ஒளியியல் (8th அறிவியல்)

1.       ஒளி நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் மீது பட்டு எந்த நிகழ்வு நிகழ்வதன் மூலம் நம்மால் பொருள்களை காணமுடிகிறது – எதிரொளித்தல்.


2.       ஒளி என்பது ஒரு வகை – ஆற்றல்.


3.       ஒளியானது எந்த கோட்டில் செல்லும் – நேர்க்கோட்டில்.


4.       சமதள ஆடிகளை போன்ற பளபளப்பான பொருள்களின் – ஒளி எதிரொலிக்கிறது.


5.       ஒளியை எதிரொளிக்கும் பண்பினைப் பெற்றுள்ள பளபளப்பான ஒளியியல் சாதனம்– ஆடி.


6.       ஒரு புறம் அலுமினியம் (அ) வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடித்துண்டு என்பது- ஆடி.


7.       சமதள மற்றும் வளைந்த பரப்புடையவை – ஆடிகள்.


8.       வளைந்த பரப்புடைய ஆடிகளுக்கு எ.கா :

i.          கோளக ஆடிகள்

ii.           உருளை ஆடிகள்

iii.        பரவளைய ஆடிகள்

iv.        நீள்வட்ட வடிவ ஆடிகள்


9.       ஆடியில் உருவாகும் வடிவத்தை தீர்மானிப்பது எது - ஆடியின் வடிவம்.


10.      ஒரு பொருளின் சரியான பிம்பத்தை உருவாக்குவது - சமதள ஆடி.


11.      வளைந்த ஆடிகள் ஒரு கோளத்தின் பகுதியாகக் கருதப்பட்டால் அது- கோளக ஆடிகள்.


12.      கோளக ஆடியின் வளைந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது - குழி ஆடி.


13.      கோளக ஆடியின் அருகில் வைக்கப்பட பொருளினை பெரிதாக்கிக் காட்டும் ஆடி- குழி ஆடி .


14.      அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி எந்த ஆடி - குழி ஆடி.


15.      கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது - குவி ஆடி.


16.      பொருளின் அளவை விட - சிறிய பிம்பத்தை உருவாக்கும் ஆடி - குவி ஆடிகள்.


17.      சாலைகளில் பின்புறம் வரும் வாகனங்களை காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடி - குவி ஆடி.


18.      பின்புற பார்வை கண்ணாடியாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆடி - குவி ஆடி


19.      பரவளையத்தைப் போன்றே வளைந்த பரப்புடைய ஆடிகள் - பரவளைய ஆடிகள்.


20.      பரவளைய ஆடிகள் எந்தக் கருவியில் பயன்படுகின்றன :

i.          எதிரொலிக்கும் தொலைநோக்கி

ii.         ரேடியோ தொலைநோக்கி

iii.        நுண்அலை தொலைபேசிக் கருவி


21.      சூரிய சமயற்கலன்கள், சூரிய வெப்ப சூடேற்றி, ஆகியவற்றில் பயன்படும் ஆடி- பரவளைய ஆடி.


22.      எந்தக் காலத்திலிருந்தே பரவளைய ஆடி வேலைசெய்யும் தத்துவம் அறியப்பட்டது- கிரிக்கோ-ரோமன்.


23.      பரவளைய ஆடியின் வடிவம் பற்றி தகவல் , கணித வல்லுநர் டையோகிள்ஸ் எழுதிய எந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது- எரிக்கும் ஆடிகள்.


24.      10-ம் நூற்றாண்டில் பரவளைய ஆடிகளை பற்றி கற்றறிந்த இயற்பியலாளர் - இபின் ஷால்


25.      முதலாவது பரவளைய ஆடியை எதிரொளிக்கும் வானலை வாங்கி (anienna) வடிவில் வடிவமைத்தவர் யார் - ஹென்றி ஹெர்ட்ஸ்.


26.      ஆடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம் எவ்வாறு குறிக்கப்படுகிறது - வளைவு மையம்.


27.      வளைவு மையம் வரைபடங்களில் எந்த ஆங்கில எழுத்தில் குறிக்கப்படுகிறது- C.


28.      ஆடிமையம் என்பது கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆகும். இது எந்த ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது- P.


29.      கோளத்தின் மையத்திற்கும் அதன் முனைக்கும் இடைப்பட்ட வளைவு மையம் தொலைவு - வளைவு ஆரம்.


30.      ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு - முதன்மை அச்சு .


31.      ஆடி மையத்திற்கும்,முதன்மை குவியத்திற்க்கும் இடைப்பட்ட தொலைவு-குவியதொலைவு


32.      கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பம் எத்தனை வகைப்படும் : 2.

i.          மெய் பிம்பம்

ii.          மாய பிம்பம்


33.      திரையில் பிடிக்க இயலும் பிம்பம் - மெய் பிம்பம்.


34.      திரையில் பிடிக்க இயலாத பிம்பம் - மாய பிம்பம்.


35.      பொருளானது ஆடியை விட்டு விலகி செல்ல செல்ல பிம்பத்தின் அளவானது - சிறிதாக இருக்கும்.


36.      குழி ஆடி எப்போதும் - தலைகீழான மெய்ப்பிம்பத்தை உருவாக்குகிறது.


37.      ஆனால் குவியத்திற்க்கும் ஆடி மையத்திற்கும் இடையில் பொருள் வைக்கப்படும் போது மட்டும் நேரான மாயபின்பம் ஏற்படும்.


38.      குவி ஆடியில் பொருளானது ஈரில்லாத் தொலைவில் வைக்கப்படும் பொழுது எந்த பிம்பம் தோன்றுகிறது- நேரான மாயபிம்பம்.


39.      குழி ஆடியில் பொருளானது ஈரில்லாத் தொலைவில் வைக்கப்படும் பொழுது எந்த பிம்பம் தோன்றுகிறது- தலைகீழான மெய்பிம்பம்.


40.      அலங்கார கண்ணாடியாகவும், முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படும் ஆடி- குழி ஆடி.


41.      டார்ச் விளக்குகள், தேடுவிளக்குகள் , வாகனங்களின் முகப்பு விளக்குகள்  சூரிய சமையர்கலன்களில் பயன்படும் ஆடி- குழி ஆடி.


42.      நிழலை ஏற்படுத்தாமல் பொருள்களை தெளிவாக காண்பிப்பதால் மருத்துவர்கள் கண், காது மற்றும் தொண்டைப் பகுதியினை பார்க்க அவர்கள் அணிந்திருக்கும் கலைக்கண்ணாடி பயன்படும் ஆடி - குழிஆடிகள்.


43.      வாகனங்களில் பின்புறம் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு பயன்படும் ஆடி- குவிஆடி


44.      மருத்துவமனை, தங்கும் விடுதிகள், பள்ளிகள் ,அங்காடிகளில் பயன்படுவது- குவி ஆடி.


45.      கட்டிடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் (அ) கூரைகளில் பொருத்தப்பட்டுருக்கும் ஆடி- குவி ஆடி.


46.      சாலைகளில் மிகவும் குறுகிய நுட்பமான வளைவுகளில் எந்த ஆடிகள் பயன்படுகின்றன- குவி ஆடி.


47.      பளபளப்பான மென்மையான பரப்பில் பட்டு ஒளி திரும்பும் நிகழ்வு – எதிரொளித்தல்.


48.      ஒளி எதிரொளித்தலில் இரு கதிர்கள் ஈடுபடுகின்றன :

i.          படுகதிர்

ii.         எதிரொளிப்பு கதிர்


49.      ஒரு ஊடகத்தில் எதிரொலிக்கும் பரப்பின் பளபளப்பான தளத்தின் மீது படும் கதிர்- படுகதிர்.


50.      ஒளியானது பரப்பின் மீது பட்ட பிறகு, அதே ஊடகத்தில் திரும்ப வரும் ஒளிக்கதிர்- எதிரொளிப்பு கதிர்.


51.      மிகச் சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருள் – வெள்ளி.


52.      ஒழுங்கற்ற எதிரொளிப்பு எ.கா : சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு.


53.      இரு கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட கோணம் – 360.


54.      ஒழுங்கான எதிரொளிப்புக்கு எ.கா :

i.          சமதள கண்ணாடியில் உருவாகும்  எதிரொளிப்பு .

ii.         நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு.


55.      ஒரே ஒரு பொருளானது மூன்று பிம்பங்களாக கண்ணாடியில் தெரிவது- பன்முக எதிரொளிப்பு.


56.      ஒளியின் பன்முக எதிர்ரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவி – கலைடாஸ்கோப்.


57.        விலைகுறைந்த பொருள்களை கொண்டு வடிவமைக்கப்படக் கூடிய கருவி- கலைடாஸ்கோப்.


58.      குழந்தைகளால் விளையாட்டு பொருளாக பயன்படுவது – கலைடாஸ்கோப்.


59.      நீர்முழ்கி கப்பலுக்கு மேலாகவோ (அ) அதை சுற்றியோ உள்ள பிற பொருள்களை (அ) கப்பல்களை பார்பதர்க்கான கருவி- பெரிஸ்கோப்.


60.      எந்த விதிகளின் அடிப்படையில் பெரிஸ்கோப்பானது செயல்படுகிறது- ஒளி எதிரொளித்தல்.


61.       போரின் போதும், நீர் மூழ்கிக் கப்பல்களை வழிநடத்தவும் பயன்படும் கருவி – பெரிஸ்கோப்.


62.       இராணுவத்திற்கு பதுங்கு குழியிலிருந்து இலக்கினை குறிபார்பதற்கும், சுடுவதற்கும் பயன்படும் கருவி – பெரிஸ்கோப்.


63.       உடல் உள்ளுறுப்புகளைப் பார்ப்பதற்கு மருத்துவார்களால் பயன்படுத்தபடும் கருவி - ஒளியிழை பெரிஸ்கோப்.


64.      ஒளிவிலகல் எண்ணிற்கு அலகு – இல்லை.


65.      காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது- தனித்த ஒளிவிலகல் எண் (p).


66.      வெள்ளை - ஒளியானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு , சிகப்பு (VIBGYOR) என 7 வண்ணங்களாக நிறப்பிரிகை அடைகிறது.


67.      ஒளிக்கதிர்கள் ஓர் ஊடகதிலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பயணிக்கும் பொழுது உட்படும் விதி - ஸ்நெல் விதி.


68.       வெள்ளொளிக் கதிர்களின் நிறப்பிரிக்கைக்கு எ.கா – வானவில்.


69.      வானவில் சூரியனுக்கு எந்த திசையில் தோன்றும் - சூரியனுக்கு எதிர் திசையில்.


70.      குவியதொலைவானது வளைவு ஆரத்தில் - பாதியளவு இருக்கும்.


71.       ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு 10.செ.மீ. எனில் அதன் வளைவு ஆரம் - 20 செ.மீ.


72.      நீரின் ஒளிவிலகல் எண் - 1.33


73.      அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோகோளக ஆடி - குழி ஆடி


74.        கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி - குழி ஆடி.


75.      பொருத்துக:

i.          குவி ஆடி-பின்னோக்குப் பார்வை ஆடி

ii.         பரவளைய ஆடி -  ரேடியோ தொலைநோக்கிகள்

iii.        ஒழுங்கான எதிரொளிப்பு-   சமதளக் கண்ணாடி

iv.         ஒழுங்கற்ற எதிரொளிப்பு-   சொரசொரப்பான சுவர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.