1. பாளையக்காரர்களிடமிருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் முறையை முதலில் எதிர்த்தவர் – பூலித்தேவர்.
2. 1529 ல் மதுரை நாயக்கராக பதவி ஏற்றவர் - விஸ்வநாத நாயக்கர்.
3. விஸ்வநாதரரின் அமைச்சர் - அரியநாதர் உடன் கலந்தாலோசித்து பாளையக்காரர் முறையை ஏற்படுத்திய ஆண்டு-1529.
4. நாடு எத்தனை பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது-72.
5. பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் 1/3 பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும் 1/3 பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்தசெலவிற்கு வைத்துக்கொண்டனர்.
6. கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் - கட்டபொம்மன் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
7. மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் - பூலித்தேவர் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
8. இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் – பூலித்தேவர்.
9. திருநெல்வேலி அருகிலிருந்த நெற்கட்டும் செவல் பாளையத்தின் பாளையக்காரர் – பூலித்தேவர்.
10. பூலித்தேவர் யாருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்க்கத் தொடங்கினார் : ஆற்காட்டு நவாபான முகமது அலி , ஆங்கிலேயர்.
11. ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப் படைகள் புலிதேவரால் -- திருநெல்வேலி இல் தோற்கடிக்கப்பட்டனர்.
12. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் – பூலித்தேவர்.
13. யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கிய ஆண்டு -1759 .
14. பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட இடம் - அந்தநல்லூர்
15. ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவ்வலைக் கைப்பற்றியது ஆண்டு- 1761.
16. பூலித்தேவர் நெற்கட்டும் செவ்வலைக் மீண்டும் கைப்பற்றிய ஆண்டு-1764.
17. 1767 பூலித்தேவரை தோற்கடித்தவர்- கேப்டன் கேம்பெல்.
18. கட்டபொம்மன் முன்னோர்கள் - ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
19. பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்தவர்- ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
20. நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரரானவர்- கட்டபொம்மன்.
21. கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மாள்.
22. கட்டபொம்மன் சகோதரர்கள் - ஊமைத்துரை, செவத்தையா.
23. 1792 கர்நாடக உடன்படிக்கையின் படி பாளையக்காரர்கள் இடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை பெற்றவர்- கர்நாடக நவாப்.
24. கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியம் உடன் இராமநாதபுர கலெக்டரை காலின் ஜாக்சன் சந்தித்த ஆண்டு -1798.
25. 1080 பகோடா பாக்கி வரியை தவிர கட்டபொம்மன் செலுத்திவிட்டதை கணக்குகள் சரிபார்த்தலுக்குப் பின் அறிந்த ஜாக்சன் சமாதானமடைந்தார்.
26. கட்டபொம்மன் ,அமைச்சர் சிவசுப்பிரமணியம் ஜாக்சனின் முன்- எத்தனை மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனர் - 3 மணி நேரம்.
27. கட்டபொம்மனை தப்பிக்க உதவி செய்தவர் – ஊமைத்துரை.
28. கட்டபொம்மனை சரணடைய ஆணையிட்ட சென்னை ஆளுநர் - எட்வர்ட் கிளைவ்.
29. கலெக்டர் ஜாக்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்குப்பின் கலெக்டராக நியமிக்கப்பட்டவர்- S.R. லூசிங்டன்.
30. பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் - மருது சகோதரர்கள்.
31. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்டது- திருச்சிராப்பள்ளி அறிக்கை.
32. மேஜர் பானர்மேன் தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்திய நாள்- 1799 செப்டம்பர் 5.
33. கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் கைது செய்யப்பட்டவர் – சிவசுப்ரமணியம்.
34. கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் கட்டபொம்மன் தப்பி சென்ற இடம் – புதுக்கோட்டை.
35. களபூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை கைது செய்து கம்பெனியிடம் ஒப்படை புதுக்கோட்டை மன்னர் - ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
36. கட்டபொம்மனுக்கு மரண தண்டனையை விதித்தவர்- பானர்மேன்.
37. சிவசுப்பிரமணியம் சிரச்சேதம் செய்யப்பட்ட இடம் – நாகலாபுரம்.
38. பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார் நாள்-1799அக்டோபர்16.
39. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - 1799 அக்டோபர் 17.
40. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கோட்டை - கயத்தாறு.
41. வேலுநாச்சியார் எந்த வயதில் சிவகங்கையின் மன்னர் இராஜா முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார் – 16.
42. ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சிவகங்கையின் மீது போர் தொடுத்த ஆண்டு-1772.
43. காளையார்கோயில் போரில் கொல்லப்பட்டவர்- முத்துவடுகநாதர்.
44. வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாச்சியில் யாருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்- கோபால நாயக்கர்.
45. வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி மற்றும் தொண்டர் – குயிலி.
46. வேலுநாச்சியார் யார் உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியாக முடிசூட்டிக்கொண்டார்- மருது சகோதரர்கள்.
47. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்தியப் பெண்ணரசி - வேலு நாச்சியார்.
48. தமிழர்களால் 'வீரமங்கை' எனவும் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' எனவும் அறியப்படுபவர்- வேலு நாச்சியார்.
49. பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யாபழனியப்பன் ஆகியோரின் மகன்கள்-மருது சகோதரர்கள்.
50. மூத்த சகோதரர் - பெரிய மருது - வெள்ளை மருது.இளைய சகோதரர் - சின்ன மருது.
51. மருதுபாண்டியன் என்றழைக்கப்பட்டவர்- சின்ன மருது.
52. சிவகங்கையின் மன்னர் முத்துவடுக நாத பெரிய உடையதேவரிடம் பணிபுரிந்தவர்- சின்ன மருது.
53. சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டவர்- சின்னமருது.
54. ஊமைத்துரையும் ,செவத்தையாவும் பாளையங்கோட்டைசிறையிலிருந்து தப்பித்து கமுதியைவந்தடைந்த நாள்- பிப்ரவரி 1801.
55. மருது சகோதரர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றவர்கள் - கர்னல் அக்னியூ,கர்னல் இன்ஸ்.
56. திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்றழைக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் வெளியிட்ட நாள் - ஜூன் 1801.
57. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டனர்- மருது சகோதரர்கள்.
58. திருச்சிராப்பள்ளி பிரகடனம் ஒரு நகல் ஆற்காடு நவாபின் அரண்மனையான, திருச்சி கோட்டை சுவரிலும் மற்றொரு நகல் ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது.
59. ஆங்கிலேய படைகளுக்கு மேலும் வலுவூட்ட, வங்காளம் இலங்கை, மலாயா போன்ற இடங்களிலிருந்து படைகள் வரவழைக்கப்பட்டன.
60. ஆங்கிலேயருக்கு ஆதரவளித்த மன்னர்கள்- புதுக்கோட்டை, எட்டயபுரம் ,தஞ்சாவூர்.
61. எத்தனை வீரர்களை சின்னமருது, ஆங்கிலபடைக்கு எதிரிராக திரட்டினார்-20,000.
62. தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை ஆங்கிலேயர் தாக்கிய ஆண்டு - மே 1801.
63. ஆங்கிலேயர்கள் சிவகங்கையை இணைத்துக்கொண்ட ஆண்டு – 1801.
64. மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - 1801 அக்டோபர் 24.
65. ஊமைத்துரை ,செவத்தையா பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்ட நாள்-1801நவம்பர்16.
66. மலாயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர் கிளர்ச்சியாளர்கள் - 73 பேர்.
67. வேல்ஸ் இளவரசர் தீவு என அழைக்கப்பட்டது - மலாயாவின் பினாங் தீவு.
68. இரண்டாவது பாளையக்காரர் போர் என்று கூறப்பட்டது -1800 – 1801.
69. கர்நாடக உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது-1801 ஜூலை 31.
70. தீரன் சின்னமலை பிறந்த மாவட்டம் – ஈரோடு – சென்னிமலை- மேலப்பாளையம்.
71. தீரன் சின்னமலை இயற்பெயர் - தீர்த்தகிரி.
72. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர்- தீரன் சின்னமலை.
73. கொங்கு நாடு உள்ளடக்கிய பகுதி:
1. சேலம்
2. கரூர்
3. திண்டுக்கல்
4. கோயம்புத்தூர்
74. தீரன் சின்னமலை நவீன போர் முறைகளில் பயிற்சி பெற்ற இராணுவம் - பிரெஞ்சு.
75. திப்புசுல்தான் இறந்தபிறகு, ஓடாநிலை இல் தங்கி ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்து போராட ஒரு கோட்டையைக் கட்டியவர் - தீரன் சின்னமலை.
76. தீரன் சின்னமலை கோயம்புத்தூரில் ஆங்கிலேயரைத்தாக்க, 1800 ல் யாருடைய உதவியைப் பெற முயன்றார்- மராத்தியர் , மருதுசகோதரர்கள்.
77. காவேரி,ஓடாநிலை,அரச்சலூர் இடங்களில் நடைபெற்ற போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தவர்- தீரன் சின்னமலை.
78. சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் -1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
79. வேலூர் கலகம் நடைபெற்றது – 1806 ஜூலை 10.
80. நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் சிறைவைக்கப்பட்ட இடம் - வேலூர் கோட்டை.
81. 1803 சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் - வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
82. ஜூன் 1806ல் ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய இராணுவத் தளபதி – அக்னியூ.
83. இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் அக்னியூ தலைப்பாகையை எதிர்த்தனர்.
84. ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தமுயன்றவர்- திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர்.
85. ஜூலை 10 ஆம் நாள் விடியற்காலை, முதலாவது , 23 வது படைப்பிரிவுகளைச் சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர்.
86. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியானவர்- கர்னல் பான்கோர்ட்.
87. கிளர்ச்சியாளர்கள் யாரை தங்களின் புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்-பதே ஹைதர்.
88. கோட்டையின் வெளியே இருந்த இராணிப்பேட்டைக்கு விரைந்து கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தவர்- மேஜர் கூட்ஸ்.
89. கலகத்தில் கொல்லப்பட்டகள்- 113 ஐரோப்பியர்கள் , 350 சிப்பாய்கள்.
90. திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து - கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
91. வேலூர் கலகத்தின் விளைவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் -- வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
92. பொருத்துக:
1. சிவகங்கை - மருது சகோதரர்கள்
2. திருநெல்வேலி - பாளையக்காரர்
3. திண்டுக்கல் - கோபால நாயக்கர்
4. மலபாரின் - கேரளவர்மன்
5. மைசூரின் - கிருஷ்ணப்பநாயக்கர்
6. துண்டாஜி - கன்னட மராத்தியர்