சமத்துவம்
1. சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும் கூறியவர் - பேராசிரியர் லாஸ்கி.
2. முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும். இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் கூறியவர் - பேராசிரியர் லாஸ்கி.
3. சமத்துவத்தின் வகைகள்:
1. சமூக சமத்துவம்
2. குடிமை சமத்துவம்
3. அரசியல் சமத்துவம்
4. பாலின சமத்துவம்
4. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, கூறிய பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் - ஏ.வி டைசி.
5. மக்களாட்சி நாடுகளில் குடிமக்களுக்கு வழங்கப்படும் அரசியல் உரிமைகள்:
1. வாக்களிக்கும் உரிமை.
2. பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை.
3. அரசியல் விமர்சனம் செய்யும் உரிமை.
6. சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு உள்ள நாடு – இங்கிலாந்து.
7. வாக்களிக்கும் உரிமை, பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை ,அரசை விமர்சனம் செய்யும் உரிமை - அரசியல் சமத்துவம்.
8. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வயது – 18.
9. பொதுத் தேர்தலில் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு – 1952.
10. சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு- 1971.
11. இந்தியாவில் அனைவரும் தேர்தலில் போட்டியிடும் வயது – 25.
12. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதம் - 50%.
13. ஆண் , பெண் இருபாலரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் - பாலின சமத்துவம்.
14. 2017 ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது- 5 வது.
15. 19 நூற்றாண்டிலிருந்து பெண்களின் முன்னற்றத் திற்காக பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு பணியாற்றியவர்கள்:
1. ராஜா ராம் மோகன் ராய்
2. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
3. தயானந்த சரஸ்வதி
4. மகாதேவ் கோவிந்த ரானடே
5. தாராபாய் ஷிண்டே
6. பேகம் ருகோயா
7. சகாவத் உசேன்
16. சமத்துவ உரிமை பற்றி குறிப்பிடும் சரத்து- சரத்து 14 - 18.
17. சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டப்பிரிவு - 14.
18. பாகுபாட்டை தடை செய்வது - சட்டப்பிரிவு - 15.
19. பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு-சட்டப்பிரிவு – 16.
20. தீண்டாமை ஒழிப்பு - சட்டப்பிரிவு -17.
21. பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்வது - சட்டப்பிரிவு -18.
22. சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு எந்த நாட்டில் உள்ளது - இங்கிலாந்து, இந்தியா.
23. அனைத்து குடிமக்களுக்கும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது -குடிமை சமத்துவம்.
24. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு – இந்தியா.
25. மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள்- சுதந்திரம், சமத்துவம்.
26. மக்களாட்சியின் தூண்கள் - சமத்துவம், நீதி.
27. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது- சட்டப்பிரிவு-21
28. பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்றுபோல் நடத்தப்படவேண்டும் என கூறிய நிறுவனம் - யூனிசெப்.
29. தேர்தலில் போட்டியிடும் உரிமை - அரசியல் உரிமை.
30. அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது - அரசியல் சமத்துவம்.
அரசியல் கட்சிகள்
1. அரசியல் கட்சியும் மூன்று கூறுகள் :
1. தலைவர்
2. செயல் உறுப்பினர்கள்
3. தொண்டர்கள்
2. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது :
1. 5 ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
2. வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% ஓட்டுக்களை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
3. கட்சி முறைகளின் வகைகள்: 3 .
1. ஒரு கட்சி முறை
2. இரு கட்சி முறை
3. பல கட்சி
4. முறை
4. ஒரு கட்சி முறை:
1. சீனா
2. வடகொரியா
3. கியூபா
5. இரு கட்சி முறை:
1. பிரிட்டன் - தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி .
2. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் -குடியரசுக் கட்சி,ஜனநாயகக் கட்சி.
6. பல கட்சி முறை:
1. இந்தியா
2. பிரான்ஸ்
3. ஸ்வீடன்
4. நார்வே.
7. இந்தியாவில் கட்சி முறை 19 - நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது.
8. இந்தியாவில் கட்சிகளின் மூன்று படிநிலை:
1. தேசியக் கட்சிகள்
2. மாநிலக் கட்சிகள்
3. சுயேட்சைகள் கட்சிகள்
9. தேசியக்கட்சிகள் அங்கிகாரம்:
1. மக்களவைத் தேர்தலில் (அ) நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
2. ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
3. இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
10. மாநில கட்சிகள் அங்கிகாரம்:
1. மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
2. 25 - தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி (அ) சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல்வேண்டும்.
3. மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
11. மக்களாட்சியின் முதுகெலும்பு - அரசியல் கட்சிகள்.
12. எதிர்க்கட்சித் தலைவர் பெரும் அந்தஸ்து - கேபினட் அமைச்சர்.
13. 1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி உள்ள வகை : 2 வகை.
1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள்.
2. ஒதுக்கப்படாத சின்னங்கள்.
14. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஒதுக்கப்படும் சின்னம்-ஒதுக்கப்பட்ட சின்னம்.
15. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்- ஒதுக்கப்படாத சின்னம்.
16. எதிர்க்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்தைக் கொண்டிருப்பார் -கேபினட் அமைச்சர்.
17. இந்திய தேர்தல் ஆணையம்-சுதந்திரமான அமைப்பு.
18. இந்திய தேர்தல் ஆணைய தலைமையிடம் –டெல்லி.
19. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கப்பட்டுள்ள விலங்குகளின் சின்னம் :
1. யானை
2. சிங்கம்
20. மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா ஆகிய கட்சிகள் பயன்படுத்தும் சின்னம்- வில் , அம்பு.
21. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் : 6 வகை.
1. வழங்குதல்
2. பரிந்துரைத்தல்
3. ஏற்பாடு செய்தல்
4. ஊக்குவித்தல்
5. ஒருங்கிணைத்தல்
6. ஆட்சி அமைத்தல்
22. உலகில் அதிக அளவு கட்சிகளைக் கொண்ட நாடு - இந்தியா.
உற்பத்தி
1. நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும் மூலப்பொருள் அல்லாதவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயல் –உற்பத்தி.
2. உற்பத்தியின் வகைகள் : 3.
1. முதன்மை நிலை உற்பத்தி.
2. இரண்டாம் நிலை உற்பத்தி.
3. மூன்றாம் நிலை உற்பத்தி.
3. முதன்மைநிலை உற்பத்தி - வேளாண்மை துறை.
1. சுரங்கத்தொழில்
2. மீன்பிடித்தல்
3. காடுகள்
4. வேளாண்மை
5. எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்தல்
4. இரண்டாம்நிலை - தொழில் துறை:
1. பொறியியல், கட்டுமான துறை.
2. பருத்தி தொழிற்சாலை.
3. மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல்.
4. இரும்புத்தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருட்களைத் தயாரித்தல்.
5. மூன்றாம் நிலை - சேவைத் துறை.
1. பாதுகாப்புத் துறை
2. வங்கித் துறை
3. கல்வித் துறை
4. வணிகம், வங்கி காப்பீடு
5. போக்குவரத்து, செய்தி தொடர்பு
6. சட்டம் , நிர்வாகம்
7. கல்வி, உடல்நலப் பாதுகாப்பு
6. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை - மூன்றாம் நிலை.
7. ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகள்:
1. நிலம்
2. உழைப்பு
3. முதலிடு
8. உற்பத்திக்கான காரணிகள்:
1. நிலம்
2. உழைப்பு
3. மூலதனம்
4. தொழில் முனைவோர்
9. நிலத்தின் சிறப்பியல்புகள் :
1. நிலம் இயற்கையின் கொடை.
2. நிலத்தின் மதிப்பு நிலையானது.
3. நிலம் அழிவில்லாதது.
4. நிலம் ஒரு முதன்மைச் உற்பத்தி காரணி .
5. நிலம் இடம் பெயரக் கூடியதன்று.
6. நிலம் ஆற்றல் வாய்ந்தது.
7. நிலம் செழிப்பு தன்மையில் மாறுபடும்.
10. உழைப்பு சிறப்பியல்புகள்:
1. உழைப்பை உழைப்பாளர் இடமிருந்து பிரிக்க இயலாது.
2. உழைப்பு இடம்பெயர கூடியது.
11. வேலையினால் ஏற்படும் துன்பத்தை கருதாமல் , கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ பகுதியாகவோ அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என கூறியவர்- ஆல்பிரட் மார்ஷல்.
12. மூலதனத்தின் சிறப்பியல்புகள் :
1. மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்தி காரணி.
2. மூலதனம் அதிகம் இயங்கும் தன்மை உடையது.
3. இதன் அளிப்பு நெகிழுந்தன்மை உடையது.
4. மூலதனம் ஆக்கம் உடையது.
5. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
13. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்.
14. ஆடம் ஸ்மித்தின் சிறந்த இரு படைப்பு நூல்கள் :
1. நன்னெறி கருத்து உணர்வு கொள்கை.
2. நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு (1776).
15. வேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர்- ஆடம்ஸ்மித்.
16. பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது – மூலதனம்.
17. இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகை செல்வங்களே மூலதனம் என்றவர் - ஆல்பிரட் மார்ஷல்.
18. மூலதனத்தின் வடிவங்கள் :
1. பருப்பொருள் மூலதனம் - இயந்திரங்கள்.
2. பணம் மூலதனம் - வங்கி வைப்புகள்.
3. மனித மூலதனம் – கல்வி.
19. தொழில் முனைவோர் தொழில் அமைப்பாளர் எனவும் அழைக்கப்படுகிறார்.
20. தற்காலத்தில் தொழில்முனைவோர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்- சமுதாய மாற்றம் காணும் முகவர்.
21. பயன்பாட்டின் வகைகள்:
1. வடிவம் பயன்பாடு
2. காலம் பயன்பாடு
3. இடம் பயன்பாடு
22. முதன்மைக் காரணிகள் என்பது:
1. நிலம்
2. உழைப்பு
23. பெறப்பட்ட காரணிகள்:
1. முதலீடு
2. அமைப்பு
24. நிலையான அளிப்பினை உடையது – நிலம்.
25. பொருளாதாரத்தில் இன்றியமையாத செயல்கள்:
1. உற்பத்தியும்
2. நுகர்வும்
26. மனித மூலதனம் - கல்வி, உடல் நலம்.
27. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர் – முகவர்.
28. புதுமை புனைபவர் - தொழில் முனைவோர்.
29. நாடுகளின் செல்வம் - ஆடம் ஸ்மித்.
30. தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது- கலப்பு பொருளாதாரம்.