” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
பாடம் 6.1. வளம் பெருகுக
நூல் வெளி |
---|
• ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
• தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. • இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. • இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன. |
பாடம் 6.2. மழைச்சோறு
நூல் வெளி |
---|
• பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
• இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன். |
பாடம் 6.4. காலம் உடன் வரும்
நூல் வெளி |
---|
• கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர்.
• சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். • சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். • கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார். • அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. |