TNPSC MODEL TAMIL QUESTION PAPER - 2

TNPSC Executive Officer Grade-4 வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

1.தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
(A) பிள்ளையார்ப் பட்டி
(B) பெருமாள் பட்டி
(C) சுங்குவார்ப் பட்டி
(D) செல்லப்பிராட்டி
2.ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
(A) உ.வே. சாமிநாதன்
(B) ம.பொ. சிவஞானம்
(C) திரு.வி கல்யாண சுந்தரனார்
(D) தாரா பாரதி
3.நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
(A)ஆஸ்பிரின்
(B) கோப்ராக்சின்
(C) குளோராபார்ம்
(D) தைராக்சின்
4. சண்பக பாண்டியன் என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
(A) வங்கிய சேகர பாண்டியன்
(B) கூன்பாண்டியன்
(C) சூடாமணி பாண்டியன்
(D) பொற்கை பாண்டியன்
5. மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
(A) உயிர்
(B) கழுத்து
(C) வாய்
(D) மார்பு
6. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
(A) பெயர்ச்சொல்
(B) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
(C) வினைச்சொல்
(D) உரிச்சொல்
7. தமிழகத்தின் வோடஸ் வொர்த் எனப் புகழப்படுப்பவர்
(A) பாரதிதாசன்
(B) கம்பதாசன்
(C) பூங்குன்றனார்.
(D) வாணிதாசன்
8. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
(A) மாம்பழம்
(B) நாவல் பழம்
(C) கொய்யாப்பழம்
(D) பலாப்பழம்
9. சந்திரன் சுவர்க்கி என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
(A) புகழேந்திப் புலவர்
(B) உமறுப் புலவர்
(C) காளமேகப் புலவர்
(D) அழகிய சொக்கநாதப் புலவர்
10. திருக்குறனை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
(A) உவே சா
(B) பாவாணர்
(C) ஞானப்பிரகாசன்
(D) ஞானக் கூத்தன்
11. “கடம்” என்ற சொல்லின் பொருள்
(A) முகம்
(B) கைகள்
(C) உடம்பு
(D) இடுப்பு
12. அகத்துறுப்பு என்பது யாது
(A) பல்
(B) மனத்தின் உறுப்பு அன்பு
(C)இதயம்
(D) வயிறு
13. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைந்தேரங்கவும் செய்யும்” — என்று கூறிய அறிஞர்.
(A) தேவநேயப் பாவாணர்
(B) பாரதிதாசன்
(C) கால்டுவெல்
(D) ஜி.யு போப்
14.தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
(A) சகலகலா வல்லி மாலை
(B) பூங்கொடி
(C)மணிக்கொடி
(D) உரிமை வேட்கை
15. நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
(A) கட்டடக் கலை
(B) ஓவியக்கலை
(C) சிற்பக்கலை
(D) அழகுக் கலை
16. “கால்டுவெல்“ தமிழகத்தில் வாழ்ந்த இடம்
(A) புளியங்குடி
(B) சிறுகூடல் பட்டி
(C) மாங்குளம்
(D) இடையன்குடி
17. பொருத்துக
திணை பொழுது
(a) குறிஞ்சி 1. ஏற்பாடு
(b) முல்லை 2. நண்பகல்
(c) மருதம் 3.மாவை
(d) நெய்தல் 4. யாமம்
(e) பாலை 5. வைகறை
(a)(b) (c) (d)(e)
(A) 4 3 5 1 2
(B) 2 1 4 5 3
( C) 5 4 1 2 3
(D) 3 1 2 4 5
18.எற்பாடு - என்னும் சொல்லில் ‘பாடு என்பதன் பொருள்
(A) தயார் செய்தல்
(B) பாட்டுப் பாடுதல்
( C) மறையும் நேரம்
(D) துன்பப்படுதல்
19. வயிரமுடைய நெஞ்சு வேணும் எனக் கூறிய கவிஞர்.
(A) பாரதிதாசன்
(B) கவிமணி
( C) பாரதியார்
(D) அழ வள்ளியப்பா
20 ஏங்கொலிநீர் ஞாதை திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது என்ற பாடல் இடம் பெறும் நூல்
(Ā) மாறனலங்காரம்
(B) காரிகை
(C) தண்டியலங்காரம்
(D) நன்னூல்
21. முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) திருவள்ளுவர்
(C) ஒளளைளயார்
(D) திருமுலர்
22. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
(A) கண்ணதாசன
(B) வாணிதாசன்
(C) வண்ணதாசன்
(D) பாரதியார்
23.அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
(A) 1330
(B) 30
(C) 10
(D) 133
24. பாம்பினைப் பற்றி ஆட்டாதே உன்றன் பத்தினிமாகளைப் பழித்துக் காடடாதே எனப் பாடிய சித்தர்.
(A) தேரையர்
(B) பாம்பாட்டிச்சித்தர்
(C) போகர்
(D) கடுவெளிச்சித்தர்.
25. அம்மானை என்பது விளையாடும் விளையாட்டு,
(A) ஆண்கள்
(B) குழந்தைகள்
(C) பெண்கள்
(D) இனைஞர்கள்
26 தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
(A) திருவிக
(B) வெ.இராமலிங்கனார்
(C) பாரதிதாசன்
(D) வே. இராமசாமி
27. களி இன்ப நல்வாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” என்று பாடியவர்
(A) பாரதியார்
(B) கோ.அ.அப்துல் லத்தீப்
(C) முடியரசன்
(D) பாரதிதாசன்
28. காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர்
(A) சர்ச்சில்
(B) புனித ஜார்ஜ்
(C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
(D) இராபர்ட் கிளைவ்
29. கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோர்க்கும் கல்வி தேவை என்று கூறியவர்
(A) அம்பேத்கர்
(B) அயோத்திதாசப் பண்டிதர்
(C) பெரியார்
(D) காந்தியடிகள்
30. அவல் எதிர்ச்சொல்
(A) பள்ளம்
(B) மேடு
(C) அவன்
(D) உணவு
31. பொருத்துக
(a) ஒப்புரவு 1. சான்றாண்மை
(b) சால்பு 2. உதவுதல்
(c) மாற்றார் 3. உரைகல்
(d) கட்டளை 4. பகைவர்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 4 3 2 1
( C) 3 1 4 2
(D) 2 1 4 3
32. சரசுவதி பண்டாரம் என அழைக்கப்படுவது
(A) தமிழ்நூல்
(B) பிற நூல்
( C) புத்தக சாலை
(D) பாடல் வகை
33. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்?
(A) உவே. சாமிநாதர்
(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(C) மறைமலையடிகள்
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
34 தென்னாட்டின் ஜான்சிராணி ‘ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?
(A) வேலுநாச்சியார்
(B) அஞ்சலையம்மாள்
(C) அப்புஜத்தம்மாள்
(D) ருக்குமணி
35. ஆற்றுணா வேண்டுவது இல் இவ்வடியின் பொருள்
(A) கற்றவனுக்குச் சோறு வேண்டா
(B) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
(C) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேணும்
(D) கல்லாதலனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்
36.வருகை என்பது பருவத்தைக் குறிக்கும்.
(A) மூன்றாவது
(B) ஆறாவது
(C) ஐந்தாவது
(D) ஏழாவது
37. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
(A) கிரீஸ்
(B) ரோம்
(C) இத்தாவி
(D) ஏதென்ஸ்
38 ‘விசும்பு என்னும் சொல்லின் பொருள்
(A) ஆகாயம்
(B) துளி
(C) மேகம்
(D) மழைத்துளி
39. பெண்கலெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(A) பாஞ்சாலி சபதம்
(B) மகாபாரதம்
(C) இராமாயணம்
(D) பகவத் கீதை
40. “உரைநடைக் காலம் என அழைக்கப்படும் நூற்றாண்டு
(A) பதினேழாம்
(B) பதினெட்டாம்
(C) பத்தொன்பதாம்
(D) இருபதாம்
41.இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்
(A) குருவை வணங்க கூசி நிற்காதே
(B) நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
(C) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
(D) பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
42. உலாமடல் – என்னும் நூலின் ஆசிரியர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) செயங்கொண்டார்.
(C) கம்பர்
(D) பெருஞ்சித்திரனார்
43. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்
(A) க் ங்
(B) ஞ் ட்
(C) ய் ர்
(D) ப் ம்
44. உவே.சா அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
(A) கால்டுவெல்-கெல்லட்
(B) கமில் சுவலபில் மாக்கமுல்லர்
(C) ஜி.யு போப் சூலியல் விள்சோன்
(D) ஹிப்பாலஸ் பிளைநி
45.கண்ணன் என்பது பகுபதம் ஆகும்
(A) பொருட்பெயர்
(B) சினைப்பெயர்
(C) பண்புப்பெயர்
(D) வினைப் மதிபயர்
46. நான், யான் என்பன
(A) தன்மை ஒருமைப் பெயர்கள்
(B) தன்மைப் பன்மைப் பெயர்கள்
(C) படர்க்கைப் பெயர்கள்
(D) முன்னிலைப் பெயர்கள்
47 உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்
(A) திருக்குறள்
(B) பதிற்றுப்பத்து
(C) புறநானூறு
(D) திருவாசகம்
48. மேரி கியூரி-பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
(A) 1911
(B) 1934
(C) 1903
(D) 1905
49. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
(A) கவிஞர் முத்துலிங்கம்
(B) கவியரசர் கண்ணதாசன்.
(C) கவிஞர் வெ. இராமலிங்கனார்.
(D) கவிஞர் பாரதிதாசன்
50. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
(A) 1956
(B) 1986
(C) 1990
(D) 1927
51. வங்கசிங்கம் என அழைக்கப்படுபவர்
(A) காந்தியடிகள்
(B) ஜவஹர்லால் நேரு
(C) வல்லபாய் பட்டேல்
(D) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
52 எட்டுத்தொகை நூல்களுள் இல்லாதது
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) திருக்குறள்
(D)பதிற்றுப்பத்து
53. நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
(A) உணவு
(B) உடல் நலம்
(C) நூல்கள்
(D) உடற்பயிற்சி
54. பட்டினம், பாக்கம் என்றழைப்பது
(A) மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
(B) வயலை அடுத்து இருக்கும் ஊர்
(C) காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
(D) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
55. தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) 1949 இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்.
(B) 1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்.
(C) 1944 இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
(D) 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்.
56 யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?.
(A) பாரி
(B) பேகன்
(C) அதியமான்
(D) ஓரி
57. உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) அகநானூறு
(C) குறுந்தொகை
(D) புறநானூறு
58. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
(A) பசுவய்யா
(B) க.சச்சிதானந்தன்
(C) சி.சு. செல்லப்பா
(D) ந.பிச்சமூர்த்தி
59. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
(A) பாரதி
(B) தாரா பாரதி
(C) சுத்தானந்த பாரதி
(D) பாரதிதாசன்
60 அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும் பெண்மையை இப்படி புகழ்த்தவர்.
(A) நாமக்கல் கவிஞர்
(B) கவிமணி
(C) பாரதிதாசன்
(D) வைரமுத்து
61. நடுவண் ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது
(A) 1950
(B) 1975
(C) 1978
(D) 1980
62. நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
(A) பாண்டித்துரையார்
(B) மருது பாண்டியர்
(C) முத்துராமலிங்கனார்
(D) திருமலை நாயக்கர்
63. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று இல்லாமை
(A) வாக்குரிமை
(B) பேச்சுரிமை
(C) சொத்துரிமை
(D) எழுத்துரிமை
64. Instinct என்னும் ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ்ச்சொல்
(A) இயற்கை ஒழுங்கு
(B) இயற்கை வனப்பு
(C) இயற்கை அறிவு
(D) இயற்கை கொடை
65. பொருத்துக தாவர உறுப்புப் பெயர்கள்
(a) மூங்கில் 1. தாள்
(b) வேப்பம் 2 கூந்தல்
(c) கமுகம் 3. தழை
(d) நெல் 4. இலை
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 2 1 4 3
( C) 3 2 1 4
(D) 4 3 2 1
66. பொருத்துக
(a) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் 1. கண்ணதாசன்
(b) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் 2 கவிமணி
(c) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் 3. நாமக்கல் கவிஞர்
(d) சபைகளில் தமிழெழுந்து முழங்க வேண்டும் 4. பாரதிதாசன்
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 4 3 1 2
( C) 2 1 4 3
(D) 3 1 2 4
67. பண்டைத் தமிழர் எருதுவிடும் திருவிழாவை எவ்விதம் அழைத்தனர்?
(A) மஞ்சு விரட்டு
(B) சல்லிக்கட்டு
( C) ஏறுதழுவுதல்
(D) எருதுகட்டு
68. ‘வினையே ஆடவர்க்குயிர் எனக் கூறும் நூல்
(A) புறநானூறு
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) நற்றிணை
69 உமர் கய்யாம் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ———— கவிஞர்
(A) வங்கத்துக்
(B) சீனத்துக்
(C) பாரசீகச்
(D) ருஷியக்
70. அறிவுவுண்டாகுக என வாழ்த்தியவர் யார்?
(A) மணிமேகலா தெய்வம்
(B) ஆபுத்திரன்
(C) ஆதிரை
(D) அரவண அடிகள்
71. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல் அறிஞர்
(A) கால்டுவெல்
(B) நோம் சாம்சுகி
(C) கபில் சுவலபில்
(D) மாக்க முல்லர்
72. தமிழரசி குறவஞ்சியை – இயற்றியவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) ஞானியரடிகள்
(C) பட்டுக்கோட்டை கலியான கந்தரனார்
(D) வரத நஞ்சையப்பிள்ளை
73. தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த இவ்வரிகள் இடம் பெற்றுள்ள பாடல்
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) பதிற்றுபத்து
(D) சிலப்பதிகாரம்
74. “நீ மீண்டும் தோனறிய பாரதியடா என்று கல்யாண சுந்தரத்தை பாராட்டியவர்
(A) மருதகாசி
(B) சுரதா
(C) தோழர் ஜீவானந்தம்
(D) உடுமலை நாராயண கவி
75. தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டப் பெற்றவர் யார்?
(A) திருவிக
(B) மறைமலையடிகள்
(C) பெருஞ்சித்திரனார்
(D) முத்துராமலிங்கர்
76 “தன்னே ரிலாத தமிழ்“ இத்தொடர் இடம்பெற்ற நூல்
(A) திருக்குறள்
(B) தொலிகாப்பியம்
(C) தண்டியலங்காரம்
(D) நன்னூல்
77. “உலகின் முதல் இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்“ என்னும் நூல் வெளிவந்த ஆண்டு
(A) 1638
(B) 1642
(C) 1632
(D) 1616
78. நெடும்புனலூள் வெல்லும் முதலை அடும்புனரின்
நீங்கின் அதலன்ப் பிற – இதில் பயின்று வரும் அணி
(A) இரட்டுற மொழிதல் அணி
(B) சொற்பொருட் பின்வரு நிலையணி
(C) தற்குறிப்பேற்ற அணி
(D) பிறிது மொழிதல் அணி
79. ‘பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
(A) பெரியார்
(B) அண்ணா
(C) பாரதியார்
(D) உடுமலை நாராயண கவி
80 “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை”- இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) அறவுரைக் கோவை.
(B) புறநானூறு
(C) நன்னெறி
(D) நற்றிணை
81.“ஐவர் கடமை” யை உணர்த்தும் நூல்
(A) புறநானூறு
(B) இனியவை நாற்பது
(C) ஏலாதி
(D) கார் நாற்பது
82.தாயுமானவரின் மனைவி பெயர்
(A) மட்டுவார்குழலி
(B) கெசவல்லி
(C) கமலாம்பிகை
(D) செல்லம்மாள்
83. “பிரபந்தம்” என்பதன் பொருள்
(A) நன்கு கட்டப்பட்டது
(B) நன்கு எழுதப்பட்டது
(C) நன்கு பின்னப்பட்டது
(D) நன்கு செதுக்கப்பட்டது
84. 17 சரியான தமிழ் எண்ணை எழுதுக.
(A)கO
(B) கரு
(C) கஎ
(D) கஎ
85. நாலடியார் நூலின் ஆசிரியர்
(A) வள்ளுவர்
(B) சுந்தரர்
(C) விளம்பி நாகனார்.
(D) சமண முனிவர்.
86. சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்.
சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்
(A) கவிமணி
(B) நாமக்கல் கவிஞர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
87. பழங்கால பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படுபவை
(A) திரைஇசைப் பாடல்கள்
(B) புதுக்கவிதைகள்
(C) மரபுசார்ந்த பாடல்கள்
(D) நாட்டுப்புறப் பாடல்கள்
88. கலிப்பா ……………. ஓசையைக் கொண்டது.
(A) செப்பல்
(B) அகவல்
(C) தூங்கல்
(D) துள்ளல்
89. பட்டியல் 1 உடன் பட்டியல் I1 ஐப் பொருத்தி இலக்கணக் குறிப்பு எழுதுக:
பட்டியல் 1 பட்டியல் 11
(a) ஈரிவளை 1. பண்புத்தொகை
(b) மாமலை 2. ஏழாம் வேற்றுமைத்தொகை
(c) தண்குடை 3.உரிச்சொல் தொடர்
(d) கையேந்தி 4. வினைத்தொகை
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 3 1 2 4
( C) 2 4 3 1
(D) 4 3 1 2
90. இன்புற்றார் எய்தும் சிறப்பு- என்ற வரி இடம்பெற்ற நூல்
(A) சிறுபஞ்சமூலம்
(B) திருக்குறள்
(C) ஏலாதி
(D) நாலடி
91. குழவி என்பதன் பொருள்
(A) ஒருவகைத் தேனீ
(B) குழந்தை
(C) ஒருவகைக் குருவி
(D) ஒருவகைத் தாவரம்
92 “பிரணவ கேசரி என அன்போடு அழைக்கப்பட்ட தேசியத் தலைவர்
(A) முத்துராமலிங்கர்
(B) இராஜாஜி
(C) காமராசர்
(D) விவேகானந்தர்
93. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது
(A) கார்பன் மோனாக்சைடு
(B) கார்பன் டை சல்பைடு
(C) குளோரோஃபுளுரோ கார்பன்
(D) குளோரோ டெட்ரா கார்பன்
94. வசன நடை கைவந்த வல்லாளர் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர்
(A) ஜி யு போப்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) வீரமாமுனிவர்
(D) ரா.பி. சேதுப்பிள்ளை
95 பொருத்துக
(a) டால்ஸ்டாய் 1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்
(b) பெட்ரண்ட் ரஸ்ஸல் 2. கிரேக்க சிந்தனையாளர்
(c) கிருபாளினி 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
(d) பிளேட்டோ 4. சிந்தனையாளர் கல்வியாளர்
(a)(b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 3 4 1 2
( C) 4 2 3 1
(D) 1 2 3 4
96. நடுத்திராவிட மொழிகளில் ஒன்று
(A) கொரகா
(B) கோயா
( C) குரூக்
(D) மால்தோ
97. இராமசாமிக்குப் பெரியார் என்று பட்டம் வழங்கியவர்
(A) நண்பர்
(B) உறவினா்
( C) தாய்மார்
(D) பெற்றோர்
98. பெரியார் பெண்களுக்கு மிக முக்கியம் என்றவை
1. அறிவு
2. நகை
3. அழகு
4. சுயமரியாதை
(A) 1, 2 சரி
(B) 1, 3 சரி
(C) 2,3 சரி
(D) 1, 4 சரி
99.கோடிட்ட இடங்களை நிரப்புக
பெரியார் தம்வாழ்நாளில் கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்த சமதாயத் தொண்டாற்றினார்.
(A) 8600
(B) 21,400
(C) 10,700
(D) 13,12,000
100. தவறானரைக் கண்டறிக
(A) தமிழகப் பொருள்கள் சீனாவில் விற்கப்பட்டன
(B) சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின
(C) கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது.
(D) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

:

  • tnpsc
  • tnpsc group 4
  • tnpsc group 2
  • tnpsc group 4 syllabus
  • tnpsc group 2 syllabus
  • tnpsc syllabus 2022
  • tnpsc group 4 exam
  • tnpsc login
  • tnpsc photo compressor
  • tnpsc exam date
  • tnpsc exam
  • tnpsc exam 2022
  • tnpsc exam details
  • tnpsc exam apply
  • tnpsc portal
  • tnpsc maths book pdf
  • tnpsc tamil book pdf
  • Tamil Nadu Public Service Commission
  • tnpsc News
  • tnpsc recruitment
  • tnpsc apply oline
  • tnpsc notification
  • www.tnpsc.gov.in latest news
  • tnpsc new syllabus
  • tnpsc notes
  • TNPSC Illakkanam
  • இலக்கணம்
  • TNPSC New Syllabus
  • குரூப்-4 தமிழ் இலக்கணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.