள்
62. செய்யுள் ஈட்டச் சொற்கள் (எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவன)
(A) செந்தமிழ்ச் சொல், கொடுந்தமிழ்ச்சொல் பைந்தமிழ்ச்சொல் தீந்தமிழ்ச் சொல்
(B) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
(C) பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
(D) பெயர்ச்சொல், வினைச்சொல், அசைச்சொல், வடசொல்
63. பொருத்துக:
(a) வெட்சி 1. பேய்நிலை
(b) காஞ்சி 2. அவிப்பலி
(c) தும்பை 3. வேய்
(d) வாகை 4. நூழிலாட்டு
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 3 4 1
( C) 1 3 2 4
(D) 4 2 1 3
64. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
(A) உவமை அணி
(B) உருவக அணி
(C) வேற்றுமை அணி
(D) தீவக அணி
65. ‘தீவகம்’ என்னும் சொல்லின் பொருள்
(A) மாலை
(B) சங்கு
(C) விளக்கு
(D) அணிகலன்
66. ஐந்து அடியைச் சிற்றெல்லையாகக் கொண்டு பல அடிகளால் பாடப் பெறுவது
(A) சிந்தியல் வெண்பா
(B) நேரிசை வெண்பா
(C)இன்னிசை வெண்டா
(D) பஃறொடை வெண்பா
67. முதன்முதலில் மேடையில் நடிக்கப் பெற்ற சமூக நாட்கம்
(A) மத்தவிலாச பிரகசனம்
(B) டம்பாச்சாரி
(C) சுந்திரவிலாசம்
(D)அரிச்சந்திர விலாசம்
68. உவேசா அவர்களின் ஆசிரியர் யார்?
(A) எஸ்.வையாபுரிப் பிள்ளை
(B)வை.மு. கோபால் கிருஷ்ணமாச்சாரியார்
(C) பண்டிதமணி மு.கதிரேசசெட்டியார்
(D) மீனாட்சி சந்தரம் பிள்ளை
69. மு.வரதராசனின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவல்
(A) கரித்துண்டு
(B) அகல் விளக்கு
(C) பெற்ற மனம்
(D)கள்ளோ காவியமோ
70. கல்கி எழுதிய முதல் வரலாற்று நாவல்
(A) விமலா
(B) பார்த்திபன் கனவு
(C) பொன்னியின் செல்வன்
(D)சிவகாமியின் சபதம்
71. ஜெயகாந்தன் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் சரியானவை எவை?
I. ஜெயகாந்தன் எழுதிய நாவல்களுள் ஒன்று ‘பாரிசுக்குப் போ
II. ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்னும் நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
III. ஜெயகாந்தன் சிறுகதை ஜாம்பவான்’ என்று புகழப்படுகிறார்.
IV. ஜெயகாந்தன் துப்பரியும் நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளார்
(A) I மற்றும் II சரியானவை
(B) II மற்றும் III சரியானவை
(C) III மற்றும் IV சரியானவை
(D) I மற்றும் III சரியானவை
72. ‘மான விஜயம்’ என்ற ஓரங்க நாடகத்தின் ஆசிரியர்
(A) பேரசிரியர் சுந்தரம்பிள்ளை
(B) வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி
(C) சங்கரதாஸ் சுவாமிகள்
(D) பம்மல் சம்பந்த முதலியார்
73. கானல் வரி என்ற நூலின் ஆசிரியர்
(A) இராசமாணிக்கனார்
(B)இரா.பி.சேதுப்பிள்ளை
(C) இரா இராகவையங்ர்
(D) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
74. சங்கரதாஸ்சுவாமிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. சங்கரதாஸ் சுவாமிகள் சமரச சன்மார்க்க நாடக சபை என்ற நாடகக் குழுவை நிறுவியவர்
II.சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நாடகங்களில் ஒன்று சத்தியவான சாவித்திரி
III. கீர்த்தனைப் பாடல்கள்ளத் தம் நாடகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள்
IV.சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நாடகங்களில் ஒன்று டம்பாச்சாரி விலாசம்
(A) I, II மற்றும் III சரியானவை
(B) II, III மற்றும் IV சரியானவை
(C) I, III மற்றும் IV சரியானவை
(D) I, II, III மற்றும் IV அனைத்தும் சரியானவை
75. பன்முகத்தன்மை- விளிம்போரங்களை போற்றுவது – நிகழ்வுகளை மொழி விளையாட்டாகக் காண்பது – இத்தகைய அணுகுமுறை
(A) நவீனத்துவம்
(B) பின்னை நவீனத்துவம்
(C) உருவவியல்
(D) பின்னை அமைப்பியல்
76. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) கி.ராஜநாராயணன் 1.பதினெட்டாம் பெருக்கு
(b) ந. பிச்சமுத்தி 2.புனர்ஜென்மம்
(c) கு.ப.ராஜகோபாலன் 3.அழியாச்சுடர்
(d) மௌனி 4. நாற்காலி
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 2 3 1 4
( C) 4 1 2 3
(D) 3 1 4 2
77.தமிழ் உரைநடை உலகில் சொல்லின் செல்வர் என்று பாராட்டப்பெற்றவர்
(A) திரு.வி.க
(B) ரா.பி.சேதுப்பிள்ளை
( C)வ.சுப.மாணிக்கம்
(D) மு.வ
78. தமிழில் தோன்றிய முதல் வரலாற்றுப்புதினம்
(A) மோகனாங்கி
(B)கடல்பறா
(C) பார்த்திபன் கனவு
(D) பொன்னியின் செல்வன்
79. பொருத்துக
(a) அலையன்ஸ் 1.சுதைமா
(b) சிமெண்ட் 2.கிழிப்பம்
(c) ஏஜன்ஸீஸ் 3.நேசக்கூட்டு
(d) கூப்பன் 4.முகவாண்மைகள்
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 1 4 2
( C) 2 3 1 4
(D) 4 1 2 3
80. ‘மனச்சிறகு’ என்ற நூலின் ஆசிரியர்
(A) மு.மேத்தா
(B) காமராசன்
( C) மீரா
(D) சிற்பி பாலசுப்பிரமணியம்
81. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) முடியரசன் 1. தேன்மழை
(b) வாணிதாசன் 2.மாங்கனி
(c) சுரதா 3. பூங்கொடி
(d) கண்ணதாசன் 4. சிரித்த நுணா
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
( C) 4 3 1 2
(D) 2 1 3 4
82.”நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
இந்தத் திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் யார்?
(A) உடுமலை நாராயணகவி
(B)மாயநாதன்
( C) கண்ணதாசன்
(D) மருதகாசி
83. ”ஷெல்லிதாசன்”- என்ற புனைப்பெயரில் கவிதைகளைப் புனைந்தவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
( C)வாணிதாசன்
(D) சுரதா
84. “தமிழிசைக்கொரு தியாகராஜா” எனப் பாரட்டப்பட்டவர்
(A) பாபநாசம் சிவன்
(B) மருதகாசி
(C) வாலி
(D) உடுமலை நாராயணகவி
85. 1906 ஆம் ஆண்டு பாரதியார் தொடங்கிய பத்திரிகை
(A) சுதேசமித்திரன்
(B) சக்கரவார்த்தினி
(C) இந்தியா
(D) ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்
86. நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folk lore என்ற சொல் யாரால்? எந்த ஆண்டு உருவாக்கப் பெற்றது.
(A) 1848- ஜான் வில்லியம் தாமஸ்
(B) 1846 – வில்லியம் ஜான் தாமஸ்
(C)1856-வில்லியம் ஜெ கென்ரி
(D) 1857 தாமஸ் மவுன்
87. பண்டைய காலத்தில் ஆறலை கள்வர் நடமாற்றத்தை சத்தம் எழுப்பி எச்சரிக்கும் “கனந்துள்” பறவை பற்றிய குறிப்பு காணப்படும் நூல்
(A) குறுந்தொகை
(B) பதிற்றுப்பத்து
(C) திருமுருகாற்றுப்படை,
(D) சிலாபதிகாரம்
88. பொருத்தமான இணையைக் கண்டரிக
இயற்பெயர் புனை பெயர்
(A) சுந்தரராமசாமி – மயன்
(B) க.ந சுப்பிரமண்யம் – வே.மாலி
(C) ந.பிச்சமூர்த்தி – பிசஷு
(D) சி.மணி – பசவய்யா
89. அச்சுப் பொறியைக் கண்டுபிடித்த ஆண்டு
(A) கி.பி 1451
(B) கி.பி 1449
(C) கி.பி 1350
(D) கி.பி 1450
90. ஜவஹர்லால் நேரு தலைவராக இருந்த இதழின் பெயர்
(A) இந்தியன் நேஷன்
(B) நேஷனல் ஹெரால்டு
(C) நியூ இந்தியா
(D)நவஜீவன்
91. பொருத்தாத இணையைச் சுட்டுக
(A) முதல் சைவசமய இதழ் – வீரகேசரி
(B) முதல் வைணவ சமய இதழ் – திராவிட பாகவதன்
(C) முதல் சமண சமய இதழ் – தருமசீலன்
(D) முதல் கடவுள் மறுப்பு இயக்க இதழ் – விடுதலை
92. காரினில் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்; இந்த
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாயத்திடும் எழுச்சி நீதான் – எனப் பார்திதாசன் பாடுவது யாரை?
(A) பாஞ்சாலி
(B) தமிழ்த்தாய்
(C) கண்ணம்மா
(D) பத்திரிக்கைப் பெண்
93. 1965 – ஆம் ஆண்டு புதுதில்லியில் தொடங்கப் பெற்ற இதழ்
(A) புதிய வானம்
(B) வானம்பாடி
(C) சிகரம்
(D) கணையாழி
94. ஸ்ரீ சுப்பிரமணிய கவிதா மண்டலம் எனும் இதழைத் தொடங்கியவர்
(A) பாரதி
(B) பாரதிதாசன்
(C) இராஜாஜி
(D) புலவர் குழந்தை
95. உடன் கட்டை ஏறும் வழக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் இராஜாராம் மோகனராய் வெளியிட்ட இதழ்கள்
(A) சம்பாத் கௌமுகி, மீரட் அல் அக்பர்
(B) தீக்தர்சன், வர்தமான்
(C) மோம்பய் ஜாம்- இ-ஜாம்வுத்
(D) பிராமணிகல் மேக்சின், பிராமிண் சேவதி
96. “தலையங்கம் எழுதுபவருக்குக் கற்றுக் கொடுக்க,
தாக்க, காக்க, புகழ – நான்கு வகை வாய்ப்புகள் கிடைக்கின்றன” யார் கூற்று?
(A) எம்.வி. காமத்
(B) ஆர்தா பிரிஸ்பேனே
(C) ஜான் ஹோஹன் பா்க்
(D) பாரதியார்
97. மொழி ஒப்பாய்வில்” எனும் குறியீடு எதனைச் சுட்டுகிறது?
(A) மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொல்
(B)பழமையான சொல்
(C) பிறமொழிச்சொல்
(D) பேச்சு மொழிச் சொல்
98. தொல்திராவிட மொழியில் நான்கு என்ற எண்ணைக் குறிக்கும் “நால்கு” என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்க இலக்கிய நூல்கள்
(A) புறநானூறு, மலைபடுகடாம்
(B)அகநானூறு, பதிற்றுப்பத்து
(C) நற்றிணை, குறுந்தொகை
(D) பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு
99. கீழ்க்காணும் ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொல்லைக் கண்டறிந்து பொருத்துக:
ஆங்கிலச்சொல் தமிழாக்கம்
(a) Latotes 1. ஆகுபெயர்
(b) Meliorative tendency 2. இடக்கரடக்கல்
(c) Pejorative tendency 3. வன்பொருட்பேறு
(d) Metonomy 4.மங்கல வழக்கு
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
( C) 3 2 1 4
(D) 4 3 2 1
100. ஆஸ்பித்திரி, பட்டாளம் ஆகிய சொற்களின் மூல மொழி
(A) உருது
(B) பாரசீகம்
( C) பிரெஞ்சு
(D) போர்ச்சுகீசு
101.பேச்சிழப்பு (ஏறத்தi) ஏற்படுவதற்குக் காரணம்
(A) நுரையீரல் பாதிப்பு
(B) குரல் நாண்கள் பாதிப்பு
(C) வாயறை யாதிப்பு
(D) மூளை பாதிப்பு
102. திராவிட மொழிகளும் மைதன்னி மொழியும் தம்முன் இனவொற்றுமையுடையன என்று கூறியவர்
(A) சாட்டர்ஜி
(B) பிரெளன்
(C) லாகோவரி
(D)ஸ்டென்கனோவ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.