2015 Group 2 Tamil Questions and Answer


1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(அ) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.
(ஆ) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
(இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
(ஈ) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
விடை: (இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது

2. விடை தேர்க: சரியான சொற்றொடரைத் தேர்க:
(அ) தாழ்வு உயர்வு கருதுதல் பிறப்பில் தவறு
(ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு
(இ) பிறப்பில் உயர்வு கருதுதல் தாழ்வு தவறு
(ஈ) உயர்வு கருதுதல் பிறப்பில் தாழ்வு தவறு
விடை: (ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை
அ. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்.
ஆ. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
இ. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.
ஈ. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
(அ) அ மற்றும் இ
(ஆ) ஆ மற்றும் ஈ
(இ) இ மற்றும் ஈ
(ஈ) ஆ மற்றும் இ
விடை: (இ) இ மற்றும் ஈ

4. “முட்டையிட்டது சேவலா பெட்டையா?” இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
(அ) பால் வழு
(ஆ) திணை வழு
(இ) வினா வழு
(ஈ) மரபு வழு
விடை: (இ) வினா வழு

5. வரை-இவ்வேர்ச்சொல் வினையாலணையும் பெயராக்குக:
(அ) வரைதல்
(ஆ) வரைந்த
(இ) வரைந்தவன்
(ஈ) வரைந்து
விடை: (இ) வரைந்தவன்

6. பின்வருவனவற்றைப் பொருத்துக:
(அ) டெலிகேட் – 1.கருத்துரு
(ஆ) சாம்பியன் – 2. மரபுத்தகவு
(இ) புரபோசல் – 3. பேராளர்
(ஈ) புரோட்டோகால் – 4. வாகைசூடி
(அ) 1 3 4 2
(ஆ) 3 2 1 4
(இ) 3 4 1 2
(ஈ) 2 1 4 3
விடை: (இ) 3 4 1 2

7. “ஊ” என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு:
(அ) இறைச்சி
(ஆ) உலகம்
(இ) உயிர்
(ஈ) உயர்வு
விடை: (அ) இறைச்சி

8. “து” என்ற சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
(அ) ஆறு
(ஆ) துப்பு
(இ) உண்
(ஈ) துன்பம்
விடை: (இ) உண்

9. பொருத்துக:
பட்டிபயல் I – பட்டியல் II
(அ) சரதம் – 1. நிலா முற்றம்
(ஆ) சூளிகை – 2. நாடு
(இ) மகோததி – 3. வாய்மை
(ஈ) அவனி – 4. கடல்
(அ) 3 1 4 2
(ஆ) 2 1 3 4
(இ) 3 2 1 4
(ஈ) 1 4 3 2
விடை: (அ) 3 1 4 2

10. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும் 
(அ) மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
(ஆ) ஆசிரியரை “ஐயா” என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தூர் மரபு.
(இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
(ஈ) திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாடு மரபு.
விடை: (இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

11. “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்” இந்த அடியில் அமைந்துள்ள மோனை வைகயைத் தேர்ந்தெடு
(அ) கீழ்க்கதுவாய்
(ஆ) இணை
(இ) கூழை
(ஈ) மேற்கதுவாய்
விடை: (அ) கீழ்க்கதுவாய்

12. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க
(அ) வெண்மதி-வெண்+மதி
(ஆ) வெந்துவர்ந்து-வெந்து+உவர்ந்து
(இ) காடிதனை-காடு+இதனை
(ஈ) கருமுகில்-கருமை+முகில்
விடை: (அ) வெண்மதி-வெண்+மதி

13. பொருந்தாத இணையினைக் காண்க:
(அ) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்
(ஆ) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
(இ) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”- இளங்கோவடிகள்
(ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்
விடை: (ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்

14. “நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது
செய்தல் ஓம்புமின்” – இவ்வடிகள் பெற்றுள்ள நூல்
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) பரிபாடல்
(இ) புறநாநூறு
(ஈ) குறுந்தொகை
விடை: (இ) புறநாநூறு

15. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
அ. திரு+குறள் – திருக்குறள்: மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் “திருக்குறள்” எனப்பெயர் பெற்றது.
ஆ. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளை கூறுவர்.
இ. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.
ஈ. திருவள்ளுவருடைய காலம் கி.மு.32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
(அ) ஆ, ஈ சரியானவை
(ஆ) அ,இ சரியானவை
(இ) இ,ஈ சரியானவை
(ஈ) ஆ,இ சரியானவை
விடை: (ஆ) அ, இ சரியானவை

16. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
(அ) தேன்மழை
(ஆ) குயில்
(இ) தென்றல்
(ஈ) இந்தியா
விடை: (ஆ) குயில்

17. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
அ. கோக்கோதை நாடு – 1.பறவை இனம்
ஆ. பார்ப்பு – 2. சேற்று வயல்
இ. புள்ளினம் – 3. சேர நாடு
ஈ. அள்ளற் பழனம் – 4. குஞ்சு
அ ஆ இ ஈ
(அ) 3 2 4 1
(ஆ) 2 3 1 4
(இ) 3 4 1 2
(ஈ) 1 3 2 4
விடை: (இ) 3 4 1 2

18. “நாடக இயல்” எனும் நூலை இயற்றியவர் யார்?
(அ) பரிதிமாற் கலைஞர்
(ஆ) பம்மல் சம்மந்த முதலியார்
(இ) கிருஷ்ணசாமிப் பாவலர்
(ஈ) விபுலானந்த அடிகள்
விடை: (அ) பரிதிமாற் கலைஞர்

19. “ஏலாதி” பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம் “ஏலாதி”
ஆ. “ஏலாதி” நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.
இ ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
ஈ. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.
(அ) ஆ மற்றும் இ
(ஆ) இ மற்றும் ஈ
(இ) அ மற்றும் இ
(ஈ) அ மற்றும் ஈ
விடை:(இ) அ மற்றும் இ

20. பொருந்தா இணையைக் கண்டறிக:
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
(அ) இயேசு பெருமான் – 1. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
(ஆ) சிவபெருமான் – 2. சுந்தரர்
(இ) புத்தபிரான் – 3. நீலகேசி
(ஈ) நபிகள் நாயகம் – 4. உமறுப்புலவர்
விடை: (இ) புத்தபிரான் 3. நீலகேசி

21. திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர் “மேலகரம் என்றும் ஊரில் பிறந்தவர்
ஆ. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர் மீது அன்பு கொண்டு நலிவதையும் அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்.
இ. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
ஈ. “வசந்தவல்லி திருமணம்” எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது.
(அ) அ மற்றும் ஆ சரியானவை
(ஆ) இ மற்றும் ஈ சரியானவை
(இ) ஆ மற்றும் இ சரியானவை
(ஈ) அ மற்றும் ஈ சரியானவை
விடை: (அ) அ மற்றும் ஆ சரியானவை

22. “மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்” – இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
(அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(ஆ) கம்பர்
(இ) குமரகுருபரர்
(ஈ) ஒட்டக்கூத்தர்
விடை: (ஈ) ஒட்டக்கூத்தர்

23. “ஒற்றுமைக் காப்பியம்” என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
(அ) பெரியபுராணம்
(ஆ) மணிமேகலை
(இ) கம்பராமாயணம்
(ஈ) சிலப்பதிகாரம்
விடை: (ஈ) சிலப்பதிகாரம்

24. “அம்மானை” பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
அ. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகள் ஒன்று
ஆ. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு “அம்மானை வரி” என்பது பெயர்.
இ. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது “பந்து விளையாடல்” ஆகும்.
ஈ. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி முடிவில் ஒரு நீதி இடம் பெறும்.
(அ) அ மற்றும் இ
(ஆ) ஆ மற்றும் அ
(இ) இ மற்றும் ஈ
(ஈ) ஈ மற்றும் அ
விடை: (ஆ) ஆ மற்றும் அ

25. கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
அ. விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
ஆ. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
இ. காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக்காஞ்சி
ஈ. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் 4. அகநானூறு
நாவாய் அசைந்தது
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 3 4 2 1
(இ) 1 2 3 4
(ஈ) 3 4 1 2
விடை: (ஆ) 3 4 2 1

26. “புனையா ஓவியம்” என்பதன் பொருள்
(அ) வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
(ஆ) பூக்களால் வரைவது
(இ) மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
(ஈ) கரித்துண்டுகளால் வடிவம் வரைவது
விடை: (ஈ) கரித்துண்டுகளால் வடிவம் வரைவது

27. கிருஷ்ணகிரி, கோத்தகிரி – இதில் காணப்படும் “கிரி” எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
(அ) கல்லிடைக்குறிச்சி
(ஆ) பாறை
(இ) மலை
(ஈ) கோட்டை
விடை: (இ) மலை

28. திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் “திருவிளையாடல் புராணம்”
ஆ. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்.
இ. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஈ. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன.
(அ) அ மற்றும் இ சரியானவை
(ஆ) ஆ மற்றும் இ சரியானவை
(இ) இ மற்றும் ஈ சரியானவை
(ஈ) அ மற்றும் ஈ சரியானவை
விடை: (ஆ) ஆ மற்றும் இ சரியானவை

29. பொருத்துக:
பட்டியல்-I - பட்டியல்-II
அ. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது – 1. தண்டியலங்கார மேற்கோள்
ஆ. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – 2. கிரௌல்
இ. தன்னேரில்லாத தமிழ் – 3. கால்டுவெல்
ஈ. தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது – 4. தொல்காப்பியம்
(அ) 2 3 1 4
(ஆ) 3 4 2 1
(இ) 3 4 1 2
(ஈ) 4 3 2 1
விடை: (இ) 3 4 1 2

30. பொருத்துக:
நூல் - ஆசிரியர்
அ. சிறுபாணாற்றுப்படை – 1. முடத்தாமக் கண்ணியார்
ஆ. திருமுருகாற்றுப்படை – 2. நல்லூர் நத்தத்தனார்
இ. பொருநராற்றுப்படை – 3.கடியலூர் உருத்திரங் கண்ணனார்
ஈ. பெரும்பாணாற்றுப்படை – 4. நக்கீரர்
(அ) 4 3 2 1
(ஆ) 2 4 1 3
(இ) 3 1 4 2
(ஈ) 1 2 3 4
விடை: (ஆ) 2 4 1 3

31. பொருத்துக:
வரிசை ஒன்று வரிசை இரண்டு
அ. Internet – 1. மின்இதழ்
ஆ. Search Engine – 2. மின் நூல்
இ. E-Journal – 3. இணையம்
ஈ. E-Book – 4. தேடுபொறி
அ ஆ இ ஈ
(அ) 4 2 1 3
(ஆ) 2 4 3 1
(இ) 3 4 1 2
(ஈ) 1 3 2 4
விடை: (இ) 3 4 1 2

32. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க:
அ. சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
ஆ. தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.
இ. ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
ஈ. பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை.
விடை: இ. ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்

33. பொருத்துக:
அகநாநூற்றின் பாட்டு வைப்பு முறை திணை
அ. 10, 20, 30, 40, ….. 1. முல்லைத் திணை
ஆ. 6, 16, 26, 36…. 2. நெய்தல் திணை
இ. 4, 14, 24, 34, …. 3. குறிஞ்சித் திணை
ஈ. 2, 8, 12, 18,… 4. மருதத் திணை
அ ஆ இ ஈ
(அ) 4 2 3 1
(ஆ) 2 3 1 4
(இ) 2 1 4 3
(ஈ) 2 4 1 3
விடை: (ஈ) 2 4 1 3

34. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
அ. வலை 1.பொந்து
ஆ. வளை 2.மீன்வகை
இ. வாளை 3.மரவகை
ஈ. வாழை 4.மீன்பிடி வலை
(அ) 1 4 2 3
(ஆ) 2 3 1 4
(இ) 4 1 2 3
(ஈ) 3 1 4 2
விடை: (இ) 4 1 2 3

35. கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
அ. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
ஆ. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
இ. மரயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது.
ஈ, கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
(அ) அ, ஆ சரியானவை
(ஆ) ஆ, இ சரியானவை
(இ) இ, ஈ சரியானவை
(ஈ) அ, ஈ சரியானவை
விடை: (அ) அ, ஆ சரியானவை

36. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
(அ) பனு அகமது மரைக்காயர்
(ஆ) சீதக்காதி
(இ) உமறுப்புலவர்
(ஈ) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
விடை: (அ) பனு அகமது மரைக்காயர்

37. பொருந்தா ஒன்றைத் தேர்க. கண்ணதாசன் பாடல்கள்
(அ) “முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ”
(ஆ) “சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா”
(இ) “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”
(ஈ) “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”
விடை: (ஆ) “சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா”

38. “இராசராச சோழனுலா” வைப் பாடியவர்
(அ) ஒட்டக்கூத்தர்
(ஆ) புகழேந்திப் புலவர்
(இ) காளமேகப் புலவர்
(ஈ) குமரகுருபரர்
விடை: (அ) ஒட்டக்கூத்தர்

39. பொருத்துக:
பட்டியல்-I பட்டியல்-II
(அ) மாணிக்கவாசகர் – 1. திருத்தொண்டத் தொகை
(ஆ) ஆண்டாள் – 2. தாண்டகவேந்தர்
(இ) சுந்தரர் – 3. திருக்கோவை
(ஈ) திருநாவுக்கரசர் – 4. நாச்சியார் திருமொழி
(அ) 3 4 1 2
(ஆ) 2 3 4 1
(இ) 1 4 3 2
(ஈ) 4 3 1 2
விடை: (அ) 3 4 1 2

40. “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்
(அ) தொல்காப்பியர்
(ஆ) பவணந்தி முனிவர்
(இ) தண்டியடிகள்
(ஈ) புலவர் குழந்தை
விடை: (அ) தொல்காப்பியர்

41. கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
அ. தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.
ஆ. “திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பில் அ.மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இ. நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய நூலகளைக் குமரகுருபரர் பாடினார்.
ஈ. காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா என்ற புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு
விடை: இ. நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய நூலகளைக் குமரகுருபரர் பாடினார்.

42. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) கவிமணி
(ஈ) நாமக்கல் கவிஞர்
விடை: (ஆ) பாரதிதாசன்

43. மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்குள்ளது?
(அ) புதுக்கோட்டை
(ஆ) திருப்பெருந்துறை
(இ) திருவெண்ணெய் நல்லூர்
(ஈ) பெரியகுளம்
விடை: (ஆ) திருப்பெருந்துறை

44. கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்
(அ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(ஆ) இரா.பி.சேதுப்பிள்ளை
(இ) தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(ஈ) மு.வரதராசனார்
விடை: (அ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

45. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்
(அ) முடியரசன்
(ஆ) வாணிதாசன்
(இ) சுரதா
(ஈ) அப்துல் ரகுமான்
விடை: (ஈ) அப்துல் ரகுமான்

46. மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
(அ) தமிழிலக்கிய வரலாறு
(ஆ) தமிழின்பம்
(இ) கள்ளர் சரித்திரம்
(ஈ) ஆகாயத்தில் அடுத்த வீடு
விடை: (ஈ) ஆகாயத்தில் அடுத்த வீடு

47. வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என எடுத்துரைத்தவர்
(அ) கண்ணதாசன்
(ஆ)பாரதியார்
(இ) பாரதிதாசன்
(ஈ) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
விடை: (ஈ) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

48. தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
(அ) கண்ணதாசன்
(ஆ) வாணிதாசன்
(இ) பாரதிதாசன்
(ஈ) முடியரசன்
விடை: (ஆ) வாணிதாசன்

49. பொருத்துக:
புனைப்பெயர் இயற்பெயர்
(அ) புதுமைப்பித்தன் – 1.ஜெகதீசன்
(ஆ) ஈரோடு தமிழன்பன் – 2. எத்திராஜ்
(இ) வாணிதாசன் – 3.முத்தையா
(ஈ) கண்ணதாசன் – 4.சொ.விருத்தாசலம்
(அ) 2 3 4 1
(ஆ) 4 1 2 3
(இ) 3 4 1 2
(ஈ) 4 3 2 1
விடை: (ஆ) 4 1 2 3

50. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
(அ) சுகம்
(ஆ) கிள்ளை
(இ) வெற்பு
(ஈ) தத்தை
விடை: (இ) வெற்பு

51. பொருட்டன்று – பிரித்து எழுதுக:
(அ) பொருட்+அன்று
(ஆ) பொரு+அன்று
(இ) பொருட்டு+அன்று
(ஈ) பொருட்+டன்று
விடை: (இ) பொருட்டு+அன்று

52. பொருத்துக:
அ. ஆய்தக்குறுக்கம் – 1. வெளவால்
ஆ. ஐகாரக்குறுக்கம் – 2. மருண்ம்
இ. ஓளகாரக்குறுக்கம் – 3. கஃறீது
ஈ. மகரக்குறுக்கம் – 4. கடலை
(அ) 1 4 3 2
(ஆ) 2 1 4 3
(இ) 4 3 2 1
(ஈ) 3 4 1 2
விடை: (ஈ) 3 4 1 2

53. அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:
(அ) மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
(ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
(இ) முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
(ஈ) மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
விடை: (ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு

54. பின்வருவனவற்றைப் பொருத்துக:
அ. விரிநகர் – 1. பண்புத்தொகை
ஆ. மலரடி – 2. வினைத்தொகை
இ. மா பலா வாழை – 3. உவமைத்தொகை
ஈ. முதுமரம் – 4. உம்மைத்தொகை
(அ) 4 1 2 3
(ஆ) 2 3 4 1
(இ) 3 2 1 4
(ஈ) 2 4 3 1
விடை: (ஆ) 2 3 4 1
விளக்கம்:

55. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. மூன்று காலங்களில் ஒன்றனை உணர்ததுவது – 1.பெயரெச்சம்
ஆ. முக்காலத்தையும் உணர்த்துவது – 2.வினைமுற்று
இ. படித்தல், கற்பித்தல், எழுதுதல் – 3.வினையெச்சம்
ஈ. முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது – 4.தொழிற்பெயர்
அ ஆ இ ஈ
(அ) 1 4 2 3
(ஆ) 4 2 1 3
(இ) 2 3 4 1
(ஈ) 3 4 2 1
விடை: (இ) 2 3 4 1

56. பொருந்தாத இணையினைக் கண்டறிக:
திணை - தொழில்
(அ) முல்லை - 1.வரகு விதைத்தல், களைப்பறித்தல்
(ஆ) பாலை - 2. நிரை கவர்தல், சூறையாடல்
(இ) குறிஞ்சி - 3. தேனெடுத்தல், கிழங்கழ்தல்
(ஈ) மருதம் - 4. மீன் பிடித்தல், உப்பு விற்றல்
விடை: (அ) மற்றும் (ஈ) தவறானவை.

57. அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையை குறிப்பிடுக:
(அ) அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
(ஆ) ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
(இ) கண், கண்டம், கண்டு, கண்ணி
(ஈ) தகடு, தகழி, தகவு, தகர்
விடை: (இ) கண், கண்டம், கண்டு, கண்ணி

58. “அப்பிசி மாசம் அடமள இம்பாங்க” – இத்தொடரின் பிழை நீங்கிய வடிவம்
(அ) ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
(ஆ) ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
(இ) ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
(ஈ) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
விடை: (ஈ) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்

59. கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
அ. நான், யான் என்பவை தன்மை ஒருமைப்பெயர்கள்
ஆ. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
இ. வேற்றுமை உருபேற்கும் போது, “யான்” என்பது “என்” என்றும் “யாம்” என்பது “எம்” என்றும், “நாம் என்பது “நம்” என்றும் திரியும்.
ஈ. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னில ஒருமை பெயர்கள் ஆகும்.
(அ) ஆ, இ, ஈ சரியானவை
(ஆ) அ,ஆ, இ சரியானவை
(இ) ஆ, ஈ, அ சரியானவை
(ஈ) ஈ, இ, அ சரியானவை
விடை: (ஆ) அ,ஆ, இ சரியானவை

60. “கூவா முன்னம் இளையோன் குறுகிநீ” கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமானது இலக்கணக்குறிப்பைக் கண்டறிக
(அ) பெயரெச்சம், வினையெச்சம்,
(ஆ) பண்புத்தொகை, பெயரெச்சம்
(இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்
(ஈ) வினைமுற்று, வினையெச்சம்
விடை: (இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்

61. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. வாலை – 1.தயிர்
ஆ. உளை – 2.சுரபுன்னை மரம்
இ. விளை – 3. இளம்பெண்
ஈ. வழை – 4. பிடரிமயிர்
(அ) 4 3 2 1
(ஆ) 2 1 3 4
(இ) 1 2 4 3
(ஈ) 3 4 1 2
விடை: (ஈ) 3 4 1 2

62. இன்மையுள் இன்மை விருந்தொரால் – இதில் விருந்து என்பதன் இலக்கணக்குறிப்பு தருக:
(அ) பண்புப்பெயர்
(ஆ) வினையாலணையும் பெயர்
(இ) பண்பாகு பெயர்
(ஈ) வியங்கோள் வினைமுற்று
விடை: (இ) பண்பாகு பெயர்

63. “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்வர் யார்?
(அ) அம்புஜம்மாள்
(ஆ) தில்லையாடி வள்ளியம்மை
(இ) அஞ்சலையம்மாள்
(ஈ) வேலு நாச்சியார்
விடை: (அ) அம்புஜம்மாள்

64. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க:
(அ) பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
(ஆ) நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல் பல்சுவைப் பாடல்களாம்
(இ) தேர், யானை, குதிரை, காலாட் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றும் புறப்பாடல்கள்.
(ஈ) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, “காவடிச்சிந்து” திகழ்கிறது
விடை: (ஈ) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, “காவடிச்சிந்து” திகழ்கிறது

65. பொருத்துக:
நூல்- ஆசிரியர்
அ. பாண்டியன் பரிசு – 1. பாரதியார்
ஆ. குயில்பாட்டு – 2. நாமக்கல் கவிஞர்
இ. ஆசிய ஜோதி – 3. பாரதிதாசன்
ஈ. சங்கொலி – 4. கவிமணி
அ ஆ இ ஈ
(அ) 4 2 1 3
(ஆ) 1 3 2 4
(இ) 3 1 4 2
(ஈ) 2 4 3 1
விடை: (இ) 3 1 4 2

66. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர்
(அ) சுந்தரர்
(ஆ) கம்பர்
(இ) சேக்கிழார்
(ஈ) மாணிக்கவாசகர்
விடை: (இ) சேக்கிழார்

67. எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) பரிபாடல்
(இ) கலித்தொகை
(ஈ) ஐங்குறூநூறு
விடை: (ஆ) பரிபாடல்

68. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
அ. மூன்று+தொள்ளாயிரம்-முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் “முத்தொள்ளாயிரம்”
ஆ. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன.
இ. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
ஈ. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
(அ) அ, இ சரியானவை
(ஆ) அ, ஈ சரியானவை
(இ) ஆ, இ சரியானவை
(ஈ) இ, ஈ சரியானவை
விடை: (ஆ) அ, ஈ சரியானவை

69. திருக்கோட்டியூர் நம்பியால் “எம்பெருமானார்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
(அ) நாதமுனிவர்
(ஆ) இராமானுஜர்
(இ) திருவரங்கத்தமுதனார்
(ஈ) மணவாள மாமுனிகள்
விடை: (ஆ) இராமானுஜர்

70. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட சங்க அகநூல்
(அ) நற்றிணை
(ஆ) கலித்தொகை
(இ) ஐங்குநூறு
(ஈ) குறுந்தொகை
விடை: (இ) ஐங்குநூறு

71. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
(அ) நந்தவர்மன்
(ஆ) ஜெயங்கொண்டார்
(இ) குமரகுருபரர்
(ஈ) பெயர் தெரியவில்லை
விடை: (ஈ) பெயர் தெரியவில்லை

72. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. கொண்டல் – 1.மாலை
ஆ. தாமம் – 2.வளம்
இ. புரிசை – 3.மேகம்
ஈ. மல்லல் – 4.மதில்
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 3 4 1 2
(இ) 3 2 1 4
(ஈ) 3 2 4 1
விடை: (அ) 3 1 4 2

73. “முக்கூடற்பள்ளு” பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
அ. முக்கூடலில் வாழும் பள்ளி “மூத்த மனைவி” மருதூர்ப்பள்ளி “இளைய மனைவி” என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
ஆ. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
இ. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
ஈ. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்துவந்த பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் “சதகம்”
(அ) ஈ மற்றும் அ
(ஆ) இ மற்றும் ஈ
(இ) அ மற்றும் இ
(ஈ) ஆ மற்றும் அ
விடை: (இ) அ மற்றும் இ

74. “விற்பெருந்தடந்தோள் வீர!” இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(அ) இலக்குவன்
(ஆ) இராமன்
(இ) குகன்
(ஈ) அனுமன்
விடை: (ஆ) இராமன்

75. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
(அ) நம்மாழ்வார்
(ஆ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(இ) குலசேகராழ்வார்
(ஈ) திருமங்கையாழ்வார்
விடை: (ஆ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

76. ஐங்குநுறூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தெர்ந்தெடு
(அ) பேயனார்
(ஆ) கபிலர்
(இ) ஓதலாந்தையார்
(ஈ) ஓரம்போகியார்
விடை: (அ) பேயனார்

77. கீழே காணப்பெறுபவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
அ. அகப்பொருள் பற்றிய, “நற்றிணை” நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்று குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது.
ஆ. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை.
இ. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை.
ஈ. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.
(அ) அ மற்றும் இ சரியற்றவை
(ஆ) ஆ மற்றும் ஈ சரியற்றவை
(இ) இ மற்றும் ஈ சரியற்றவை
(ஈ) அ மற்றும் ஆ சரியற்றவை
விடை: (ஈ) அ மற்றும் ஆ சரியற்றவை

78. பொருந்தாத இணையினைக் காண்க:
அ. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே-புறநானூறு
ஆ. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-திருக்குறள்
இ. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-சிலப்பதிகாரம்
ஈ. பண்ணொடு தமிழொப்பாய்-தேவாரம்
விடை: இ. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-சிலப்பதிகாரம்

79. “திரிகடுகம்” பற்றிய கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
அ. திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது.
ஆ. திரிகடுகத்தின் ஆசரியர் நல்லாதனார்
இ. திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
ஈ. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம்
விடை: அ. திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது.

80. பாந்தன், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ——– என்பதாகும்.
(அ) கரடி
(ஆ) யானை
(இ) முதலை
(ஈ) பாம்பு
விடை: (ஈ) பாம்பு

81. பொருத்துக:
பட்டியல் I - பட்டியல் II
அ. “பாடு” எனக்கூறியவுடன் பாடுபவர் – 1.சித்திரகவி
ஆ. ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் – 2.வித்தாரக்கவி
இ. தொடர்நிலைச் செய்யுள் பாடுபவர் – 3.ஆசுகவி
ஈ. சொல்லணி அமைத்துப் பாடுபவர் – 4. மதுரகவி
(அ) 3 4 2 1
(ஆ) 4 3 1 2
(இ) 2 1 4 3
(ஈ) 3 2 1 4
விடை: (அ) 3 4 2 1

82. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளிட்டவர்
(அ) பாரதிதாசன்
(ஆ) பாரதியார்
(இ) திரு.வி.க
(ஈ) முடியரசன்
விடை: (ஆ) பாரதியார்

83. பொருத்துக:
மூலிகையின் பொதுப்பெயர் - சிறப்புப்பெயர்
அ. தூதுவளை – 1.குமரி
ஆ. கற்றாழை – 2.ஞானப்பச்சிலை
இ. கரிசலாங்கண்ணி – 3. இந்திய மருந்து
ஈ. குறுமிளகு – 4. தேகராசம்
அ. 4 3 1 2
ஆ. 3 4 2 1
இ. 1 2 3 4
ஈ. 2 1 4 3
விடை: ஈ. 2 1 4 3

84. பொருத்துக:
அ. கொலையே, களவே, காமத்தீ விழைவு – 1.உள்ளம் தன்னில் தோன்றுவன
ஆ. பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் – 2.என்பது இயல்பே
இ. வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி – 3. உடம்பில் தோன்றுவன
ஈ. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் – 4. சொல்லில் தோன்றுவன
அ. 3 2 1 4
ஆ. 3 4 1 2
இ. 3 1 2 4
ஈ. 3 2 4 1
விடை: ஆ. 3 4 1 2

85. பொருத்துக:
அ. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் – 1.தண்ணீர் தண்ணீர்
ஆ. வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் – 2. இசை நூல்
இ. கோமல் சுவாமிநாதன் – 3. கருணாமிர்த சாகரம்
ஈ. முதுநாரை – 4. மானவிஜயம்
(அ) 4 3 2 1
(ஆ) 2 4 3 1
(இ) 3 4 1 2
(ஈ) 1 2 4 3
விடை: (இ) 3 4 1 2

86. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
(அ) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
(ஆ) பல்யானை செல்கெழுகுட்டுவன்
(இ) செல்வக்கடுங்கோ வாழியாதன்
(ஈ) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
விடை: (ஈ) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

87. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் சுட்டுக
அ. முத்தொள்ளாயிரப் பாடல்களில் “புறத்திரட்டு” என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஆ. பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
இ. பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
ஈ. சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சிமாகத் திகழ்கின்றன.
விடை: ஈ. சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சிமாகத் திகழ்கின்றன.

88. பொருத்துக:
அ. நீள்நெடுங்கண்ணி – 1. கட்கநேத்ரி
ஆ. வாள்நெடுங்கண்ணி – 2. விசாலாட்சி
இ. பழமலைநாதர் – 3. சொர்ணபுரீச்சுரர்
ஈ. செம்பொன் பள்ளியார் – 4. விருத்தகிரீசுவரர்
(அ) 3 4 2 1
(ஆ) 1 2 3 4
(இ) 2 1 4 3
(ஈ) 4 3 2 1
விடை: (இ) 2 1 4 3

89. சாகித்திய அகாடெமி பரிசுப்பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?
(அ) கள்ளர் சரித்திரம்
(ஆ) தமிழ் இலக்கிய வரலாறு
(இ) தமிழின்பம்
(ஈ) முத்தொள்ளாயிர விளக்கம்
விடை: (இ) தமிழின்பம்

90. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்
(அ) திலகவதி
(ஆ) நீலாம்பிகை
(இ) சிவகாமி
(இ) புனிதவதி
விடை: (இ) புனிதவதி

91. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படுபவர் யார்?
(அ) சுரதா
(ஆ) அப்துல் ரகுமான்
(இ) வாணிதாசன்
(ஈ) தாரா பாரதி
விடை: (இ) வாணிதாசன்

92. தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்
(அ) மறைமலையடிகள்
(ஆ) சூரியநாராயண சாஸ்திரி
(இ) ரா.இராகவையங்கார்
(ஈ) சிங்கார வேலு முதலியார்
விடை: (ஆ) சூரியநாராயண சாஸ்திரி

93. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
(அ) தந்தை பெரியார் “பகுத்தறிவாளர் சங்கத்தை” நிறுவினார்.
(ஆ) பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
(இ) பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்.
(ஈ) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
விடை: (ஈ) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

94. பொருத்துக:
ஆசிரியர் - சிறுகதை
அ. வ.வே.சு.ஐயர் – 1. பஞ்சதந்திரக்கரைகள்
ஆ. தாண்டவராய முதலியார் – 2. மங்கையர்கரசியின் காதல்
இ. செல்வ கேசவராய முதலியார் – 3. காணாமலே காதல்
ஈ. கு.ப.ரா – 4. அபிநயக் கதைகள்
அ ஆ இ ஈ
(அ) 1 2 4 3
(ஆ) 2 4 3 1
(இ) 3 1 2 4
(ஈ) 2 1 4 3
விடை: (ஈ) 2 1 4 3

95. பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) பொதுவுடைமை – புதுமைப்பித்தன்
(ஆ)தனித்தமிழ் – மறைமலை அடிகள்
(இ) பேச்சுக் கலை – பேரறிஞர் அண்ணா
(ஈ) புரட்சி – பாரதிதாசன்
விடை: (அ) பொதுவுடைமை-புதுமைப்பித்தன்

96. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
(அ) வீரராகவர்
(ஆ) ஆனந்த ரங்கர்
(இ) பரஞ்சோதி முனிவர்
(ஈ) தருமி
விடை: (ஆ) ஆனந்த ரங்கர்

97. புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட “மெல்ல மெல்ல மற” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
(அ) இலட்சுமி
(ஆ) சுஜாதா
(இ) சுபா
(ஈ) தாமரை
விடை: (அ) இலட்சுமி

98. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
(அ) மு.வரதராசனார்
(ஆ) பாரதியார்
(இ) காமராசர்
(ஈ) அண்ணா
விடை: (இ) காமராசர்

99. “மணநூல்” இந்நூலின் ஆசிரியர் யார்?
(அ) இளங்கோவடிகள்
(ஆ) சீத்தலைச் சாத்தனார்
(இ) திருத்தக்கத் தேவர்
(ஈ) திருவள்ளுவர்
விடை: (இ) திருத்தக்கத் தேவர்

100. பொருத்துக:
அ. அம்பை – 1. வலம்புரி
ஆ. அனுராதா ரமணன் – 2. காளி
இ. திலகவதி – 3. காலச்சுமைதாங்கி
ஈ. பாக்யா – 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
(அ) 4 3 2 1
(ஆ) 1 2 3 4
(இ) 1 2 4 3
(ஈ) 1 3 2 4
விடை: (அ) 4 3 2 1

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.