செல்
1.
செல்லின் வகைகள் எத்தனை ? இரண்டு
2.
தெளிவான உட்கரு காணப்படும் செல் ? யுகேரியாடிக்
செல்
3.
புரோகேரியாட்டிக் செல்லில் எது கிடையாது? தெளிவான
உட்கரு
4.
புரோகேரியாட்டிக் செல்லில் காணப்படுவது? பாக்டீரியா மற்றும் சயனோ பாக்டீரியா
5.
தாவர செல் மற்றும் விலங்கு செல் எந்த செல்லின் வகையில் வரும் ? யுகேரியாடிக் செல்
6. ஒரு உயிரினத்தின் அடிப்படை பண்புகளையும் செயல்பாடுகளையும்
கட்டமைப்பது எது? செல்
7.
மைக்ரோ கிராபியா என்ற நூலை வெளியிட்டவர்? ராபர்ட்
ஹூக்
8.
செல் என்ற சொல்லினை முதன் முதல் முறை பயன்படுத்தி திசுக்களின் அமைப்பு விளக்கியவர்?
ராபர்ட் ஹூக்
9.
லத்தின் மொழியில் செல்லுலா என்பதன் பொருள் என்ன? சிறிய அறை
10.
செல்லை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு? செல்
உயிரியல்
11.
செல்லின் பல்வேறு பணிகளை செய்வதற்காக செல்களில் காணப்படும் பல உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செல் நுண்ணுறுப்புகள்
12.
செல்லின் அளவு என்ன? செல்லின் அளவானது மைக்ரோ
மீட்டரில் இருந்து சில சென்டிமீட்டர் வரை
13.
செல்லினை கண்களால் காண இயலுமா? இயலாது
14. செல்லினை எதன் வழியாக பார்க்கலாம்? கூட்டு நுண்ணோக்கி வழியாக
15.
பாக்டீரியா எந்த செல்லால் ஆனது? ஒரே செல்லால் ஆனது
16.
பாக்டீரியாவின் அளவு என்ன? 0.1 முதல் 0.5 மைக்ரோ
மீட்டர் வரை
17.
நெருப்பு கோழியின் முட்டையின் அளவு என்ன? 170
மில்லி மீட்டர் விட்டம்.
18.
நமது உடம்பில் மிக நீளமான செல்? நரம்பு செல்
19.
ஒரு செல் உயிரினத்துக்கு எடுத்துக்காட்டுகள்?
பாக்டீரியா ,அமீபா கிளாமிடோமோனஸ் மற்றும்
ஈஸ்ட் போன்றவைகள்.
20.
பல செல் உயிர்களுக்கு எடுத்துக்காட்டு ? ஸ்பைரோகைரா ,மாமரம் மற்றும் மனிதன்
21.
பாக்டீரியா உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நியூக்ளியாய்டு.
22.
புவியில் முதன் முதலில் உருவான செல் எது? புரோகேரியாட்டிக்
செல்
23.
புரோகேரியாட்டிக் செல்லின் அளவு? செல் 0.003 மைக்ரோ மீட்டர் முதல் 20 மைக்ரோ மீட்டர்
வரையான விட்டம் உடையது
24.
தாவர செல் விலங்கு செல் எந்த செல் வகையைச்
சார்ந்தது? யூகேரியாட்டிக் செல்கள்
25.
விலங்கு செல்களை விட பெரியது எது? தாவர செல்
26.
எந்த செல் வெளிப்புறத்தில் செல் சுவரையும் செல்சவ வினையும் கொண்டுள்ளது? தாவர செல்
27.
தாவரத்திற்கு உணவு தயாரிப்பதற்கு எது பயன்படுகிறது? பச்சையம்
என்னும் நிறமி
28.
கடின தன்மை மிக்க தாவர செல்லில் காணப்படாதது?
சென்ட்ரியோல்கள்.
29.
செல்சுவர் மற்றும் பசுங்கணிகம் காணப்படாத செல்?
விலங்கு செல்
30.
நியூக்ளியோலஸ் காணப்படும் செல்? யூகேரியாட்டிக் செல்
31.
செல்லிற்கு பாதுகாப்பு அளித்து சொல்லின் போக்குவதற்கு உதவுபவது? செல் சவ்வு
32.
செல்லுக்கு தேவையான அதிக சக்தியை தருவது? மைட்டோகாண்டிரியா
33.
செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது?
மைட்டோகாண்ட்ரியா
34.
சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க உதவுவது? பச்சையம்
என்ற நிறமி
35.
செல்லின் உணவு தொழிற்சாலை எது? பசுங்கணிகம்
36.
உணவு, நீர் மற்றும் வேதிப் பொருட்களை சேமிக்கும் நுண்குமிழ்கள எவ்வாறு அழைக்கப்படுகிறது? சேமிப்பு
கிடங்கு
37.
செல்லின் மூளையாக செயல்படுவது? உட்கரு (நியூக்ளியஸ்)
38.
செல்லின் அனைத்து செயல்களையும் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது? உட்கரு
39.
செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? உட்கரு.
40.
நியூக்ளியஸ் சுற்றி பாதுகாப்பது? நியூக்ளியஸ் உறை
41.
சயனோ பாக்டீரியா எந்த செல் வகையைச் சார்ந்தது?
புரோகேரியாட்டிக் செல்
42.
உயிரினங்களின் அடிப்படை அமைப்பும் மற்றும் செயல் அலகு எது? செல்
43.
கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியவர்? ராபர்ட் ஹூக்
44.
நம்மால் வெறும் கண்களால் காண இயலாது ஏன்? செல்கள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் வெறும்
கண்களால் காண இயலாது
45. ராபர்ட் ஹூக்
மைக்ரோ கிராபியா என்னும் நூலை வெளியிட்ட ஆண்டு? 1665
46.
செல்கள் அனைத்தும் ஒரே பணியை செய்கின்றதா? இல்லை.
உடலில் எப்பகுதியில் செல் காணப்படுகிறதோ,சிறப்பத்தன்மையுடன்
அந்த உறுப்பின் நுட்பமான பணிகளை செய்கிறது.
47.
ஒரு மைக்ரோ மீட்டர் என்பது? ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி
48.
கோழி முட்டையின் செல்? ஒரு தனிச் செல்.
49.
முட்டை ஓட்டின் உட்புறம் காணப்படும் மெல்லிய சவ்வு எதனை குறிக்கிறது? செல் சபை
குறிக்கிறது
50.
வரிசைப்படுத்துக (சிறியதிலிருந்து பெரியது வரை) 1.வைரஸ் 2.பாக்டீரியா செல் 3.தாவர செல் 4.மனித கரு செல் 5.தவளை முட்டை 6.கோழி முட்டை 7.நெருப்புக் கோழி
முட்டை
51.
ஸ்பைரோகைரா எந்த செல் எடுத்துக்காட்டு ? பல
செல்.
52.
சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் கொண்டுள்ள செல்? யூகேரியாட்டிக் செல்
53.
பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள் எந்த செல் வகையைச் சார்ந்தது? யூகேரியாட்டிக் செல்
54.
எந்த செல் 10 முதல் 100 மைக்ரான் விட்டம் கொண்டவை? யூகேரியாட்டிக்
செல்கள்
55. தாவரங்கள் மற்றும் விலங்குகள் செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? யூகேரியாட்டிக்
செல்கள்
56.
பசுங்கணிகங்கள் காணப்படும் செல்? தாவர செல்
57.
சிறிய நுண்குமிழிகள் காணப்படும் செல்? விலங்கு
செல்
58.
செல்லின் முழுத் தோற்றத்தை எந்த அமைப்பில் காணலாம்? செல்லின்
முப்பரிமாண அமைப்பில் காணலாம்.
59.
கோள வடிவம் என்பது? முப்பரிமாண படம்
60.வட்ட
வடிவம் என்பது? இருபரிமாணபடம்.
61.
செல்லில் சத்து நீரை சேமிப்பது? நுண்குமிழ்கள்.
62.
செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? செல்சுவர்
63.
மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணம் அளிப்பது? கணிகங்கள்
64.
மரபு பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவுபவது? உட்கரு.
65.
செல்லுக்கு உறுதி மற்றும் வலிமை தருவது? செல்
சுவர்.
66.
செல்லின் மூளையாக செயல்படுவது? உட்கரு.
67.
உட்கருவினை கண்டுபிடித்தவர்? ராபர்ட் பிரவுன்
68.
நியூக்ளியஸ் இன் உள்ளேயும் வெளியேயும் பொருட்களை அனுப்புவது? உட்கரு
உறை.
69.
விலங்கு செல்லை காட்டிலும் தாவர செல்கள் கூடுதலாக பெற்றவை? செல் சுவர்
& பசுங்கணிகம்
70.
தாவர செல் மற்றும் விலங்கு செல்லில் எது பெரியது?
தாவர செல்
71.
எக்ஸ் ரெசியா கோலை எந்த வகையை சார்ந்தது? பாக்ட்ரியா
72.
நெருப்புக்கோழியின் முட்டை எதால் ஆனது? ஒரே
செல்லால் ஆனது.
73.
சைட்டோபிளாசம் எந்த நிலையில் காணப்படும்? திரவ
நிலை.
74.
திசுக்களின் அமைப்பினை முதன் முதலில் விளக்கியவர்? ராபர்ட்
ஹூக்.
75. உட்கருவின் வடிவம்? கோளம்
கட்டத்தில் உள்ள வினாக்கள்
1. செல்களை நன்கு உரு பெருக்கம் செய்து
காண பயன்படுத்தப்படுவது? எலக்ட்ரான் நுண்ணோக்கி
2. செல்லின் அளவிற்கும், உயிரினத்தின்
அளவிற்கும் எதாவது தொடர்பு உண்டா? எந்த தொடர்பும் இல்லை
3. கோழி முட்டையில் ஒளி ஊடுருவக்கூடிய
ஜெல்லி போன்ற வெண்மையான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது
ஆல்புமின்
4. கோழி முட்டையின் வெள்ளை நிறப்பகுதி
எவ்வாறு அழைக்கப்படுகிறது? சைட்டோபிளாசம்
5. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை?
3.67 X 103 அல்லது 37 000 000
000 000.
6. வெங்காய தாளை நுண் நோக்கியின் வழியக பார்க்கப்படும் போது தெரியும் வடிவம்? செவ்வகம்
புத்தக பின்பகுதி வினாக்கள்
I. பொருத்தமான விடை
1. செல்லின் அளவை குறிக்கும் குறியீடு? மைக்ரோ
மீட்டர்
2. நுண்ணோக்கியில் பிரியா செல்லை பார்க்கும்போது
அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது ஆனால் நியுக்ளியஸ் இல்லை எனில் பிரியா பார்த்த செல்.?
விலங்கு செல்
3. யுகேரியாட்டின் கட்டுப்பாட்டு மையம்
எனப்படுவது? நியூக்ளியஸ்
4. கீழ்க்கண்டவற்றில் எது ஒரு செல் உயிரினம்
அல்ல? ஸ்பைரோகைரா
5. யுகேரியாட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்? உட்கரு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. செல்களை காண உதவும் உபகரணம்? எலக்ட்ரான்
நுண்ணோக்கி
2. நான் செல்லில் உணவு உற்பத்தியை கட்டுப்படுகிறேன்
நான் யார்? பசுங்கணிகம்
3. நான் ஒரு காவல்காரன் நான் செல்லில்
யாரையும் உள்ளே விட மாட்டேன், வெளியேயும் விட மாட்டேன் நான் யார்? செல் சவ்வு
4. செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர்?
ராபர்ட் ஹூக்
5. நெருப்புக்கோழியின் முட்டை 170 மி மீ கொண்ட தனி செல் ஆகும்.
III. சரியா தவறா என கூறு
1. உயிரினங்களின் மிகச்சிறிய அலகு செல். சரி
2. மிக நீளமான செல் நரம்பு செல். சரி
3. பூமியில் முதன் முதலாக உருவான செல்
புரோகேரியாட்டிக் செல் ஆகும். சரி.
4.தாவரத்திலும் விளங்கும் உள்ள நுண்ணுறுப்புகள்
செல்களால் ஆனவை. சரி.
5. ஏற்கனவே உள்ள செல்களில் இருந்துதான் புதிய செல்கள் உருவாகின்றன. சரி.
IV. பொருத்துக.
1. கட்டுப்பாட்டு மையம் - நியூக்ளியஸ் (உட்கரு)
2. சேமிப்பு கிடங்கு- நுண் குமிழ்கள்
3. உட்கரு வாயில் - உட்கரு
உறை
4. ஆற்றல் உற்பத்தியாளர் - மைட்டோகாண்ட்ரியா
5. செல்லின் வாயில் - செல் சவ்வு