” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
பாடம் 5.1. திருக்கேதாரம்
நூல் வெளி |
---|
• சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
• இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார். • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. • தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. |
பாடம் 5.2. பாடறிந்து ஒழுகுதல்
நூல் வெளி |
---|
• கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்; • நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. • குறிஞ்சிக்கவி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. • கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே. |