விசையும் இயக்கமும் (7th அறிவியல்)

 

1. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் என்னவென்று அழைக்கப்படுகிறது? தொலைவு

2. ஒரு பொருளின் இயக்கத்தின்போது, அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு ____ எனப்படும்? இடப்பெயர்ச்சி

3. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எந்த அலகால் குறிப்பிடப்படுகின்றன? SI அலகு மீட்டர்(மீ) ஆகும்

4. கடல் மற்றும் வான் வழிப் போக்குவரத்தில் பயன்படுவது என்ன அலகு? நாட்டிகல் மைல்

5. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது எவ்வளவு கிமீ? 1.852 கி.மீ

6. கப்பல் மற்றும் விமானங்களின் வேகங்களை அளக்கப் பயன்படும் அலகு என்ன? நாட்

7. ஒரு நாட் என்பது என்றால் என்ன? ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்

8. தொலைவு மாறுபடும் வீதம் என்னவென்று அழைக்கப்படுகிறது? வேகம்

9. வேகம் = தொலைவு / காலம்

10. வேகத்தின் அலகு அலகு என்ன? மீட்டர்/விநாடி (மீ/வி)

11. வேகத்தின் வகைகள் யாவை? சீரான வேகம், சீரற்ற வேகம்

12. சீரான வேகம் என்றால் என்ன? ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சம தொலைவினைக் கடப்பது

13. சீரற்ற வேகம் என்றால் என்ன? ஒரு பொருள் வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு தொலைவினைக் கடப்பது

14.சராசரி வேகம் = கடந்த மொத்தத் தொலைவு / எடுத்துக்கொண்ட மொத்தக் காலம்

15. திசைவேகம் என்றால் என்ன? இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம்

16. திசைவேகம்(V) = இடப்பெயர்ச்சி / காலம்

17. திசைவேகத்தின் SI அலகு என்ன? மீட்டர்/விநாடி (மீ/வி)

18.சீரான திசைவேகம் என்றால் என்ன? ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது தனது திசையினை மாற்றாமல் சீரான கால இடைவெளியில் சீரான இடப்பெயர்ச்சியினை மேற்கொள்வது

19. சீரான திசைவேகத்திற்கு உதாரணம்? வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி

20. சீரற்ற திசைவேகம் என்றால் என்ன? ஒரு பொருளானது தனது திசையையோ அல்லது வேகத்தினையே மாற்றிக்கொள்வது

21. சீரற்ற திசைவேகத்திற்கு உதாரணம்? இரயில் நிலையத்திற்கு வரும் தொடர்வண்டியின் இயக்கம்

22. சராசரி திசைவேகம் என்பது என்ன? சராசரி திசைவேகம் = மொத்த இடப்பெயர்ச்சி /எடுத்துக்கொண்ட காலம்

23. முடுக்கம் என்றால் என்ன? திசை வேகம் மாறுபடும் வீதம் முடுக்கம்

24. முடுக்கம் வரையறை? ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது திசையிலோ மாற்றம் ஏற்பட்டால் பொருள் முடுக்கம் அடைகிறது

25. முடுக்கம்(a) = திசைவேக மாற்றம்/காலம்

26. முடுக்கத்தின் அலகு என்ன? SI அலகு? மீ / வி²

27. நேர் முடுக்கம் என்றால் என்ன? ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர் முடுக்கம்

28. எதிர் முடுக்கம் என்றால் என்ன? ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர்முடுக்கம்

29. சீரான முடுக்கம் என்றால் என்ன? ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்

30. சீரற்ற முடுக்கம் என்றால் என்ன? ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கம் சீரற்ற முடுக்கம்

31. ஈர்ப்பு மையம் என்றால் என்ன? எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் ஆகும்

32. சமநிலை என்றால் என்ன? ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை ஆகும்

33. சமநிலை எத்தனை வகைப்படும்? மூன்று வகை (உறுதிச்சமநிலை, உறுதியற்ற சமநிலை, நடுநிலை சமநிலை)

34. உறுதிச் சமநிலைக்கு உதாரணம் யாது? கூம்பானது மிக அதிகக் கோணத்திற்குச் சாய்க்கப்பட்டுப் பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்துவிடாமல் மீண்டும் பழையநிலையை அடைவது

35. உறுதியற்ற சமநிலைக்கு உதாரணம் யாது? கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்துவிடும். கூம்பினைச் சாய்க்கும்போது ஈர்ப்புமையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது. எனவே கூம்பானது கீழே விழுகிறது

36. நடுநிலை சமநிலைக்கு உதாரணம் யாது? கூம்பானது உருள்கிறது. ஆனால் அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை

37. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? அதன் ஈர்ப்பு மையம் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட வேண்டும், பொருளின் அடிப்பரப்பினை அதிகரிக்க வேண்டும்

38. ஈர்ப்பு மையத்தின் நடைமுறை பயன்பாடுகள் என்ன? மேசை விளக்குகள், காற்றாடிகள் அடிபரப்பு அகலமாக சொகுசுப் பேருந்துகளின் அடிப்பகுதியில் பொருள்கள் வைப்பு அறை, பந்தயக் கார்கள் உயரம் குறைவு மற்றும் அகலம் அதிகம்

39. பொதுவான வே்கங்கள் மனிதர்களின் நடையின் வேகம்? 1.4 மீ / வி

40. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை ____ எனப்படும்? இடப்பெயர்ச்சி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.