பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | தமிழ்நாடு பொதுச் சுகாதாரப் பணிகள் |
---|---|
பதவியின் பெயர் | சுகாதார அலுவலர் |
காலியாகவுள்ள பணியிடங்கள் | 12 |
வயது வரம்பு | அதிகபட்சமாக 37 வயது இருக்க வேண்டும். SC/ST,MBC/DC/BC(OBCM0),BCM,Destittute widow விற்கு வயது வரம்பு கிடையாது. |
சம்பளம் | ரூ.56,900 - 2,09,200 (நிலை - 23) |
பணிக்கான கல்வித்தகுதி:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் பல்கலைக்கழகம் வழங்கிய MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ அங்கீகரிப்பு விதிமுறைகளின்படி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல்தகுதி சான்றிதழ், தமிழ் மொழியில் தகுதி போன்றவை தேவை.
தேர்வுக்கான கட்டணம்:
நிரந்தர பதிவுக்கட்டணம் - ரூ.150/-
தேர்வுக்கான பதிவுக்கட்டணம் - ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://apply.tnpscexams.in/
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | நாட்கள் |
---|---|
அறிவிப்பு வெளியான நாள் | 21.10.2022 |
ஆன்லைனின் விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 19.11.2022 |
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம் | 24.11.2022 நள்ளிரவு 12.01 மணி முதல் 26.11.2022 இரவு 11.59 மணி வரை. |
கணினி வழித் தேர்வு நாள் | 13.02.2023 |