9th தமிழ் நூல் வெளி இயல் - 3

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 3.2 மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
நூல் வெளி
• தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
• மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
• மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
• இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்;
• பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம்.
• இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது;
• பௌத்த சமயச் சார்புடையது.
• கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
• முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.
• மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
• சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
• இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
• கூலவாணிகம் (கூலம் - தானியம்) செய்தவர்.
• இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார்.
• சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
• தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
• அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல். (மணிமேகலை 25: 228 - 231)

பாடம் 3.5 திருக்குறள் - திருவள்ளுவர்
நூல் வெளி
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் திருக்குறள்.
• இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல்.
• இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
• தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது.
• இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
• உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
• தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.
• பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.