TOP 50 ஆளூநர்.
1. மாநில நிர்வாகத்தின் தலைவர்- ஆளூநர்.
2. மாநில நிர்வாகம் யாருடைய பெயரில் நடைபெறுகிறது- ஆளுநர்.
3. மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறும் சட்டப்பிரிவு-154.
4. எந்த சட்ட பிரிவின் படி நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் - 154 (1).
5. மாநில ஆளுநரை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்.
6. மாநில ஆளுநரின் பதவிக்காலம்-5 ஆண்டுகள்.
7. மாநில ஆளுநரின் பதவிக்காலம் யார் நீட்டிப்பு செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்.
8. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொதுவாக சொந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்க முடியாது.
9. ஆளுநரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் உடையவர்- குடியரகத் தலைவர்.
10. ஆளுநர் தனது பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்- குடியரகத் தலைவர்.
11. ஒரு மாநிலத்தின் ஆளுநரை யாரால் பதவிநீக்கம் செய்ய முடியாது – மாநில சட்டமன்றம், உயர் நீதிமன்றம்.
12. ஆளுநரை நியமிக்க பின்பற்றப்படும் மரபுகள் எத்தனை: 2.
i. எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கபடுகிறோ அந்த மாநிலத்தை சேர்ந்தவராக ஆளுநர் இருக்கக்கூடாது.
ii. மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவருடைய பெயரை முன்மொழிய வேண்டும்.
13. ஒரு ஆளுநர் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் சட்ட பிரிவு - 158 (3A). ஊதியம் மற்றும் படிகள் பிரித்து வழங்கபடும்.
14. இந்திய அரசியலமைப்பு ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறும் சட்டப்பிரிவு-157, 158.
15. ஆளுநர் தகுதிகள்:
i. இந்திய குடிமகன் இருத்தல் வேண்டும்.
ii. வயது – 35.
iii. லாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபட கூடாது.
16. மாநில அரசின் தலைவர்- ஆளுநர்.
17. மாநிலத்தின் அரசியல் அமைப்பின் தலைவர்- ஆளுநர்.
18. மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
19. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் - ஆளுநர்.
20. மாநிலத்தின் அரசு வழக்கறிஞர் நியமனம் மற்றும் ஊதியம் நிர்ணயம் செய்பவர் – ஆளுநர்.
21. மாநில பல்கலைக்கழகம் வேந்தராக செயல்படுபவர் – ஆளுநர்.
22. மாநில பல்கலைக்கழகம் துணை வேந்தர்களை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
23. மாநில சட்டமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும், கலைக்கவும், அதிகாரம் பெற்றவர்- ஆளுநர்.
24. மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்தொடரில் முதல் உரையை நிகழ்த்துபவர்- ஆளூநர்.
25. நிலுவையில் உள்ள மசோதா குறித்து சட்டமன்றத்திற்கு செய்தி அனுப்புவர் – ஆளுநர்.
26. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்றத்தை தலைமையேற்று நடத்த எந்த உறுப்பினரையும் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - ஆளுநர்.
27. ஆங்கிலோ- இந்திய வகுப்பினர் எத்தனை பேரை ஆளுநர் நியமிக்கலாம் - 1.
28. கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம், சமூக சேவை ஆகியவற்றில் இருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்- 1/6.
29. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா யாருடைய ஒப்புதல் பெற்ற பின் சட்டமாகும் – ஆளுநர்.
30. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆளுநர் கருதும் போது அதனை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
31. மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்ட பிரிவு – 213.
32. ஆளுநரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கிகாரம் பெற வேண்டும்- 6 மாதத்திற்குள்.
33. ஆளுநர் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்:
i. மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை.
ii. அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை.
iii. அரசின் தணிக்கைக்குழு அறிக்கை.
34. மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார்செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது – ஆளுநர்.
35. மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கின்றார்- ஆளுநர்.
36. யாருடைய முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்- ஆளுநர்.
37. மாநிலத்தின் எதிர்பாராச் செலவினங்களுக்காக அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் படைத்தவர்- ஆளுநர்.
38. பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை ஆளுநர் அமைக்கிறார்- 5 ஆண்டு.
39. மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
40. கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
41. உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்பவர்-ஆளுநர்.
42. யாருடைய ஆலோசனையின் பேரில் இந்திய குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கிறார்- ஆளூநர்.
43. மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு பரிந்துரை செய்பவர் - ஆளுநர்.
44. மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் உள்ளவர்- ஆளுநரிடம்.
45. ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்குகின்ற சட்டப்பிரிவு: 361 (1).
i. ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.
ii. ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்ற மும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
iii. மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
46. முதலமைச்சரை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
47. மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது- ஆளுநர்.
48. அமைச்சரவை பெரும்பான்மை இலந்தால் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளவர்-ஆளுநர்.
49. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்யப்படும் சட்ட பிரிவு – 356.
50. மாநிலத்தின் பெயரளவு தலைவர் – ஆளுநர்.
51. மாநில அரசின் தலைவர் – ஆளுநர்.
52. ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழி செய்யும் சட்டப்பிரிவு- 163.