1.பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு :
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழைப் பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், பல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1.பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களைத் தேர்ந்தெடு.
(A) வாழ்க, வாழ்க
(B) வளர்க, வளர்க
(C) மீண்டும், மீண்டும்
(D) ஓடுக, ஓடுக
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மீண்டும், மீண்டும்
2.புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
(A) தொடர்ந்து பெய்த மழையால்
(B) தொடர்ந்து வீசியக் காற்றால்
(C) தொடர்ந்து வந்த நீரால்
(D) தொடர்ந்து வந்த புயலால்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தொடர்ந்து பெய்த மழையால்
3.பெய்த மழை – இலக்கணக் குறிப்புத் தருக.
(A) வினைமுற்று
(B) பெயரெச்சம்
(C) வினையெச்சம்
(D) உரிச்சொல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பெயரெச்சம்
4.நெருப்புப் ______ போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது.
(A) உருண்டை
(B) உருளை
(C) பந்து
(D) கட்டை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பந்து
5.உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவது
(A) புவியில் தோன்றிய உள்ளீடு
(B) புவியில் தோன்றிய நெருப்பு
(C) புவியில் தோன்றிய கடல்
(D) புவியில் தோன்றியக் காடு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) புவியில் தோன்றிய உள்ளீடு
6.கீழ்காணும் தொடர்களில் (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஓர் இனிய நகரம்
(B) ஒரு இனிய நகரம்
(C) ஒரு நகரம்
(D) ஓர் நகரம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஒரு நகரம்
7.ஒரு – ஓர் எனும் சொற்கள் சரியாக அமைந்த தொடரைத் தேர்க.
(A) ஓர் ஊரில் ஒரு பாட்டி வசித்தாள்
(B) ஓர் ஊரில் ஓர் பாட்டி வசித்தாள்
(C) ஒரு ஊரில் ஒரு பாட்டி வசித்தாள்
(D) ஒரு ஊரில் ஓர் பாட்டி வசித்தாள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஓர் ஊரில் ஒரு பாட்டி வசித்தாள்
8.பிழை திருத்துதல் (ஒரு – ஓர்)
சரியான வகையில் அமைந்தத் தொடரைத் தேர்க.
(A) ஒரு ஊரில் ஒரு ஏரி இருந்தது
(B) ஓர் ஊரில் ஓர் ஏரி இருந்தது
(C) ஒரு ஊரில் ஓர் ஏரி இருந்தது
(D) ஓர் ஊரில் ஒரு ஏரி இருந்தது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஓர் ஊரில் ஓர் ஏரி இருந்தது
9.பொருத்துக.
சொல் பொருள்
(a) வித்து 1. வேண்டாத செடி
(b) ஈன 2. கடுஞ்சொல்
(c) வன்சொல் 3. விதை
(d) களை 4. பெற
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 4 3 2 1
(C) 3 4 1 2
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 4 2 1
10.பொருத்துக.
சொல் பொருள்
(a) முகில் 1. கூட்டம்
(b) சேகரம் 2. எமன்
(c) காலன் 3. மிக வருந்தி
(d) கெடிகலங்கி 4. மேகம்
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 4 2 1 3
(C) 4 1 2 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 4 1 2 3
11.பொருத்துக.
சொல் பொருள்
(a) வங்கம் 1. பகல்
(b) நீகான் 2. கப்பல்
(c) எல் 3. அழகு
(d) உரு 4. நாவாய் ஓட்டுபவன்
(a) (b) (c) (d)
(A) 4 1 3 2
(B) 3 2 4 1
(C) 2 4 1 3
(D) 1 3 2 4
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 2 4 1 3
12.ஒருமை – பன்மை பிழையற்றத் தொடர் எது ?
(A) மேகங்கள் சூழ்ந்து கொண்டன
(B) மேகங்கள் சூழ்ந்து கொண்டது
(C) விண்மீன்கள் வானில் தோன்றியது
(D) மேகங்கள் சூழ்ந்து கொண்டனர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மேகங்கள் சூழ்ந்து கொண்டன
13,ஒருமை பன்மை பிழை நீக்குக.
(A) இது பழம் அல்ல
(B) இது பழம் அன்று
(C) இவை பழம் அன்று
(D) இவை பழங்கள் அன்று
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இது பழம் அன்று
14,ஒருமை – பன்மை பிழையற்றத் தொடர் எது?
(A) கதிரவன் காலையில் உதித்தன
(B) கதிரவன் காலையில் உதித்தாள்
(C) கதிரவன் காலையில் உதித்தது
(D) கதிரவன் காலையில் உதித்தான்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கதிரவன் காலையில் உதித்தது
15,சரியான தொடரைத் தேர்ந்தெடு.
பணம் காணாமல் போனது
(A) எதிர்மறை வினைத் தொடர்
(B) செயப்பாட்டு வினைத்தொடர்
(C) தன்வினைத் தொடர்
(D) செய்வினைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) செயப்பாட்டு வினைத்தொடர்
16.சரியான தொடரைத் தேர்ந்தெடு.
என்னே இமய மலையின் உயரம்! – இது எவ்வகைத் தொடர்?
(A) வினாத் தொடர்
(B) உணர்ச்சித் தொடர்
(C) கட்டளைத் தொடர்
(D) செய்தித் தொடர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உணர்ச்சித் தொடர்
17.கூட்டப்பெயரைத் தெரிவு செய்க.
வைக்கோல்
(A) குவியல்
(B) போர்
(C) மூட்டை
(D) பொதி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) போர்
18.கூட்டப்பெயரைத் தெரிவு செய்க.
யானை
(A) மந்தை
(B) கூட்டம்
(C) குழு
(D) நிரை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கூட்டம்
19.சொற்களின் கூட்டப்பெயர்கள் பின்வருவனவற்றுள் மக்கள் எனும் சொல்லோடு பொருந்தாத கூட்டுப்பெயரைக் கண்டறிக.
(A) தொகுதி
(B) மன்றம்
(C) மந்தை
(D) கூட்டம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மந்தை
20.மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ______
(A) அடுக்குகள்
(B) கூரை
(C) சாளரம்
(D) வாயில்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அடுக்குகள்
21.பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்.
புலியின் இளமைப்பெயர் _______
(A) குருளை
(B) குட்டி
(C) பறழ்
(D) கன்று
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பறழ்
22.பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” –
பழமொழி கூறும் பொருள் தெளிக.
(A) நட்பு பாராட்டல்
(B) நன்றி மறவாமை
(C) ஒற்றுமை
(D) இரக்கம் காட்டல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) நன்றி மறவாமை
23.நிறுத்தற்குறிகள் சரியாக அமைக்கப்பட்ட தொடரைத் தேர்க.
(A) இருதிணை : உயர்திணை, அஃறிணை.
(B) இருதிணை – உயர்திணை, அஃறிணை
(C) ‘இருதிணை’ – உயர்திணை; அஃறிணை
(D) இருதிணை : “உயர்திணை, அஃறிணை.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) இருதிணை : உயர்திணை, அஃறிணை.
24.நிறுத்தற் குறியிடுக.
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ பெரியதோ என்று கேட்டல்
(A) ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ பெரியதோ என்று கேட்டல்.
(B) ஒரு விரலைக், காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ’? என்று கேட்டல்.
(C) ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்டல்.
(D) ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ என்று கேட்டல்.
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஒரு விரலைக், காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ’? என்று கேட்டல்.
25.நிறுத்தற் குறிகளை இடுதல்.
என்னப்பா என்று கேட்டேன் நான்
(A) என்னப்பா! என்று கேட்டேன் நான்.
(B) “என்னப்பா?” என்று கேட்டேன் நான்.
(C) என்னப்பா, என்று கேட்டேன் நான்.
(D) “என்னப்பா என்று கேட்டேன் நான்”
(E) விடை தெரியவில்லை
விடை: (B) “என்னப்பா?” என்று கேட்டேன் நான்.
26.சரியான இணையைக் கண்டறிக.
ஊர்ப் பெயர் மருஉ
(A) திருவண்ணாமலை – திருவாணை
(B) நாகர்கோவில் – நாகை
(C) புதுக்கோட்டை – புதுவை
(D) கோயம்புத்தூர் – கோவை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கோயம்புத்தூர் – கோவை
27.பொருத்தமான இணையைக் கண்டறிக.
(A) போழ – அழகு
(B) எல் – கப்பல்
(C) வங்கம் – பகல்
(D) வங்கூழ் – காற்று
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வங்கூழ் – காற்று
28.பின்வருவனவற்றுள் உதகமண்டலத்தின் மரூஉ எது?
(A) உடுக்கை
(B) மண்டலை
(C) உதகை
(D) உத்தரை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) உதகை
29.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சாவி
(A) திறவுகோல்
(B) பூட்டு
(C) கதவு
(D) சன்னல்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) திறவுகோல்
30.பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
போலீஸ் ஸ்டேஷன்
(A) காவல் நிலையம்
(B) காவலர்
(C) கண்காணிப்பாளர்
(D) காப்பவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) காவல் நிலையம்
31.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை கண்டறிக.
கப்பித்தான்
(A) கருமி
(B) சேமிப்பவர்
(C) தலைமை மாலுமி
(D) சிறை வாசம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தலைமை மாலுமி
32.“எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவிற்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.
(A) உறுவது கூறல் விடை
(B) மறை விடை
(C) வினா எதிர் வினாதல் விடை
(D) உற்றதுரைத்தல் விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வினா எதிர் வினாதல் விடை
33.விடை வகையை கண்டறிக.
‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு. ‘இப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறுவது
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சுட்டு விடை
34.விடை வகையை கண்டறிக.
“இது செய்வாயா?” என்று வினவிய போது, “நீயே செய்” என்று கூறுவது
(A) சுட்டு விடை
(B) ஏவல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) இனமொழி விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஏவல் விடை
35.அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
Electronic devices
(A) மின்னனுக் கருவிகள்
(B) காணொலிக் கூட்டம்
(C) மின்சாரக் கருவிகள்
(D) மின்னச்சுக் கருவிகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மின்னனுக் கருவிகள்
36.அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்
Launch Vehicle – என்பதன் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
(A) ஏவுகணை
(B) செயற்கைக்கோள்
(C) ஏவு ஊர்தி
(D) வானூர்தி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஏவு ஊர்தி
37.Intellectual – என்பதற்கான சரியான கலைச்சொல்லைத் தேர்க.
(A) அறிவாளர்
(B) குறியீட்டியல்
(C) சின்னம்
(D) ஆய்வேடு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அறிவாளர்
38.கலைச்சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு
‘Honorary Doctorate’
(A) மதிப்பிற்குரிய மருத்துவர்
(B) மதிப்புறு கல்வியாளர்
(C) மதிப்புறு முனைவர்
(D) மதிப்புறு காவலர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மதிப்புறு முனைவர்
39.“உடலும் உயிரும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
(A) வேற்றுமை
(B) நட்பு
(C) ஒற்றுமை
(D) பகைமை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஒற்றுமை
40.“அத்தி பூத்தது போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
(A) மிக எளிதாக
(B) மிக அரிதாக
(C) மிக உயரமாக
(D) மிக குள்ளமாக
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மிக அரிதாக
41.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்.
‘எடுப்பார் கைப்பிள்ளை’
(A) கைக்குழந்தையின் செயல்பாடுகள்
(B) யார் எதை சொன்னாலும் கேட்பது
(C) இளமைப்பருவத்து நினைவுகள்
(D) குழந்தைப்பருவத்தின் உணவு பழக்கவழக்கங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) யார் எதை சொன்னாலும் கேட்பது
42.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
செய்வினை வாக்கியத்தை கண்டு எழுதுக.
(A) கவிதா கவிதை எழுதினாள்
(B) கவிதா கவிதை எழுதவில்லை
(C) கவிதா கவிதை எழுதினாளா?
(D) கவிதா எழுதுவித்தாள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கவிதா கவிதை எழுதினாள்
43.எவ்வகைத் தொடர் எனத் தேர்க.
வாசுகி நாளை வருவாள்.
(A) தன்வினைத்தொடர்
(B) பிறவினைத்தொடர்
(C) செய்வினைத்தொடர்
(D) செயப்பாட்டுவினைத்தொடர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தன்வினைத்தொடர்
44.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
“தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது தமிழர் மரபாகக் கருதப்படுகிறது.”
(A) உபசரித்தலில் சிறந்தவராகக் கருதப்படுபவர் யார்?
(B) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது யார் மரபாகக் கருதப்படுகிறது?
(C) தலைவாழை இலையில் உணவு படைத்தவர்கள் யார்?
(D) வாழை இலையில் உணவு உண்டவர்கள் யார்?
(E) விடை தெரியவில்லை
விடை: (B) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது யார் மரபாகக் கருதப்படுகிறது?
45.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐராவதீசுவரர் கோவில் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
(A) ஐராவதீசுவரர் கோவில் எதனால் கட்டப்பட்டது?
(B) ஐராவதீசுவரர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
(C) ஐராவதீசுவரர் கோவில் எங்கு கட்டப்பட்டது?
(D) ஐராவதீசுவரர் கோவில் எப்படி கட்டப்பட்டது?
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஐராவதீசுவரர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
46.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
‘மூதுரை’ என்னும் நூலை எழுதியவர் ஔவையார்.
(A) ஒளவையாரின் நூலா மூதுரை?
(B) மூதுரையை ஏன் எழுதினார்?
(C) மூதுரை என்னும் நூலை எழுதியவர் யார்?
(D) மூதுரையை ஒளவையார் எழுதினாரா?
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மூதுரை என்னும் நூலை எழுதியவர் யார்?
47.பின்வரும் வினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
விரிந்து விரித்து
(A) மயில் தோகையை விரித்ததால் பூக்கள் விரிந்தன.
(B) காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன, மயில் தோகையை விரித்தது.
(C) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடின.
(D) காற்று வீசியது. பூக்கள் விரிந்தன.
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன, மயில் தோகையை விரித்தது.
48.இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
பணிந்து – பணித்து
(A) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணித்தவுடன் மணி பணிந்தான்.
(B) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணிந்தவுடன் மணி பணித்தான்.
(C) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணியாததால் மணி பணித்தான்.
(D) மணி வகுப்புக்கு வரப் பணிந்து ஆசிரியரைப் பணித்தான்.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஆசிரியர் வகுப்புக்கு வரப் பணித்தவுடன் மணி பணிந்தான்.
49.விடை வகைகள்
“நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது
(A) உறுவது கூறல் விடை
(B) நேர் விடை
(C) சுட்டு விடை
(D) மறை விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) உறுவது கூறல் விடை
50.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
(A) பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
(B) வாழ முடியாது மனிதன் இல்லாத உலகில் பறவை.
(C) மனிதன் பறவை வாழ முடியாது இல்லாத உலகில்.
(D) இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது பறவை.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
51.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) செய்கையும்: காலமும் கருவியும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
(B) கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
(C) காலமும் கருவியும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
(D) காலமும், செய்கையும் கருவியும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
52.அகரவரிசைப்படி சரியான வரிசையைத் தேர்க.
தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு
(A) திருவிழா, துணிவு, தூய்மை, தெப்பம், தையல், தொடர்பு, தோழி
(B) துணிவு, தூய்மை, திருவிழா, தொடர்பு, தெப்பம், தோழி, தையல்
(C) தையல், துணிவு. தோழி, திருவிழா, தெப்பம், தொடர்பு, தூய்மை
(D) தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) திருவிழா, துணிவு, தூய்மை, தெப்பம், தையல், தொடர்பு, தோழி
53,அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
குறும்பு, கிளி, குறிஞ்சி, கடல், காட்டுக்கோழி, கொற்றவை, குறவர்.
(A) கடல், காட்டுக்கோழி, கிளி, குறிஞ்சி, குறும்பு, குறவர், கொற்றவை
(B) கடல், காட்டுக்கோழி, கிளி, குறவர், குறிஞ்சி, குறும்பு, கொற்றவை
(C) கடல், காட்டுக்கோழி, குறவர். குறும்பு, குறிஞ்சி, கொற்றவை
(D) கடல், காட்டுக்கோழி, கிளி, குறிஞ்சி, குறும்பு, கொற்றவை, குறவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கடல், காட்டுக்கோழி, கிளி, குறவர், குறிஞ்சி, குறும்பு, கொற்றவை
54.வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
பாடு
(A) பாடுதல்
(B) பாடுக
(C) பாடிய
(D) பாடியவள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பாடியவள்
55.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று உருவாக்கல்
கேள்
(A) கேட்ட
(B) கேட்டு
(C) கேட்டான்
(D) கேட்கிற
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கேட்டான்
56.வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
கொடு
(A) கொடுத்தார்
(B) கொடுத்தோர்
(C) கொடுத்த
(D) கொடுத்து
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கொடுத்தார்
57.கண்டான் – வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) கண்
(B) கண்டு
(C) காண்
(D) கண்ட
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காண்
58.வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க
அறியேன்
(A) அறி
(B) அரி
(C) அற
(D) அ
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அறி
59.வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க
‘படித்தவர்’ என்ற வினையாலணையும் பெயரின் வேர்ச்சொல்லை காண்க.
(A) படி
(B) படித்த
(C) படித்தல்
(D) படித்து
(E) விடை தெரியவில்லை
விடை: (A) படி
60.“அணி” எனும் சொல் தரும் பலபொருள்களைத் தேர்க.
(A) அணிகலன், அழகு, வரிசை, அணிதல்
(B) சிரிப்பு, நகை, மகிழ்ச்சி, துன்பம்
(C) வரிசை, அழகு, சிரிப்பு, அழுகை
(D) அழகு, சிரிப்பு, வரிசை, இன்பம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அணிகலன், அழகு, வரிசை, அணிதல்
61.ஒரு பொருள் தரும் பல சொற்கள்
கூலம், காழ், முத்து, முதிரை ஆகிய சொற்கள் எதனை உணர்த்துகின்றன?
(A) இளம் பயிர் வகை
(B) மணி வகை
(C) காய் வகை
(D) குலை வகை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மணி வகை
62,ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வானம் – வாணம்
(A) விண் – பூமி
(B) மண் – விண்
(C) ஆகாயம் வெடி
(D) வெடி – வெளி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஆகாயம் வெடி
63.பொருள் வேறுபாடு அறிக
விலை – விளை – விழை
(A) விளைந்த நெல்லை நல்ல விலைக்கு விற்க விழைந்தான்
(B) விலைந்த நெல்லை நல்ல விளைக்கு விற்க விழைந்தான்
(C) விளைந்த நெல்லை நல்ல விழைக்கு விற்க விலைந்தான்
(D) விழைந்த நெல்லை நல்ல விளைக்கு விற்க விலைந்தான்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) விளைந்த நெல்லை நல்ல விலைக்கு விற்க விழைந்தான்
64.ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக
பரவை பறவை
(A) பரப்புதல் பறக்கும் பாவை
(B) பூசுதல் கிளி
(C) நட்பு வலிமை
(D) கடல் பறப்பன
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கடல் பறப்பன
65.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(A) மின் நூலகம்
(B) மின்னஞ்சல்
(C) மின் நூல்
(D) மின் இதழ்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மின்னஞ்சல்
66.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு
RITE
(A) தடையுத்தரவு
(B) சட்டம்
(C) சடங்கு
(D) சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) சடங்கு
67.Escalator என்பதன் தமிழ்ச் சொல்
(A) மின் தூக்கி
(B) படிக்கட்டு
(C) மின்படிக்கட்டு
(D) நடைபாதை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மின்படிக்கட்டு
68.மரபுப் பிழை நீக்கிச் சரியானதைத் தேர்க
சோறு தின்றான்
(A) உண்டான்
(B) சாப்பிட்டான்
(C) அருந்தினான்
(D) சமைத்தான்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) உண்டான்
69.பிழையற்றச் சொல்லைக் கண்டறிக
(A) செழியன் வந்தது
(B) கண்ணகி உண்டான்
(C) நீ வந்தாய்
(D) நேற்று வருகிறான்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நீ வந்தாய்
70.வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது
பிழைத்திருத்துக.
(A) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது
(B) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
(C) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது
(D) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) உயிரெழுத்து
(B) உயிர்மெய்
(C) ஆய்தம்
(D) உயிரளபெடை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) உயிரெழுத்து
72.பொருந்தாத சொல்லைத் தேர்க
முற்றியலுகரம்
(A) பசு
(B) விடு
(C) ஆறு
(D) கரு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஆறு
73,சில்காற்று என்பதன் எதிர்ச்சொல்
(A) தென்றல்
(B) சிறுகாற்று
(C) சிலகாற்று
(D) புயல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) புயல்
74.‘கடைத்தெரு எங்குள்ளது?” என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் எவ்வகை விடை?
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சுட்டு விடை
75.எதிர்ச்சொல் தருக
அணுகு
(A) விலகு
(B) தெளிவு
(C) சோர்வு
(D) உறவு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) விலகு
76.பிரித்தெழுதுக
செம்பயிர்
(A) செம்மை + பயிர்
(B) செம் + பயிர்
(C) செமை + பயிர்
(D) செம்பு + பயிர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) செம்மை + பயிர்
77.பிரித்து எழுதுக
‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) நீளு + உழைப்பு
(B) நீண் + உழைப்பு
(C) நீள் + அழைப்பு
(D) நீள் + உழைப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நீள் + உழைப்பு
78.நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) நாடென்ற
(B) நாடன்ற
(C) நாடு என்ற
(D) நாடு அன்று
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நாடென்ற
79.சரியான கலைச்சொல் தேர்க.
Nanotechnology
(A) உயிரித் தொழில்நுட்பம்
(B) விண்வெளி தொழில்நுட்பம்
(C) மீநுண் தொழில்நுட்பம்
(D) செயற்கை தொழில்நுட்பம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மீநுண் தொழில்நுட்பம்
80.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இங்கே)
(A) தம்பி ______ வா.
(B) தம்பி ______ உள்ளாய்.
(C) தம்பி ______ வந்தாய்.
(D) தம்பி ______ உன்னுடையதா?
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தம்பி ______ வா.
81.சரியான இணைப்புச் சொல் தேர்க.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம்
மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) அதனால்
(B) மேலும்
(C) ஏனெனில்
(D) இல்லையென்றால்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஏனெனில்
82.சரியான இணைப்புச் சொல்லினை எழுது.
நாம் இனியச் சொற்களைப் பேச வேண்டும் ______ துன்பப்பட நேரிடும்.
(A) எனவே
(B) இல்லையென்றால்
(C) ஆகையால்
(D) அது போல
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இல்லையென்றால்
83.சரியான இணைப்புச் சொல் தருக.
நான் நேற்று பள்ளி செல்லவில்லை ______ என் உடல்நிலை சரியில்லை.
(A) ஏனெனில்
(B) இல்லையென்றால்
(C) ஆனால்
(D) மேலும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஏனெனில்
84.சரியான வினாச்சொல்லை எழுதுக.
இசைத் தூண்கள் ______ காலத்தில் அமைக்கப்பட்டவை?
(A) ஏன்?
(B) எது?
(C) எப்படி?
(D) யார்?
(E) விடை தெரியவில்லை
விடை: (D) யார்?
85.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
நெல்லையப்பர் கோவில் ______ உள்ளது?
(A) எங்கு
(B) எப்போது
(C) எது
(D) எவை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) எங்கு
86.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
“புயலிலே ஒரு தோணி” என்னும்
புதினத்தை இயற்றியவர், ______
(A) எங்கு
(B) எப்படி
(C) யார்
(D) எப்போது
(E) விடை தெரியவில்லை
விடை: (C) யார்
87.பொருத்தமான காலம் அமைத்தல்.
‘வாழ்’ என்ற சொல்லின் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு
(A) வாழ்வேன்
(B) வாழ்ந்தான்
(C) வாழ்கிறேன்
(D) வாழ்ந்தாள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வாழ்கிறேன்
88.சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு.
மணி, சுவை, அகில், மேகலை, விலங்கு, விண்
(A) அகில் மணி
(B) மணி மேகலை
(C) விண் மேகலை
(D) மேகலை மணி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மணி மேகலை
89.பின்வரும் சொற்களில் ‘விண்’ என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லை உருவாக்கும் சொல்லைக் கண்டறிக
(A) வேலி
(B) கள்
(C) வெளி
(D) மாலை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வெளி
90.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான்
(A) அவன் பாட்டியுடன் வெளியூர் போய் இருக்கிறான்
(B) அவன் பாட்டியோட வெளியூர் போயிருக்கான்
(C) அவம்பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்
(D) அவன் பாட்டி உடன் வெளியூர் போயிருக்கான்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அவன் பாட்டியுடன் வெளியூர் போய் இருக்கிறான்
91.பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்று.
‘அங்க நல்லா கவனிப்பாங்க’
(A) அங்க நன்று கவனித்தார்கள்
(B) அங்கு நல்லா கவனிச்சார்கள்
(C) அங்கே நன்றாக கவனிப்பார்கள்
(D) அங்கே நன்றாக கவனித்தார்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அங்கே நன்றாக கவனிப்பார்கள்
92.இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
அரசுக்குத் தவறாமல் ______ செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது ______ வடிவம்.
(A) பணம்
(B) பொருள்
(C) வரி
(D) சொல்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வரி
93.இருபொருள் தருக :
நகை
(A) சிரிப்பு, அணிகலன்
(B) பார்த்தல், அணிதல்
(C) அழுதல், சிரித்தல்
(D) வரைதல், ஆணிகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சிரிப்பு, அணிகலன்
94.குறில் நெடில் அடிப்படையில் சரியான இணையைத் தேர்வு செய்க.
(A) சே, சோ
(B) ஆடல், பாடல்
(C) பெறு, பேறு
(D) தழல், கழல்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பெறு, பேறு
95.பொருள் வேறுபாடு அறிக.
அழி – ஆழி
(A) அழித்தல் – நீக்குதல்
(B) நீக்குதல் – கடல்
(C) கடல் – சக்கரம்
(D) சக்கரம் – கடல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) நீக்குதல் – கடல்
96.குறில் + நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு உணர்த்தும் பொருத்தமான இணையைத் தேர்க.
வளி – வாளி
(A) வானம் – கருவி
(B) காற்று – ஆகாயம்
(C) காற்று – அம்பு
(D) வானம் – மழை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காற்று – அம்பு
97.கூற்று 1 : சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் பயிலலாம்.
கூற்று 2 : இக்கலைத்துறையில் மிகுதியான வேலை வாய்ப்புகள் உள்ளன.
கூற்று 3 : சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ள சிற்பச் செந்நூல் என்ற நூல் வெளியிடப்படுகின்றது.
(A) கூற்று 1, 2, 3 சரி
(B) கூற்று 1, 2, 3 தவறு
(C) கூற்று 1 மட்டும் தவறு 2, 3 சரி
(D) கூற்று 1, 3 சரி, 2 மட்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று 1, 2, 3 சரி
98.கலைச்சொல் தருக. Literature
(A) நாட்டுப்பற்று
(B) இலக்கியம்
(C) கலைக்கூடம்
(D) மெய்யுணர்வு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இலக்கியம்
99.கிராமத்தில் நுண்ணீர்ப் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தொடரில் கோடிட்ட சொல்லுக்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
(A) Immigration
(B) Irritation
(C) Irrigation
(D) Inspiration
(E) விடை தெரியவில்லை
விடை: (C) Irrigation
100.கலைச்சொல் அறிக
AESTHETICS என்பதன் கலைச்சொல் யாது?
(A) தொல்லியல்
(B) அழகியல்
(C) புள்ளியியல்
(D) அகவியல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அழகியல்