தமிழகம் - ஊரும் பேரும் (7th Old Tamil Book)

தமிழகம் - ஊரும் பேரும் (7th Old Tamil Book)
குறிஞ்சி நில ஊர்கள்: மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி
i. மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
ii. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை
iii. மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று
iv. குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
v. குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
vi. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
vii. குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.

முல்லை நில ஊர்கள்: காடு, புரம், பட்டி, பாடி
i. அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
ii. காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்: ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
i. நிலவளமும், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
ii. ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
iii. மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
iv. குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயரை இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).

நெய்தல் நில ஊர்கள்: பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
i. கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
ii. பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
iii. மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.

திசையும் ஊர்களும்: ஊர், பழஞ்சி
i. நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:
i. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். ii. அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.