விசையும் இயக்கமும் (6th அறிவியல்)

1. பொருட்களின் மீது உயிருள்ள (அ) உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் (அ) இழுத்தலே – விசை.
2. விசை - காரணிகள்-உயிருள்ள காரணிகள், உயிரற்ற காரணிகள்.
3. தொடுதலின் அடிப்படையில் விசை வகைகள் - தொடு விசை , தொடா விசை.
4. தொடுவிசை எ.கா : கால்பந்தை உதைத்தல்.
5. தொடாவிசை எ.கா : காந்தம் இரும்பைக் கவர்தல்
6. இயக்கத்தின் வகைகள் – 4 (1. சுழற்சி இயக்கம், 2. வட்டப்பாதை இயக்கம், 3. நேர்கோட்டு இயக்கம், 4. அலைவு இயக்கம்)
7. பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும் இயக்கம் -நேர்க்கோட்டு இயக்கம் எ.கா : நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன் , தானாகக் கீழே விழும் பொருள்
8. பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் இயக்கம் - வளைவுப்பாதை இயக்கம் . எ.கா : பந்தினை வீசுதல்
9. ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் இயக்கம் -வட்டப்பாதை இயக்கம் . எ.கா : கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
10. ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் - தற்சுழற்சி இயக்கம் எ.கா : பம்பரத்தின் இயக்கம்
11. ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ (அ) இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் - அலைவு இயக்கம். எ.கா: தனிஊசல்
12. ஒரு ஈயின் இயக்கம் (அ) மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் - ஒழுங்கற்ற இயக்கம்.
13. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்கள் - கால ஒழுங்கு இயக்கம். எ.கா : புவியை சுற்றும் நிலவின் இயக்கம் .
14. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும் .
15. அனைத்துக் கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
16. ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தூரம் - சராசரி வேகம்.
17. சராசரி வேகம் (s) = கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம் . (t) = d/t
18. தொலைவின் SI அலகு - மீட்டர் M.
19. காலத்தின் SI அலகு – வினாடி S.
20. சராசரி வேகத்தின் SI அலகு - மீட்டர் / வினாடி. M/S.
21. அலைவு இயக்கங்கள் அனைத்தும் எவ்வாறு அழைக்கப்படுகிறது-கால ஒழுங்கு இயக்கம்.
22. ஒரு பேருந்தில் 180 கிலோ மீட்டர் தொலைவினை 3 மணிநேரத்தில் கடந்தால் அதன் வேகம் எவ்வளவு - கிலோ 60 மீட்டர் / வினாடி.
23. உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை எத்தனை வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்- 9.58 வினாடி.
24. தரையில் வாழும் விலங்குகளில் வேகமாக ஓடக்கூடிய விலங்கு - சிறுத்தை 112 கிலோ மீட்டர் / வினாடி.
25. குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கம்-சீரான இயக்கம்
26. மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் - சீரற்ற இயக்கம்.
27. இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கம்:
i. நேர்கோட்டு இயக்கம்
ii. வளைவுப்பாதை இயக்கம்
iii. வட்டப்பாதை இயக்கம்
iv. தற்சுழற்சி இயக்கம்
v. அலைவு இயக்கம்
vi. ஒழுங்கற்ற இயக்கம்

28. கால இடைவெளி அடிப்படையில் இயக்கம் :
i. கால ஒழுங்கு இயக்கம்
ii. கால ஒழுங்கற்ற இயக்கம்

29. சீரான வேகத்தின் அடிப்படையில் இயக்கம்:
i. சீரான இயக்கம்
ii. சீரற்ற இயக்கம்

30. ரோபாட்டுகள் என்பது தானியங்கி இயந்திரமாகும் ரோபாட் என்ற வார்த்தை ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. ரோபாட்டுகளைப் பற்றி படிக்கும் பிரிவு – ரோபாட்டிக்ஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.