குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை (6th சமூக அறிவியல்)

 1. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றி வளரத் தொடங்க காரணமானவர்கள் யாவர்? மகாவீரர், கௌதம புத்தர்

2. கணா என்னும் சொலின் பொருள் என்ன? சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களைக் குறிக்கும் சொல்

3. சங்கா என்றால் என்ன? மன்றம்

4. கண சங்கங்கள் ______ மரபுகளைப் பின்பற்றின? சமத்துவ

5. முடியாட்சி அரசுகள் ______ வேத மரபுகளைப் பின்பற்றின? வைதீக

6. ஜனபதங்கள் என்பது என்ன? மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்களே ஜனபதங்கள் (பின் இவை குடியரசு, சிற்றரசு ஆனது)

7. கங்கைச் சமவெளியில் எதன் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின? இரும்பு

8. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன? 16

9. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த நான்கு முக்கிய மகாஜனபதங்கள் யாவை? மகதம் – பீகார், அவந்தி – உஜ்ஜைனி, கோசலம் – கிழக்கு, உத்திரப்பிரதேசம் வத்சம் – கோசாம்பி, அலகாபாத்

10. நான்கு மகாஜனபதங்களில் ஒரு பேரரசாக உருவானது எது? மகதம்

11. பண்டைய மகத்தின் நான்கு அரச வம்சங்கள் யாவை? ஹரியங்கா வம்சம், சிசுநாக வம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம்

12. மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி யார் காலத்தில் தொடங்கியது? ஹரியங்கா வம்சத்தைச் சார்ந்த பிம்பிசாரர்

13. பிம்பிசாரரின் மகன் யார்? அஜாதசத்ரு

14. முதல் பெளத்த சபை மாநாட்டைக் கூட்டியவர் யார்? அஜாத சத்ரு (இடம் – ராஜகிரகம்)

15. அஜாதசத்ருவின் மகன் யார்? உதயன்

16. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்? உதயன்

17. தலைநகரை ராஜகிரகத்தில் இருந்து பாடலிபுத்திரதிற்கு மாற்றியவர் யார்? சிசுநாக வம்சத்தைச் சார்ந்த அரசர் காலசோகா

18. இரண்டாம் பெளத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர் யார்? கால சோகா

19. மகத வம்சத்தில் இந்தியாவில் முதன் முறையாக பேரரசை உருவாக்கிய வம்சம் எது? நந்த வம்சம்

20. முதல் நந்தவம்ச அரசர் யார்? மகா பத்ம நந்தர் (எட்டு மகன்கள்) (அதனால் நவநந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்)

21. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்? தனநந்தர்

22. தனநந்தர் யாரால் வெற்றி கொள்ளப்பட்டார்? சந்திரகுப்த மௌரியர்

23. பண்டைய மகத நாட்டில் இருந்த பெளத்த மடாலயம் எது? நாளந்தா

24. நாளந்தா யார் காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக மாறியது? குப்தர்கள்

25. நாளந்தா என்ன மொழிச் சொல் மற்றும் பொருள் என்ன? சமஸ்கிருதம், வற்றாத அறிவை அளிப்பவர்

26. இண்டிகா என்னும் நூலை எழுதியவர் யார்? மெகஸ்தனிஸ்

27. மெகஸ்தனிஸ் யார் தூதுவராக இந்தியா வந்தார்? கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின்

28. மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்? 14

29. இந்தியாவின் முதல் பெரிய பேரரசு எது? மௌரியப் பேரரசு

30. மௌரியப்பேரரசின் தலைநகர்? பாடலிபுத்திரம் (பாட்னா)

31. மௌரியப்பேரரசின் காலம் என்ன? கிமு 322 முதல் 187 வரை

32. மௌரியப்பேரரசின் முக்கிய அரசர்கள்? சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்

33. பாடலிபுத்திரத்திற்கு எத்தனை நுழைவு வாயில் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன? 64 நுழைவு வாயில், 570 கண்காணிப்பு கோபுரங்கள்

34. மௌரியப் பேரரசை சந்திரகுப்தர் எங்கு நிறுவினார்? மகதம்

35. சந்திரகுப்தரை தென் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றவர் யார்? பத்ரபாகு என்னும் சமணத் துறவி

36. சந்திரகுப்தர் எங்கு உயிர் துறந்தார்? சரவணபெலகொலா (சல்லேகனா – உண்ணா நோன்பு)

37. சந்திரகுப்தரின் மகன் யார்? பிந்துசாரர் (இயற்பெயர் சிம்ஹசேனா)

38. யார் பிந்தூர்சாரரை அமிர்தகாத என்று அழைத்தனர்? கிரேக்கர்கள்

39. அமிர்தகாத என்பதன் பொருள் என்ன? எதிரிகளை அழிப்பவன்

40. பிந்தூர்சாரரின் மகன் யார்? அசோகர்

41. மௌரிய அரசர்களில் தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்? அசோகர்

42. மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்? அசோகர்

43. அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்? கிமு 261

44. களிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் எந்த கல்வெட்டில் விவரித்துள்ளார்? 13 வது பாறைக் கல்வெட்டு

45. அசோகர் ஓர் பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார் என்றவர் யார்? HG வெல்ஸ் வரலாற்று அறிஞர்

46. சந்த அசோகர்? தீய அசோகர்

47. தம்ம அசோகர் ? நீதிமான் அசோகர்

48. எந்த போருக்குப் பின் அசோகர் பௌத்தத்திற்கு மாறினார்? கலிங்கப் போர்

49. அசோகர் மூன்றாம் பெளத்த மாநாட்டைக் எங்கு கூட்டினார்? பாடலிபுத்திரம்

50. பௌத்தத்தை பரப்ப அசோகர் நியமித்த அதிகாரிகள் யார்? தர்ம – மகாமாத்திரர்கள்

51.அசோகருடைய ஆணைகள் மொத்தம் எத்தனை? 33

52. பேராணை என்றால் என்ன? அரசர் அல்லது உயர்பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்

53. அசோகர் கல்வெட்டுகளில் எழுத்து முறை? சாஞ்சி – பிராமி, காந்தகார் – கிரேக்கம் மற்றும் அராமிக், வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி

54. மௌரிய அரசருக்கு உதவிய அமைச்சரவை எது? மந்திரிபரிஷித்

55. அமைச்சரவையில் இருந்தவர்கள் யாவர்? புரோகிதர், சேனாதிபதி, மகாமந்திரி, இளவரசன்

56. பாலி மற்றும் பாகா என்னும் வரிகளைக் குறிக்கும் கல்வெட்டு எது? லும்பினியில் உள்ள அசோகரது கல்வெட்டு

57. மௌரிய வருவாய் முறையில் எது அதிக வருவாயை ஈட்டித் தந்தது? நிலம்

58. மௌரிய நீதித்துறையின் தலைவர் யார்? அரசர்

59. மௌரிய ராணுவ நிர்வாகத்தில் தலைமைத் தளபதி யார்? அரசர்

60. மௌரிய நகர் நிர்வாகத்தை நிர்வகித்தவர் யார்? நகரிகா என்னும் அதிகாரி

61. செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? மாஸாகாஸ்

62. ஹெலனிக் என அழைக்கப்பட்ட நாடு எது? கிரேக்கம்

63. காமரூபா என அழைக்கப்பட்டது எது? அஸ்ஸாம்

64. சிறப்பு மிகக் துணிகள் உற்பத்தி செய்ததை குறிக்கும் நூல் எது? அர்த்தசாஸ்திரம்

65. யக்க்ஷன் என்பது யார்? நீர் வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள்

66. தர்மசக்கரம் எங்கு உள்ளது? சாரநாத்தில் உள்ள ஒற்றைக் கல் தூண்

67. அசோகரின் பேரன் தசரத மௌரியரின் கல்வெட்டு எங்கு உள்ளது? நாகர்ஜுனா கொண்டா

68. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் யார்? பிருகத்ரதா

69. பிருகத்ரதா யாரால் கொல்லப்பட்டார்? அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கர்

70. சுங்க அரச வம்சத்தை நிறுவியவர் யார்? புஷ்யமித்ர சுங்கர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.