1.எதிர்ச் சொற்களைப் பொருத்துக.
(a) அணுகு 1. தெளிவு
(b) ஐயம் 2. சோர்வு
(c) ஊக்கம் 3. பொய்மை
(d) உண்மை 4. விலகு
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 3 4 1
(C) 4 1 2 3
(D) 2 1 3 4
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 4 1 2 3
2.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) வடு
(B) குரும்பை
(C) கருக்கல்
(D) கொப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கொப்பு
3.பொருந்தா மரபுத் தொடரைக் கண்டறிக.
(A) தள்ளிவைத்தல்
(B) அள்ளி இறைத்தல்
(C) ஆறப்போடுதல்
(D) மனக்கோட்டை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தள்ளிவைத்தல்
4.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) இன்பம்
(B) பொருள்
(C) அறம்
(D) அருள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அருள்
5.சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
(A) நமது நாட்டின் பாரம்பரிய சின்னங்களை பாதுக்காப்பேன்
(B) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களை பாதுக்காப்பேன்
(C) நமது நாட்டின் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பேன்
(D) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்
6.மரபுப் பிழைகள் ஒலி மரபு.
கோழி
(A) கொக்கரிக்கும்
(B) கூவும்
(C) அலறும்
(D) அகவும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கொக்கரிக்கும்
7.விலங்குகளின் மரபுப் பெயரை ஒட்டி கீழ்கண்டவற்றுள் பொருத்தமான சொல்லை இணைக்க.
புலி ______
(A) குட்டி
(B) பறழ்
(C) கன்று
(D) குருளை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பறழ்
8.முறி, குருத்து, கொழுந்தாடை
முதலிய சொற்கள் தாவரத்தின் ______ பகுதியைக் குறிக்கும்.
(A) நுனிப்பகுதி
(B) இலை
(C) கிளை
(D) வேர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நுனிப்பகுதி
9.அழகு என்னும் சொல்லைக் குறிக்கும் சரியான பிறச்சொற்களைக் கண்டறிக.
(A) பெண் மயில், அன்னம்
(B) கவின், வனப்பு
(C) பறவையின் மூக்கு, பச்சைக்கிளி
(D) சோலை, அருவி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கவின், வனப்பு
10.அகர வரிசையில் சொற்களை நிரல்படுத்துக.
(A) தேங்காய், பழம், பாக்கு, பூ, வெற்றிலை
(B) பாக்கு, வெற்றிலை, தேங்காய், பழம், பூ
(C) பூ. பாக்கு, பழம், வெற்றிலை, தேங்காய்
(D) வெற்றிலை, பாக்கு. பூ. பழம், தேங்காய்
(E) விடை தெரியவில்லை
விடை: A) தேங்காய், பழம், பாக்கு, பூ, வெற்றிலை
11.இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
(A) உறுமி, தவில், மகுடி, உடுக்கை
(B) உடுக்கை, உறுமி, தவில், மகுடி
(C) உறுமி, தவில், உடுக்கை, மகுடி
(D) உடுக்கை, உறுமி, மகுடி, தவில்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உடுக்கை, உறுமி, தவில், மகுடி
12.ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.
கான் – காண்
(A) காடு – வனம்
(B) பாடல் – உணவு
(C) காடு – பார்
(D) கருமை – மேகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காடு – பார்
13.சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
(B) மானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன
(C) வானம்` பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன
(D) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றது
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வானம்` பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன
14.சரியான தொடரைத் தேர்வு செய்க.
(A) ஆற்றின் வளப்புறம் உல்ல வயல்கள் நீர் வளத்தால் செழித்திறுந்தன.
(B) ஆற்றின் வளப்புறம் உள்ள வயல்கல் நீர் வலத்தால் செலித்திறுந்தன.
(C) ஆற்றின் வலப்புரம் உள்ள வயள்கல் நீர் வளத்தால் செழித்திருந்தன.
(D) ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.
15.“நின்றான்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.
(A) நில்
(B) நின்
(C) நின்று
(D) நில்லு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நில்
16.வேர்ச்சொல்லைக் காண்க : ‘சுடுதல்’
(A) சுடு
(B) சூடு
(C) சுடுக
(D) சுட்ட
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சுடு
17.வந்தான் – என்பதன் வேர்ச்சொல்லைக் காண்க.
(A) வந்த
(B) வந்து
(C) வ
(D) வா
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வா
18.‘தா’ எனும் வேர்ச்சொல்லின் வினையெச்ச சொல் எதுவெனக் கண்டறிக.
(A) தருதல்
(B) தந்த
(C) தந்தவர்
(D) தந்து
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தந்து
19.‘கானல் நீர்‘ எனும் உவமை தரும் பொருள் எதுவென கண்டறிக
(A) இயலாத செயல்
(B) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது
(C) நீண்டகாலமாக இருப்பது
(D) எண்ணியது நிகழாமை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது
20.பாடு – என்பதன் பெயரெச்சத்தை தேர்க.
(A) பாடுதல்
(B) பாடிய
(C) பாடினேன்
(D) பாடியவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பாடிய
21.சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. ‘CONVEYOR BELT”
(A) ஊர்திப்பட்டை
(B) நுழைவுப்பட்டை
(C) புறப்பாடு
(D) வருகை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஊர்திப்பட்டை
22.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
(A) Aesthetics – முருகியல்
(B) Discussion – உரையாடல்
(C) Tempest – சுழல் காற்று
(D) Cosmic Rays – புற ஊதாக்கதிர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) Aesthetics – முருகியல்
23.Monolingual – ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக.
(A) ஒரு மொழி
(B) தனி மொழி
(C) தாய் மொழி
(D) உயர் மொழி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஒரு மொழி
24.எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்.
வனப்பு
(A) காய்ந்த
(B) அழகின்மை
(C) வற்றிய
(D) வளம் குறைந்த
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அழகின்மை
25.எதிர்ச்சொல்லை எடுத்தெழுது.
ஓர்தல்
(A) ஒழுக்கமற்ற
(B) அறிவற்ற
(C) தாழ்தல்
(D) பணிதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அறிவற்ற
26.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
(A) ஒற்றுமையின்மை
(B) பயனற்ற செயல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) எதிர்பாரா நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஒற்றுமையின்மை
27.உவமையால் விளக்கப்பெறும் கருத்தை தேர்ந்தெழுதுதல்.
கிணறு வெட்டப்பூதம் கிளம்பியது போல
(A) பயனற்ற செயல்
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) தற்செயல் நிகழ்வு
(D) ஒற்றுமையின்மை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) எதிர்பாரா நிகழ்வு
28.விடை வகைகள்.
“இது செய்வாயா” என்று வினவியபோது “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது.
(A) சுட்டு விடை
(B) ஏவல் விட
(C) மறை விடை
(D) இனமொழி விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஏவல் விடை
29.“கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குச் “செய்யுள் எழுதத் தெரியும்” என்று கூறுவது எவ்வகை விடை?
(A) நேர் விடை
(B) இனமொழி விடை
(C) உறுவது கூறல் விடை
(D) மறை விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இனமொழி விடை
30.நீ சாப்பிடவில்லையா? என்ற வினாவிற்கு வயிறு வலிக்கும் என்று கூறுவது?
(A) நேர் விடை
(B) மறை விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) உறுவது கூறல் விடை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) உறுவது கூறல் விடை
31.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கிறது.
(B) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொண்டது.
(C) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றன.
(D) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றது.
(E) விடை தெரியவில்லை
விடை: (C) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றன.
32.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) குதிரையில் இருந்து அவர் இறங்கினான்
(B) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்
(C) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்கள்
(D) குதிரையில் இருந்து அவர் இறங்கியது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்
33.சரியான தொடரைத் தேர்ந்தெடு :
சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
34.சரியான தொடரைத் தேர்ந்தெடு :
நல்ல தமிழுக்கு எழுதுவோம் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) நல்ல தமிழில் எழுதுவோம்
(B) நல்ல தமிழால் எழுதுவோம்
(C) நல்ல தமிழின் எழுதுவோம்
(D) நல்ல தமிழின்கண் எழுதுவோம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நல்ல தமிழில் எழுதுவோம்
35.சொல் – பொருள் பொருத்துக.
(a) கோட்டி 1. பொன்
(b) பொலம் 2. மாலை
(c) வேதிகை 3. மன்றம்
(d) தாமம் 4. திண்ணை
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 1 4 2
(C) 3 4 2 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 3 1 4 2
36.கீழ்காணும் தொடர்களில் (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர் எது ?
(A) ஓர் மரம் தெரிகிறது
(B) ஒரு மரம் தெரிகிறது
(D) ஓர் பசுமரம் தெரிகிறது
(C) ஒரு அழகிய மரம் தெரிகிறது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஒரு மரம் தெரிகிறது
37.கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு (37-41):
வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம். நாம் தமிழர்கள், நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் எங்குச் செல்லல் வேண்டும் ? தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ? தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. தமிழ்க் கருவூலங்களை. உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது. தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள். பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்!
37.காவிய இன்பம் ______ உரியது.
(A) தாழ்விற்கு
(B) ஓய்விற்கு
(C) வாழ்விற்கு
(D) தேய்விற்கு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வாழ்விற்கு
38.எந்த இலக்கியங்களில் பாட்டின்பம் காணப்படுகிறது?
(A) தெலுங்கு
(B) கன்னடம்
(C) மலையாளம்
(D) தமிழ்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தமிழ்
39.தமிழ் காவியங்களைப் படிப்பதால் நுகர்வது எது?
(A) நகைப்பு
(B) அச்சம்
(C) இன்பம்
(D) பெருமிதம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) இன்பம்
40.இன்ப அன்பை எதனால் சொல்ல இயலாது?
(A) சொல்லால்
(B) எழுத்தால்
(C) பொருளால்
(D) யாப்பால்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சொல்லால்
41.பெறற்கரிய இன்பநாடு என இங்கு குறிக்கப்படும் நாடு எது ?
(A) வடநாடு
(B) கேரளம்
(C) வங்காளம்
(D) தமிழ்நாடு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தமிழ்நாடு
42.பசியின்றி – பிரித்தெழுதுக.
(A) பசி + யின்றி
(B) பசு + இன்றி
(C) பசி + இன்றி
(D) பசு + யின்றி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பசி + இன்றி
43.சேர்த்தெழுதுக : நிலவு + என்று
(A) நிலயென்று
(B) நிலவென்று
(C) நிலவன்று
(D) நிலவு என்று
(E) விடை தெரியவில்லை
விடை: (B) நிலவென்று
44.சேர்த்தெழுதுதல் : புளி + சோறு
(A) புளிம்சோறு
(B) புளியம்சோறு
(C) புளிஞ்சோறு
(D) புளியஞ்சோறு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) புளிஞ்சோறு
45.பிரித்து எழுதுக : ‘புளியங்கன்று’
(A) புளியங் + கன்று
(B) புளி + அம் + கன்று
(C) புளி + அங் + கன்று
(D) புளி + யங்கன்று
(E) விடை தெரியவில்லை
விடை: (B) புளி + அம் + கன்று
46.ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
(A) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன
(B) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தது
(C) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்கின்றது
(D) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்கிறது
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன
47.கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : வேங்கை என்பது பொது மொழியாகும்.
காரணம் : தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழி எனப்படும்
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று சரி; காரணம் தவறு
(C) கூற்று தவறு; காரணம் சரி
(D) கூற்று தவறு; காரணம் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று சரி; காரணம் சரி
48.கூற்று – சரியா? தவறா?
கூற்று 1 : ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
கூற்று 2 : இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் கன்னிமாரா நூலகம்.
கூற்று 3 : உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே.
(A) கூற்று 1, 2, 3 சரி
(B) கூற்று 1, 2 சரி 3 மட்டும் தவறு
(C) கூற்று 1 தவறு: 2, 3 சரி
(D) கூற்று 1, 3 சரி ; 2 மட்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கூற்று 1, 3 சரி ; 2 மட்டும் தவறு
49.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (அவர்)
(A) வந்தவர் ______ தான்
(B) வந்தவன் ______ தான்
(C) வந்தது ______ தான்
(D) வருகின்றது ______ தான்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வந்தவர் ______ தான்
50.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (அழகுகள்)
(A) தம்மை முதலிய ______ எட்டினைப் பெற்றுள்ளாய்
(B) நும்மை முதலிய ______ எட்டினைப் பெற்றுள்ளாய்
(C) அம்மை முதலிய ______ எட்டினைப் பெற்றுள்ளாய்
(D) எம்மை முதலிய ______ எட்டினைப் பெற்றுள்ளாய்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அம்மை முதலிய ______ எட்டினைப் பெற்றுள்ளாய்
51.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (படித்தல்)
(A) நூலின் பயன் ______ ஆகும்
(B) கல்வியின் பயன் ______ ஆகும்
(C) பள்ளியின் பயன் ______ ஆகும்
(D) வாழ்வின் பயன் ______ ஆகும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நூலின் பயன் ______ ஆகும்
52.பொருத்தமான காலத்தைத் தேர்ந்தெடுக்க :
வள்ளி நாளை திரைப்படம் ______
(A) பார்த்தாள்
(B) பார்க்கின்றாள்
(C) பார்ப்பாள்
(D) பாராள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பார்ப்பாள்
53.பொருந்தாத இணையைத் தேர்க :
(A) அன் — வந்தனன்
(B) இன் — முறிந்தது
(C) கு — காண்குவன்
(D) அன் — சென்றன
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இன் — முறிந்தது
54.தவறான இணையைத் தேர்ந்தெடு
(A) நேற்று காலையில் சூரியன் உதிக்கும் – எதிர்காலம்
(B) மழை இப்பொழுது பெய்கிறது – நிகழ்காலம்
(C) நாளை சாப்பிடுவேன் – எதிர்காலம்
(D) நேற்றிரவு நிலா ஒளி வீசியது – இறந்தகாலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நேற்று காலையில் சூரியன் உதிக்கும் – எதிர்காலம்
55.எல் – என்பதன் எதிர்ச்சொல் தருக.
(A) இரவு
(B) பகல்
(C) காலை
(D) மாலை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) இரவு
56.“உழவன்” எதிர்ப்பாலுக்கு உரிய சொல்
(A) உழத்தியர்
(B) உழத்தி
(C) உழவி
(D) நுளைச்சி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உழத்தி
57.தவறான இணை எதுவெனக் கண்டறிக.
(A) தஞ்சாவூர் – தஞ்சை
(B) உதகமண்டலம் – உதகை
(C) திருச்சிராப்பள்ளி – திருச்சி
(D) புதுச்சேரி – புதுகை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) புதுச்சேரி – புதுகை
58.கோயமுத்தூர் என்பதன் மரூஉ எதுவென கண்டறிக.
(A) முத்தூர்
(B) புத்தூர்
(C) கோவை
(D) கோவூர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கோவை
59.தவறான இணையைக் கண்டறிக
(A) கோவை – கோயம்புத்தூர்
(B) குடந்தை – கும்பகோணம்
(C) புதுமை – புதுக்கோட்டை
(D) உதகை – உதகமண்டலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) புதுமை – புதுக்கோட்டை
60.‘லம்சம்’ தமிழாக்கம் தருக.
(A) திரட்சித் தொகை
(B) கையூட்டு
(C) நிலுவைத் தொகை
(D) பணமுடிப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) திரட்சித் தொகை
61.‘விண்டோஸ்’ கலைச்சொல் தருக.
(A) தொடுதிரை
(B) சாளரம்
(C) பலகணி
(D) வான்உலவி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பலகணி
62.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
“அறனல்ல செய்யாமை நன்று”
(A) எச்செயலை செய்யாமல் இருப்பது நன்று?
(B) அறம் என்றால் என்ன?
(C) அறனல்ல செய்யாமை நன்றா?
(D) எச்செயல்களை செய்வது நன்று?
(E) விடை தெரியவில்லை
விடை: (A) எச்செயலை செய்யாமல் இருப்பது நன்று?
63.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
வினா ஆறு வகைப்படும்.
(A) வினா எத்துனை வகைப்படும்?
(B) வினா எப்படி வகைப்படும்?
(C) வினா எத்தனை வகைப்படும்?
(D) வினா எவ்வளவு வகைப்படும்?
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வினா எத்தனை வகைப்படும்?
64.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
(A) சாகித்திய அகாதமி விருது எந்த புதினத்திற்கு கிடைத்தது?
(B) சாகித்திய அகாதமி விருது எந்த திரைப்படத்திற்கு கிடைத்தது?
(C) சாகித்திய அகாதமி விருது எந்த கவிதைக்கு கிடைத்தது?
(D) சாகித்திய அகாதமி விருது எந்த நாடகத்திற்கு கிடைத்தது?
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சாகித்திய அகாதமி விருது எந்த புதினத்திற்கு கிடைத்தது?
65.சரியான இணையைத் தேர்ந்தெடு ;
(A) Lexicography – அகராதியியல்
(B) Epigraph – சித்திர எழுத்து
(C) Pictograph – கல்வெட்டு
(D) Articulatory Phonetics – ஒலியன்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) Lexicography – அகராதியியல்
66.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) ஜனப் பிரளயம் – மக்கள் அலை
(B) ஜனப் பிரளயம் – உயிர் அலை
(C) ஜனப் பிரளயம் – மக்கள் வெள்ளம்
(D) ஜனப் பிரளயம் – மக்கள் அவை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஜனப் பிரளயம் – மக்கள் வெள்ளம்
67.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) நிபுணர் – வல்லுநர்
(B) நிபுணர் – பேச்சாளர்
(C) நிபுணர் – இயந்திரர்
(D) நிபுணர். – மேன்மையாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நிபுணர் – வல்லுநர்
68.இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் :
விரிந்தது – விரித்தது
சரியான பொருள் தரும் வாக்கியத்தைக் கண்டறிக.
(A) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன. மயில் தோகையை விரித்தது.
(B) பூவின் இதழ்கள் மழைக்காற்று வீசியதால் விரித்தது. மயில் தோகையை விரிந்தன.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது. மயில் தோகையை விரிந்தன.
(D) மயில் தோகையை விரிந்தன. மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன. மயில் தோகையை விரித்தது.
69.இருவினைகளின் பொருள் வேறுபாடறிதல்:
பணிந்து – பணித்து
சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
(A) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணித்தார்
(B) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணிந்தார்
(C) தாயின் பாதம் பணித்தார் உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் பணிந்தார்
(D) தாயின் பாதம் பணித்து ஆசி பெற்றதால் உதவித்தொகையை வழங்க இயலவில்லை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணித்தார்
70.பொருத்துக
சொல் பொருள்
(a) பொக்கிஷம் 1. அழகு
(b) சாஸ்தி 2. செல்வம்
(c) விஸ்தாரம் 3. மிகுதி
(d) சிங்காரம் 4. பெரும் பரப்பு
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 2 3 4 1
71.‘கந்தம்‘ என்பதன் பொருள் யாது?
(A) கவலை
(B) மேல்
(C) மணம்
(D) மனம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மணம்
72.குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்க.
கொள் – கோள்
(A) வாங்கு – புறங்கூறல்
(B) புறங்கூறல் – வாங்கு
(C) கொல்லுதல் – வாங்கு
(D) வாங்கு – கொல்லுதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வாங்கு – புறங்கூறல்
73.குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
நடு, நாடு
(A) தேடு, தேசம்
(B) ஊன்று, விரும்பு
(C) நிலப்பகுதி, தேடு
(D) மத்தியில், அரசு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஊன்று, விரும்பு
74.சரியான இணையைக் கண்டறிக:
(A) அளை – தயிர், பிசை
(B) அளை – பிசை, களை
(C) அளை – அழை, அலை
(D) அளை – கூவி, அடை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அளை – தயிர், பிசை
75.’திணை‘ எனும் சொல்லின் இருபொருள்களில் சரியான இணையைக் கண்டறிக.
(A) தானியம், நிலம்
(B) வலிமை, நிலம்
(C) ஒழுக்கம், நிலம்
(D) ஒழுக்கம், தீமை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஒழுக்கம், நிலம்
76.‘நாடி’ – இருபொருள் தருக.
(A) ஆராய்ந்து – தேடி
(B) எடுத்து – தொகுத்து
(C) ஓடி – பார்த்து
(D) வகுத்து – விரித்து
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஆராய்ந்து – தேடி
77.நாங் கெளம்பிட்டேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) நான் கெளம்பிட்டேன்
(B) நான் ரெடியாகி விட்டேன்
(C) நான் புறப்பட்டு விட்டேன்
(D) நான் இடம்பெயர்ந்து விட்டேன்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நான் புறப்பட்டு விட்டேன்
78.பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றியதைக் கண்டறி.
அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.
(A) அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்
(B) அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்
(C) அவனை இழுத்துக்கொண்டு வருகிறேன்
(D) அவனோடு வருகிறேன்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்
79.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
வைகறைக்குரிய கால அளவு ______
(A) யாவை?
(B) என்ன?
(C) எது?
(D) யாது?
(E) விடை தெரியவில்லை
விடை: (D) யாது?
80.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன ______
(A) எது?
(B) என்ன?
(C) யாது?
(D) யாவை?
(E) விடை தெரியவில்லை
விடை: (D) யாவை?
81.‘மாசற்றார்’ என்பதன் பொருள் ______ ?
சரியான வினாச்சொல்லை தேர்ந்தெடு.
(A) எது?
(B) என்ன?
(C) எவை?
(D) யாது?
(E) விடை தெரியவில்லை
விடை: (D) யாது?
82.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
இது மிகக் கடினமான பணி மற்றவர்களுக்கு ______ தெரிந்தது?
(A) யாது
(B) யாவை
(C) யார்
(D) எப்படி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) எப்படி
83.உரிய இடங்களில் பொருத்தமான நிறுத்தற்குறிகளை இடுக.
ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.
(A) “ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது” என்று என் தந்தை சொன்னார்.
(B) ‘ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது’ என்று என் தந்தை சொன்னார்.
(C) “ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது” என்று என் தந்தை சொன்னார்.
(D) ‘ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது’ என்று என் தந்தை சொன்னார்.
(E) விடை தெரியவில்லை
விடை: (C) “ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது” என்று என் தந்தை சொன்னார்.
84.சரியான நிறுத்தற்குறியிடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) வேலன் கடைக்குச் சென்றான். பொருள்களை வாங்கினான். வீடு திரும்பினான்.
(B) வேலன் கடைக்குச் சென்றான், பொருள்களை வாங்கினான், வீடு திரும்பினான்.
(C) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
(D) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான். வீடு திரும்பினான்.
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
85.இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக :
சூரியன் ______ நேரத்தில் நான் பொருளை _____ வைத்தேன்.
(A) மறைந்த, மறைத்து
(B) மறைத்து, மறைந்த
(C) மரைந்த, மறைத்து
(D) மரைத்து, மறைந்த
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மறைந்த, மறைத்து
86.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
(A) தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத் தணிந்தது.
(B) மெல்ல மெல்லத் தணிந்தது தீயின் ஜ்வாலை
(C) தீயின் ஜ்வாலை மெல்லத் மெல்ல தணிந்தது
(D) தணிந்தது தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத்.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத் தணிந்தது.
87.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் :
முளையிலே விளையும் தெரியும் பயிர்
(A) விளையும் முளையிலே தெரியும் பயிர்
(B) பயிர் தெரியும் விளையும் முளையிலே
(C) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(D) முளையிலே பயிர் தெரியும் விளையும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) விளையும் பயிர் முளையிலே தெரியும்
88.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
(A) தேன்மொழி திருக்குறள் கற்றாள்.
(B) தேன்மொழியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது.
(C) தேன்மொழி திருக்குறள் கற்பித்தாள்.
(D) தேன்மொழி திருக்குறள் கற்பிக்கவில்லை.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தேன்மொழி திருக்குறள் கற்றாள்.
89.பொருந்தா இணையைக் கண்டறிக.
I.நீங்கள் கட்டளையிடுங்கள் – செய்வினை
II.சட்டி உடைந்து போயிற்று – செயப்பாட்டு வினை
III. அவன் திருந்தினான் – தன்வினை
IV.வெந்நீர் ஆறுகிறது – பிறவினை
(A) II
(B) IV
(C) I
(D) III
(E) விடை தெரியவில்லை
விடை: (B) IV
90.வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
(A) பிறவினை
(B) தன்வினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டு வினை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) செய்வினை
91.‘ஆட்டு’ எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவென கண்டறிக.
(A) கூட்டம்
(B) மந்தை
(C) நிரை
(D) கொட்டில்
(E) விடை தெரியவில்லை.
விடை: (B) மந்தை
92.சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (வினை மரபு)
‘கூடை’ எனும் சொல்லுடன் இணைந்து வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.
(A) முடைந்தார்
(B) பின்னினார்
(C) செய்தார்
(D) நெய்தார்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) முடைந்தார்
93.தை, மா, வீடு, நகரம்
பொருத்தமுடைய சொல் எதுவெனக் கண்டறிக.
(A) தைமா
(B) மாநகரம்
(C) தைவீடு
(D) தைநகரம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மாநகரம்
94.பொருத்தமான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.
கருமேகங்கள் வானில் திரண்டன. _____ மழை பெய்யவில்லை.
(A) ஏனெனில்
(B) ஆகவே
(C) ஆயினும்
(D) எனவே
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஆயினும்
95.சரியான இணைப்புச் சொல் எழுதுக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம் ______ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) எனவே
(B) ஏனெனில்
(C) ஆகையால்
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஏனெனில்
96.கலைச்சொற்களை அறிக.
Storm
(A) புயல்
(B) சூறாவளி
(C) சுழல் காற்று
(D) நிலக்காற்று
(E) விடை தெரியவில்லை
விடை: (A) புயல்
97.சரியான கலைச் சொல்லால் பொருத்துக.
(a) Entrepreneur 1. பண்டம்
(b) Adulteration 2. பயணப் படகுகள்
(c) Ferries 3. கலப்படம்
(d) Commodity 4. தொழில்முனைவோர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
(C) 2 1 3 4
(D) 4 2 1 3
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 4 3 2 1
98.சரியான கலைச்சொல் யாது?
Excavation
இச்சொற்களை இணைத்து வரும் புதிய சொற்களில்
(A) கல்வெட்டியல்
(B) அகழாய்வு
(C) நடுகல்
(D) புடைப்புச் சிற்பம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அகழாய்வு
99.பிழைத்திருத்தம் – (ஒரு – ஓர்)
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு.
(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(B) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(D) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
100.பிழை திருத்துதல்:
சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு.
(A) கல்வி ஒரு அணிகலன்
(B) கல்வி ஒன்று அணிகலன்
(C) கல்வி ஒன்னு அணிகலன்
(D) கல்வி ஓர் அணிகலன்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கல்வி ஓர் அணிகலன்